‘ஒளிந்திருந்து இரு விழிகள் அவளை நோட்டமிட்டன’
என்ற வரிகள் நாம் படிக்கும் போது
கொடுக்கும் சுவாரசியத்தை விட
நாம் படிக்கும் புத்தகத்தை எப்படியாவது
எட்டி பார்த்து ஓசியில் படித்த விட துடிக்கும்
பக்கத்து இருக்கைகாரரின் அலையும் விழிகள்
மிக சுவாரசியமானவை!!
ஹலோ.. விஷ்ணு லேதா?
லேது.. மஹாலக்ஷ்மி உந்தி..
But இதி வைகுண்டம் லேது..
??
Wrong Number!
தவறு தம் பக்கம் என்று
முழுமையாய் அறிந்த
பின்னரும் கூட பிறரை
முந்தி குரலை உயர்த்தி
தப்பித்து கொள்ளும்
தந்திரம் மானிடர்களுக்கு
மட்டுமே உரித்தானது!
பொய் என்று தெரிந்தும்
நம்மை நாமே தெரிந்தே
ஏமாற்றி கொண்டு நன்மை
அடையும் ஒரு விஷயம்
கடிகாரத்தை 15 நிமிடம்
வேகமாக ஓட வைப்பது!
வர மிளகாயை வெறுமனே
வாணலியில் வறட்டும் போது
வரட்டு இருமல் வரவில்லை
என்றால் தான் ஆச்சரியம்!!
நிரம்பி வழியும் என்
கிட்சன் சிங்க் கை பார்க்கும்
பொழுதெல்லாம் ஒரு ஐயம்
தவறாது வந்து போகும்
.
.
.
.
நான் நாலு பேருக்கு
சமையல் செய்கிறேனா
இல்லை நாற்பது பேருக்கா!!
அரைஆண்டு தேர்வை
வெற்றிகரமாக முடித்து
விட்டு 99.75 விழுக்காடு
மதிப்பெண்கள் பெற்றிருப்பதை
ஆசையோடு பகிர்ந்து கொண்ட
என் பையனை உச்சி முகர்ந்து
பாராட்டி விட்டு கேட்டேன்..
‘அப்போ உன் நண்பன் பார்தூ எவ்வளவு?’
நொள்ள புத்தி அம்மா
வீட்டுக்கு வருகை தந்த
விருந்தினர் 10 நாள் தங்கி
விட்டு கிளம்பி சென்று விட்டதை
மனது தெளிவாக அறிந்தாலும்
இரண்டொரு நாட்களுக்கு
நம் கைகளுக்கு தெரிவதில்லை
உலை கொதிக்கும் போது
மிகையாகவே அரிசியை களைந்து
போட்டு விடுகின்றது!!
தர்மசங்கடமான சூழ்நிலைகளில் ஒன்று
கடைகுட்டி பையனோடு தெருவில்
நடந்து செல்லும் போது யாரேனும் ஒருவர்
சகட்டு மேனிக்கு ஹச் ஹச்.. என்று
தும்மி விட்டால் திருப்பி அதை அப்படியே
இமிடேட் செய்யும் என் பையனை முறைத்து
பார்த்து கண்டிப்பதை விட்டு விட்டு
நானும் களுக் என்று ஆரம்பித்து
கெக்கே பிக்கே என்று சிரித்துவிடும் போது!!
6:12 முப இல் ஜனவரி 22, 2014
15 நிமிடம் வேகமாக ஓட வைப்பது உண்மை…
வித்தியாசமான சிந்தனைக்கு வாழ்த்துக்கள்…
4:25 முப இல் ஜனவரி 24, 2014
மிக்க நன்றி தனபாலன் சார்! கால தாமத பின்னூட்டத்திற்கு மன்னித்தருளுங்கள் 🙂
6:13 முப இல் ஜனவரி 22, 2014
மின் நூல் பற்றிய தகவல் – உங்களுக்கு உதவலாம் ஐயா:- http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Ethics-and-e-Books.html
4:26 முப இல் ஜனவரி 24, 2014
நல்ல ஒரு தகவல்! பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா!
8:38 முப இல் ஜனவரி 22, 2014
வணக்கம்
சகோதரி
ஒவ்வொரு எண்ணங்களும் மிக அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
4:27 முப இல் ஜனவரி 24, 2014
உங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரா 🙂
10:31 முப இல் ஜனவரி 23, 2014
“பொய் என்று தெரிந்தும்
நம்மை நாமே தெரிந்தே
ஏமாற்றி கொண்டு நன்மை
அடையும் ஒரு விஷயம்
கடிகாரத்தை 15 நிமிடம்
வேகமாக ஓட வைப்பது!” என்றொரு
கண்டுபிடிப்பு!
நாம் காணும் உண்மை!
4:31 முப இல் ஜனவரி 24, 2014
பொய்யிலும் நாம் காணும் ஒரு நன்மை! நன்றி சார்!
11:31 முப இல் ஜனவரி 23, 2014
”…பொய் என்று தெரிந்தும்
நம்மை நாமே தெரிந்தே
ஏமாற்றி கொண்டு நன்மை
அடையும் ஒரு விஷயம்
கடிகாரத்தை 15 நிமிடம்
வேகமாக ஓட வைப்பது!…”
இப்படி அத்தனையும் சுவையாக உள்ளது.
ரசனை தான்!
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
4:37 முப இல் ஜனவரி 24, 2014
ரசித்து சுவைத்து பின்னூட்டம் இட்டு ஊக்கம் அளித்த உங்களுக்கு என் நன்றிகள் சகோதரி 🙂
1:00 பிப இல் ஜனவரி 23, 2014
எல்லாமே அருமை. மஹாலக்ஷ்மி உந்தி.but இதி வைகுண்டமுலேது. அருமை. அன்புடன்
4:38 முப இல் ஜனவரி 24, 2014
உங்கள் வருகை மிக்க மகிழ்ச்சியளித்தது காமாட்சி அம்மா 🙂
1:11 முப இல் ஜனவரி 24, 2014
வழக்கம்போலவே எல்லா எண்ணங்களும் நச்நச்சுன்னு இருக்குங்க. எங்க வீட்டிலும் 15 நிமி அதிகமாகத்தான் ஓடிகிட்டிருக்கு. தற்போது தேவை இல்லைதான், ஆனாலும் இத்தனை வருட பழக்கதோஷத்தில் மாற்ற மனம் வரமாட்டிங்குது.
4:43 முப இல் ஜனவரி 24, 2014
நெடு நாளைய பழக்க வழக்கங்களை மாற்றி கொள்ளுவது என்பது யாருக்குமே சிறிது கடினம் தான்! வருகைக்கு மிக்க நன்றி சித்ரா அக்கா 🙂
12:47 முப இல் ஜனவரி 25, 2014
—-
ஹலோ.. விஷ்ணு லேதா?
லேது.. மஹாலக்ஷ்மி உந்தி..
But இதி வைகுண்டம் லேது..
??
Wrong Number!
—–
யார் இதைச் செய்தது?? நீங்கள்தானா?
3:53 முப இல் ஜனவரி 25, 2014
ஆமா சார்! நானே தான்.. என்ன செய்ய சார், 108 முறை ராங்க் கால் செய்பவரிடம் இப்படி பேசாமல் பிறகு எப்படி பேசுவதாம்! அதன் பின்னே வரவேயில்லை 🙂 மண்டை குழம்பிய கேஸ் என்று நினைத்தாலும் நினைத்திருப்பார். எப்படியாவது நினைத்து விட்டு போகட்டும் நான் சற்று மன நிம்மதியோடு இருக்கிறேன் 🙂
4:02 முப இல் ஜனவரி 25, 2014
😄😄