எப்படி பேக்கில் குறிப்பிடப்பட்ட
தேதி முடிந்தவுடன் அதனுள்
இருக்கும் பொருட்கள் காலாவதி
ஆகி விடுகின்றதோ அது போல்
2005 வருடத்துக்கு முன்னே
அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்கள்
மார்ச் 31 தேதிக்கு பிறகு செல்லாது
மேலும் வருடமே அச்சடிக்கப்படாத
ரூபாய் நோட்டுக்களும் சேர்ந்தே
காலாவதியாகின்றன….
விரைந்து காலி செய்து விடுவது நலம்!
அணிலின் முதுகில்
இராமர் இட்ட மூன்று
கோடுகள் போல
இந்த பூச்சியின் முதுகில்
ராணி காமிக்ஸ் மாயாவி
முத்திரை பதித்திருப்பாரோ
டவுட்…
கணவனை கண் கண்ட தெய்வமாய்
மதிக்கும் எந்த ஒரு மனைவியின் கணவரே..
நீங்கள் உங்களை அலாதீனாக நினைத்து
கொண்டாலும் தவறில்லை..
உங்கள் மனைவியை ஜாஸ்மின் ஆக
கூட நினைக்க வேண்டும் என்ற
அவசியம் எதுவும் இல்லை…
ஆனால் விளக்கில் அடைபட்டு கூப்பிட்ட
குரலுக்கு ஓடி வரும் பூதமாய்
உங்கள் மனைவியை நடத்தாமல் இருக்கலாமே!!
இருட்டில் நம் கண்ணுக்கு புலப்படும்
பொருட்கள் நம் அப்போதைய
மனநிலையையும் நம் கற்பனை
திறனையும் பிரதிபலிப்பவை!
இதுக்கு ஒரு சாக்கு பை
வாங்குவது எவ்வளவோ தேவலை..
Lotte Choco Pie!
எவரையும் வசீகரிக்க
உரக்க பேசுவதோ
உறக்கம் பிடித்தாற் போல்
பேசுவதோ தவறு
உருக பேசுவதே
என்றென்றும் நிறைவு!
5:20 முப இல் ஜனவரி 24, 2014
முதல் தகவலுக்கு நன்றி…
மற்ற அனைத்தும் அருமை… ரசித்தேன்…
படங்கள் பிரமாதம்…
வாழ்த்துக்கள்…
3:55 முப இல் ஜனவரி 25, 2014
முதன் முதலில் வந்து கமென்ட் செய்பவர் எப்பொழுதும் ஸ்பெசல் தான்! அந்த இடத்தை ரஞ்சனி அம்மா பெற்றிருந்தார் முன்னே, இப்போ நீங்கள் தான்! வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி தனபாலன் சார் 🙂
12:44 முப இல் ஜனவரி 25, 2014
———
இதுக்கு ஒரு சாக்கு பை
வாங்குவது எவ்வளவோ தேவலை..
Lotte Choco Pie!
————-
நான் சொன்னா எங்கங்க கேக்கறான்? 🙂
3:49 முப இல் ஜனவரி 25, 2014
நான் தெரியாமல் ஒரு நாள் யாரோ குடுத்தார்கள் என்று சுவைத்து பார்த்து விட்டேன்! எப்படி தான் அதை குழந்தைகளுக்கு பிடிக்கிறதோ?? ஆச்சரியம் தான்!! நான் அதை ஒரே ஒரு துண்டு சுவைத்து விட்டே அதன் மேல் கவரை எடுத்து பார்த்து அதன் காலாவதியாகும் தேதியை சரி பர்த்தேன்.. அவ்வளவு மோசமானதாக இருந்தது அதன் சுவை 🙂
10:41 முப இல் ஜனவரி 25, 2014
காலாவதி ஆகாமல் போனாலும் அது ஒரு பாடாவதி!
#கவுஜ 🙂
6:05 பிப இல் ஜனவரி 28, 2014
பணத்திற்கும் காலாவதி தேதி குறித்து விட்டார்கள் . நல்லது தான்
வெள்ளை மட்டுமே நீடிக்க முடியும் என்று நம்புவோம். மாயாவி போட்ட மூன்று கோடுகள் அற்புதம்.சாக்கு பைக் கவிதையும், கால் சென்டர் உருகும் குரலும் ரசிக்க வைத்தன.
5:07 முப இல் ஜனவரி 29, 2014
வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி ராஜி மேடம் 🙂
11:49 பிப இல் பிப்ரவரி 3, 2014
“காலாவதியாகின்றதை
விரைந்து காலி செய்து விடுவது நலம்!” என்பது
சிறந்த வழிகாட்டலே!
4:48 முப இல் பிப்ரவரி 7, 2014
வாங்க சார்! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
11:50 பிப இல் பிப்ரவரி 3, 2014
தங்கள் தள முகவரியை வலைப் பதிவர்களின் தமிழ் பக்கங்கள் (http://thamizha.2ya.com) தளத்தில் இணைத்து உதவுங்கள்.