எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

சில எண்ணங்கள் -39

7 பின்னூட்டங்கள்

காத்திருப்பதும் சுகம் தான்
காதலில் மட்டும் அல்ல 
கதை படிக்கும் போதும் தான்..
ஆர்வக்கோளாறில் பாதி படிக்கும்
போதே அவசரப்பட்டு 
கடைசி அத்தியாயத்தை படித்து
விடும் போது என்னதான் நீங்கள் 
ஆர்வமுடன் எதிர்பார்த்த முடிவு
தெரிந்து போனாலும் அதன் பின்னே
த்ரில் இல்லாமல் போய் விடும்!!

படம்

அம்மா மதியம் சாதத்தோடு
தொட்டு சாப்பிட ஒரு நாள்
காளிப்ளவர் ப்ரை ஒரு நாள்
உருளை ஒரு நாள் வெண்டக்காய்
செய்து குடுக்கரீங்களா..
என்ன ஆச்சு என் பையனுக்கு
திடீர் ஞானோதயம்…
கந்தா கடம்பா கதிர்வேல் முருகா
கார்த்திகை மைந்தா இப்படி பல
பெயர் சொல்லி ஒரே கடவுளை
அழைத்து நன்றி சொல்லுவதற்கு
முன் தோண்டி துறுவி விசாரித்ததில்
உண்மை வெளியே வந்தது…
அவன் மிஸ்ஸு வெறும் தயிர் சாதம்
மட்டும் எப்பவும் கொண்டு வராங்களாம்!!

படம்

 

வீட்டுக்குள் ஒன்றை அனுமதித்ததே பெரிய
விஷயம் இதிலே இப்போ ஜோடி வேறு..
ஒரு இங்கிதம் வேண்டாம்
பட்ட பகல் என்றும் பாராமல்
இவுக ஓடறதும் அவுக துரத்துறதும்
இவுக குதிக்கறதும் என் குட்டி பையன்
பாடம் படிக்காம அவுகளையே எட்டி எட்டி
பாக்குறதும் சீ சீ.. இதென்ன வீடா 
அமியூஸ்மன்ட் பார்க்கா..
டியூப்லைட் பின்னே குடித்தனம் செய்யும்
ஒரு ஜோடி புதுமண மரபல்லிகள்!!

படம்

 

இதற்கு சிரிக்கவா அழுது விடவா தருணம்..
ஆர்தோ டாக்டரிடம் கையில் அடிபட்ட என் முதல்
பையனை காண்பித்து வர எண்ணி அவர் முன்
உட்கார்ந்திருந்த பொழுது அவர் என் முதல் 
பையனையும் இரண்டாவது துறு துறு பையனையும்
மாறி மாறி பார்த்து விட்டு… ‘நியாயமா பார்த்தா 
இந்த பையனுக்கு தான் கையில் அடி பட்டிருக்க
வேண்டும்..’ என்று இங்கேயும் அங்கேயும் குதித்து
கொண்டிருந்த எங்கள் குட்டி பையனை பார்த்து
கையை நீட்டி சுட்டி காட்டிய போது!!

படம்

 

சொன்னா புரியாது
சொல்லாவிட்டால் தெரியாது
கன்னா பின்னாவென வளர்ந்தும்
ஒரு போதும் மரியாது ஏனெனில்
இது ஒரு தலை காதல்!!

படம்

7 thoughts on “சில எண்ணங்கள் -39

  1. கந்தா கடம்பா… கதிர்வேல் முருகா…
    கார்த்திகை மைந்தா…
    இது தகுமா…?

    ஹா… ஹா…

    வாழ்த்துக்கள்…

  2. மிஸ். மாட்டிண்டிங்களா? ஊறுகாயைத் தொட்டுக்கொண்டு சாப்பிட கற்றுக் கொள்ளுங்கோ.
    குட்டிப்பையா உனக்கு த்ருஷ்டி கழிக்கணும்.
    அட பல்லிகளா பல்லை இளிக்காதிங்கோ
    அன்புடன்

  3. காதல் பற்றிச் சில…
    அழகாய் இருக்கு

  4. எல்லா எண்ணங்களுமே சுவையானவை….

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s