எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

சில எண்ணங்கள் -42

14 பின்னூட்டங்கள்

இரண்டுக்கும் இடையே 
ஒரு ஒற்றுமை உண்டு..
இரண்டுமே குளிரை விரட்டி
சூட்டை வரவேற்பவை..
ஹோலி Vs கோழி!!

படம்

கிண்டிய அல்வா வாயில்
கோந்து ஆன கதைகள்
நிறைய கேட்டதுண்டு
வாய் விட்டு சிரித்ததுண்டு
ஆனால் நானே என் கையால்
முதன் முறையாய் சிரமப்பட்டு 
செய்த பீட் ரூட் அல்வாவை
வாயில் வைத்த போது என்னால் 
சிரிக்க முடியவில்லை ஏனெனில்
வாயை திறக்க முடிந்தால் தானே
வாய் விட்டு சிரிப்பதற்கு!!

படம்

டீவீ விளம்பரத்தில் ஒரு
பெண் கையில் வயர் மெஷ்ஷை
பிடித்தபடி சப்பாத்தியை
துளி கூட எண்ணெய் இல்லாமல் 
கும்முனு பூரி போல் எழும்ப செய்து
தட்டில் இடுவதை மிகுந்த
ஏக்கத்துடன் பார்த்த என் கணவர்
சந்தடி சாக்கில் என்னையும்
ஸ்க்ரீனையும் மாறி மாறி நோக்க
அவரை முழுதும் புரிந்தவளாய்
பதில் அளித்தேன்…
கவலைபடாதீர்கள்..
சீக்கிரமே பெண்ணை பேசி 
முடித்து விடலாம்!!

படம்

காத்திருக்கும் அறைகளில்
போடப்படும் ஒன்றோடு ஒன்று
இணைந்த இருக்கைகளில்
ஓரமான இருக்கையில் 
அமர்வதும் இலவசமாக
மானத்தை தண்டோரா 
போட்டு கப்பலில் ஏற்றுவதும்
ஏறக்குறைய ஒன்று தான்!!

படம்

நடு இரவு 2:30 மணிக்கு
விழிப்பு தட்டும் போது
முழுதாய் உறங்காமல்
பாதியில் எழுந்து விட்டோமே
என்ற மனக்குறையை விட
ஆஹா.. இன்னும் ரொம்ப 
நேரம் இருக்கிறது விடிய
என்ற சந்தோஷ எண்ணமே
மேலோங்குகிறது!!

படம்

யாரேனும் ஒருவர்
ஆரஞ்சு பந்து வாங்கி
வருகிறேன் என்று
ஆரஞ்சு பழம் வாங்கி
வந்தால் அவங்கதான்
ஆந்திராகாரர் தெரிஞ்சிகோ!!

படம்

 

நாங்க குடி இருக்கிற
வீட்டுக்கும் ராம்லீலா படத்தில்
வரும் தீபிகா படுகோனுக்கும்
நேற்று மதியத்தில் இருந்து
சரியாக இன்னும் இரண்டரை
மாதம் வரை ஒரு தவிர்க்க
முடியாத ஒற்றுமை உண்டு..

உஸ்………. அப்பா………
இரண்டுமே ரொம்ப ஹாட்!!

 படம்

14 thoughts on “சில எண்ணங்கள் -42

 1. சில உண்மைகள்… + ஆந்திரகாரரை தெரிந்து கொண்டேன்…

 2. கோழியும் ,அல்வாவும் மிகவும் ரசித்தேன். பெண் பேசி முடித்து விட்டீர்களா? ராம் லீலா படத்தில் வரும் படுகோனே எவ்வளவு ஹாட் என்று புரிந்தது.
  அனைத்தும் அசத்தும் எண்ணங்கள்.

  • மிகவும் நன்றி ராஜி மேடம் 🙂 யார் சூப்பரா எண்ணெய் இல்லாத சப்பாத்தி போடுகிரார் என்று ஒரு சுயம்வரம் வைத்து பெண்ணை தேர்ந்தெடுக்கலாம் என்று யோசித்து கொண்டிருக்கிறேன் மேடம் 🙂

 3. / கவலைபடாதீர்கள்..
  சீக்கிரமே பெண்ணை பேசி 
  முடித்து விடலாம்!!/
  முகூர்த்தம் முடிவு செய்தாச்சா

 4. “வாயில் வைத்த போது என்னால்
  சிரிக்க முடியவில்லை ஏனெனில்
  வாயை திறக்க முடிந்தால் தானே
  வாய் விட்டு சிரிப்பதற்கு!!”
  ஹா ஹா சுவைக்கு சுவை சேர்த்திருக்கிறீர்கள்

 5. பீட்ரூட் அல்வா பார்க்க கலர்புல் ஆக இருக்கிறதே! முதலில் பாத்திரத்தில் இருந்து வெளியே வந்ததா, அதைச் சொல்லுங்கள்!

  நடுஇரவில் நானும் உங்களைப் போலத்தான் – எழுந்திருந்தாலும் மணியே பார்க்க மாட்டேன். இழுத்துப் போர்த்திக்கொண்டு படுத்துவிடுவேன்!

  கடைசி இருக்கை பற்றிய உங்கள் எண்ணம் சரியாகப் புரியவில்லையே! ரொம்பவும் யோசிக்கணுமோ?

  • பீட் ரூட் அல்வாவை பாத்திரத்திலேயே ஆற விட்டிருந்தால் அதன் உண்மை முகம் முதலிலேயே தெரிந்து இருக்கும்! ஐயோ பாவம் எங்கள் வீட்டில் உள்ளவர்களின் வாய் மாட்டி கொண்டு விட்டது. ஒரமான இருக்கையில். அமர்ந்து சீ….சா.. ( SeeSaw ) ஆடியதில்லை போல நீங்கள்! நான் நிறைய தடவை ஆடி இருக்கிறேன். ஆனால் ஏதோ முன் ஜென்மத்து புண்ணியம் இதுவரை சீ.. சா.. ஆடி இருக்கைகள் கவிழ்ந்து என் மேல் விழுந்ததில்லை 🙂 உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அம்மா 🙂

 6. மத்தவங்களுக்குத்தானே அல்வா கொடுக்கணும், நீங்களே கொடுத்துகிட்டா இப்படித்தான் ஆகும்.

  ‘இருக்கை’ எண்ணம் மட்டும் புரியவில்லை. மற்றவை வழக்கம்போல் சூப்பர்.

  • வாங்க சித்ரா அக்கா! நீங்கள் சொல்வது உண்மை தான்! அடுத்த தடவை அல்வா செய்து உங்களுக்கு முதலில் கூரியர் செய்து விடுகிறேன்! மூன்று நான்கு இருக்கைகள் சேர்ந்து இருக்கும் போது அத்தனை இருக்கைகளிலும் ஆள் இருக்கும் வரை எந்த பிரச்சனையும் வராது. நாம் ஓர இருக்கையில் அமர்ந்து இருக்கும் போது எதிர்பாராமல் மற்ற இருக்கையில் அமர்ந்து இருப்பவர் எழுந்து விட்டால் நம்ம டப்பா டான்ஸ் ஆடி விடும்.. அதாவது இருக்கைகள் சீ.. சா.. போல் தூக்கி கொண்டு விடும். அப்படியே சீ.. சா.. ஆடா விட்டால் கூட நாம் எதையாவது எடுக்க கீழே குனிந்தால் கூட போதும் நாம் விழுந்து நம் மேல் இருக்கைகள் சரிந்து சத்தமாக நம் மானத்தை கப்பல் ஏற்றிவிடும் 🙂

 7. “நடு இரவு 2:30 மணிக்கு
  விழிப்பு தட்டும் போது
  முழுதாய் உறங்காமல்
  பாதியில் எழுந்து விட்டோமே என்ற
  மனக்குறையை விட
  ஆஹா…
  இன்னும் ரொம்ப நேரம் இருக்கிறது விடிய என்ற
  சந்தோஷ எண்ணமே மேலோங்குகிறது!!” என்ற
  பகிர்வை வரவேற்கிறேன்.

  • பாதி உறக்கத்தில் இருந்து எழுந்து கொள்வது நல்லது இல்லை தான்.. ஆனால் கெட்ட விஷயங்கள் நடக்கும் பொழுதும் எல்லாம் நன்மைக்கே என்று நினைக்க பழகும் போது வாழ்க்கை இனிக்க தொடங்கி விடுகிறது! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார் 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s