எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

சில எண்ணங்கள் -40

12 பின்னூட்டங்கள்

என் ஒருத்திக்கு மட்டும்
தனியே தேனிர் தயாரித்து
அருந்த நான் விருப்பம்
கொள்ளுவதே இல்லை
ஏனெனில் எனக்கு
கறுத்து அடி பிடித்த
பாத்திரங்களை காணவோ
அதனை தேய்த்து தேய்த்து
கைகளை புண்ணாக்கவோ
நெடி தாங்க முடியாமல்
மயங்கி விழவோ
அட கடவுளே.. என்று
மனது தாங்காமல்
அலறவோ நான் ஒரு
போதும் விரும்பியதே இல்லை..
நியாபகமறதி!!

படம்

சிங்கம் போல் கர்ஜிக்கும்
எங்க ப்ரெஸ்டீஜ் குக்கர்
நேற்று பூனை போல்
கொஞ்சியது சகிக்காமல்
என்ன ஏது என்று பதறி
அருகில் சென்று கவனித்த
போது உண்மை விளங்கிற்று..p
பின்னே ப்ரீமியர் வெயிட் இல்ல
தவறுதலாய் போட பட்டிருந்தது!

images (6)

பரத் என்று நான்
என் குட்டி பையனை
விளிக்க அவன் எனக்கு
பதில் அளித்த விதம்
அவன் என்னை முதன்
முதல் அம்மா என்று
அழைத்த தருணத்தை
விட ரொம்பவே இனித்தது..
அவன் சொன்னான்..
‘என்ன செல்லம்..’

mother-kissing-son-clipart

பொய் என்று இருவருக்குமே தெரிந்தும்
மெய்யாய் ஒருவருக்கொருவர் கொஞ்சி
உருகி கொள்ளும் தருணம்..
எப்போதோ அடி பட்டு காயமடைந்து
பின்னர் நன்கு ஆறி தழும்பு கூட
ஏதும் இன்றி இருந்த சுண்டு விரலை
என் முன்னே நீட்டி அம்மா.. வலிக்குது..
என்று ஒவ்வொரு தடவையும்
சிணுங்கி கொஞ்சும் என் குட்டி பையன்!!

mom

ரொம்பவே திரில்லான திகில் படம்
தனியே அமர்ந்து பார்ப்பதும்
பாழுங்கல்லை தனியே நின்று
அகற்றி அதன் அடியில் நோட்டமிடுவது
எல்லாம் ஒன்று தான்..
துணிந்து செயலை ஆரம்பித்து விட்ட
பின்னர் அய்யயோ… இங்கே நெளியுது

அங்கே வளையுது என்று அலறுவது

சுத்த அபத்தம்!

stock-vector-cartoon-animal-eyes-under-big-stone-illustration-of-funny-cartoon-creature-or-animal-character-s-131268710

12 thoughts on “சில எண்ணங்கள் -40

  1. “என்ன செல்லம்…” மிகவும் ரசித்தேன்…

  2. டீ போடும்போது கூடவே நிற்க வேண்டும். அதனால் நான் என் மாட்டுப்பெண்ணைப் போடச் சொல்லிவிடுவேன் (இது எப்படி இருக்கு?)
    குழந்தை கூப்பிட்ட என்ன செல்லம் இனிமையோ இனிமை!
    என்னாலும் தனியாகப் படம் பார்க்க முடியாது.

    • வாங்க ரஞ்சனி அம்மா! உங்கள் பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி! தனியாக எல்லாம் படம் பார்க்காதீர்கள் அம்மா.. துணைக்கு உங்கள் மாட்டு பெண்ணை அழைத்து கொள்ளுங்கள் 🙂

  3. மஹா,
    வீட்டுக்கு வாங்க . நான் டீ போட்டுத் தரேன்.உங்கள் பையன் சொல்லும்,” என்ன செல்லம்” மனதைக் கொள்ளை கொள்ளும் என்பதே உண்மை. பேய் படம் பார்ப்பதே இல்லை. உங்கள் பையன் காட்டும் சுண்டு விரல் அடி எல்லோர் வீட்டிலும் நடப்பது . அதையும் அருமையான கவிதையாக்கி ரசிக்க வைத்து விட்டீர்களே! மொத்தத்தில் உங்கள் எண்ணங்கள் அற்புதம்.

    • வாங்க ராஜி மேடம்..
      முதலில் என் எண்ணங்களை கவிதை
      என்று சொன்னதற்கு என் நன்றிகள்..
      கண்டிப்பாக ஒரு நாள் உங்க வீட்டு
      கதவை தட்டி டீ குடிக்க வருவேன்
      ஒரு ரசிகையா 😉

  4. உங்க மகனின் குறும்புகளைப்பற்றிய எண்ணங்கள் சூப்பர். மாலையில் எனக்கு மட்டுமே டீ போட வேண்டும், அப்போது நான் நினைப்பதை அப்படியே நீங்களும் நினைத்ததாக போட்டதெல்லாம் …. ம்ம்ம்….. எப்படி ! பேய் படமெல்லாம் பார்த்து ரொம்ப நாளாச்சுங்க, எல்லாம் ஒரு பயம்தான். மனசாட்சியைவிட பேய்க்குதான் அதிக பயம்.

    நான்காவதாக உள்ள குட்டிப்பையனின் படத்தைப் பார்த்து பயந்துவிட்டேன். இங்கு அதுமாதிரி விரலைக் காட்டினால் ஏதோ மிக மோசமான கெட்ட வார்த்தையில் திட்டுவதாக அர்த்தம்.

    • வாங்க சித்ரா அக்கா..
      நீங்களும் என்ன மாதிரியே தானா டீ போடும் விஷயத்தில்.. ஹா ஹா ஹா..
      படத்தை மாற்றி விட்டேன் அக்கா! நன்றி தெரியபடுத்தியமைக்கு.. நான் நம்ம
      பசங்க மாதிரியே எல்லாரையும் நினைத்து விட்டேன் 🙂

  5. இயல்பான தருணங்களை அழகான கவிதையாக்கியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.

  6. முதல் அம்மா என்று அழைத்த தருணத்தை விட ரொம்பவே இனித்தது..
    அவன் சொன்னான்.. ‘என்ன செல்லம்..’
    செல்லக்கொஞ்சல் இனிக்கிறது…ரசிக்கவைக்கும் பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s