எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

சில எண்ணங்கள் -43

6 பின்னூட்டங்கள்

அதை பார்த்த முதல் நொடி
கண்களுக்கு நம்ப முடியாத
ஆச்சரியம் கலந்த இன்பம்..
ஒரு ஐந்து நிமிடம் கழிந்த
பின்னே அதை பார்க்கும் பொழுது
பேரதிர்ச்சி கலந்த துன்பம்..
சொல்லாமல் நின்று போய்
விட்ட சுவர் கடிகாரம்!!

படம்

எங்கள் பக்கத்து தெருவில்
நடந்த சண்டையை எட்டி
நின்று வேடிக்கை பார்க்கவோ
அவர்கள் எதற்காக சண்டை
இடுகிறார்கள் என்பதை அறியவோ
என்ன பேசி கொள்கிறார்கள் என்பதை
காதை தீட்டி கவனிக்கவோ எனக்கு
துளியும் விருப்பம் இல்லை..
அவ்வளவு நல்லவளா நீ… என்றால்
கண்டிப்பாக இல்லை தான் பின்னே
அவர்கள் தெலுங்கிலே அல்லவா
சண்டை இட்டு கொள்கிறார்கள்!!

படம்

ஒரு பெண் தன்னை தயார்
செய்து வெளியே கிளம்ப
எடுத்து கொள்ளும் நேரம்
அவள் வீட்டில் எத்தனை
முகம் பார்க்கும் கண்ணாடிகள்
இருக்கிறது என்பதை பொறுத்தது!!

படம்

நடுநிசியில் திடுக்கிட்டு விழித்தேன்
பசியில் வீறிட்ட பக்கத்து வீட்டு
குழந்தையின் அழுகுரல் கேட்டு…..
தாய்மை!!

படம்

கண்ட கனவு நிஜமாகும் போது
நான் காண்பது என்ன கனவா.. என்று
வியப்படைந்து சொல்லுவர் சிலர்..
நிஜமாகவே நடந்தாற் போல்
இருந்தது என்று வந்த கனவை
ஆச்சரியமுடன் விவரிப்பர் சிலர்..
இவ்விருவருக்கும் இடையே தோன்றும்
ஒரே ஒரு ஒற்றுமை இருவருமே
நிஜமாகவே கனவு கண்டிருக்கிறார்கள்!!

படம்

Advertisements

6 thoughts on “சில எண்ணங்கள் -43

  1. அதானே…? புரிய மொழியில் சண்டை போடுங்கப்பா…! ஹா… ஹா…

    கண்ணாடி + கனவு – உண்மை…

    தாய்மை – சிறப்பு

    • வணக்கம் சார்! என் பதிவை படித்து, ரசித்து அதற்கு ஒரு பின்னூட்டமும் இட்டு எனக்கு ஒவ்வொரு தடவையும் கணக்கில்லாமல் உற்சாகம் தரும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙂

  2. களிந்த நோ. கழிந்த. குத்து மதிப்பா சொல்றேன். பிரசுரிச்சிடாதீங்க

  3. சொல்லாமல்
    நின்று போய் விட்ட
    சுவர் கடிகாரம்
    இயங்கினால் இன்பம்
    இயங்க மறுத்தால் துன்பம்
    சிறந்த பகிர்வு

    • வணக்கம் சார்! முதல் தடவை ஓடாத கடிகாரத்தை பார்க்கும் பொழுது அது நின்று போனது தெரியாது! ஆஹா.. இன்னும் நேரம் ஆகவில்லையே என்ற மகிழ்ச்சி மேலோங்குகிறது.. அடுத்து ஐந்து நிமிடம் கழித்து பார்க்கும் பொழுது நமக்கு அது சொல்லாமல் கொள்ளாமல் நின்று போனது தெரிந்தவுடன், அய்யையோ நேரம் ஆகி விட்டதே என்ற எண்ணம் துன்பத்தை தருகிறது 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s