நம் வாழ்க்கையோ வாழைக்காயோ
யாரொருவர் வாயிலும்
பச்சையாய் விழாதவரையில் நலம்..
விழுந்து விட்டால் நீங்காத கறை
ஏற்பட்டு விடுவது நிச்சயம்!!
எல்லோரும் ஒன்று கூடி குழையட்டும்
அன்பு நெய்யாய் உருகி ஓடட்டும்
உள்ளத்தில் மகிழ்ச்சி வெல்லமாய் கல்கண்டாய் இனிக்கட்டும்
முந்திரி திராட்சையாய் குதூகூலம் நிறையட்டும்
அழகாய் பொங்கட்டும் தங்கள் வீட்டு பொங்கல்
ஆலமரத்தடி இல்ல தான்
தோளில் வெள்ளை துண்டு போடல தான்
வாயில் வெத்தலையை குதப்பி குதப்பி
புளிச் புளிச் என்று துப்பலை தான்
ஆனாலும் என் பசங்க வீட்டில் இருக்கும்
விடுமுறை தினங்களில் காலை எழுந்ததில் இருந்து
இரவு கண் அயரும் வரை 1008 பஞ்சாயத்து
செய்து தீர்ப்பு சொல்லிட்டு தானுங்க இருக்கேன்!!
டேய் டேய்..
ப்ளீஸ் சொல்லுடா..
இன்னிக்கு குறுமா எப்படி இருக்கு..
கொஞ்சம் வித்தியாசமாக செய்தேன்..
.
.
ஓ! இது குறுமாவா அம்மா!
டேய் ரிமோட் எங்கடா வச்சு தொலைச்ச..
ஒரு கால் பண்ணி பாருமா..
???
ஒரு ஆறு ஏழு மணி நேரம்
தூங்கி எழுவதற்குள் திரும்பவும்
புறப்பட்ட இடத்திலேயே வந்து
நிற்பது போல் ஒரு பிரமை..
வீட்டு வேலைகள்!!
நாக்கில தேன் தடவி
பேசறதெல்லாம் பெரிய
விஷயமே இல்ல..
அந்த தேன் ஆனது
எறும்பு கூட விரும்பாத
கலப்படம் சிறிதும் இல்லாத
உண்மையானதாய் இருப்பது
தான் மிக பெரியதொரு விஷயம்!
கிளி பொம்மை விற்பவனிடம்
பேரம் பேசி வாங்குவதற்கு
முன் ‘சொத்தை’ எதுவும் இல்லையே
என்று கேட்டறிந்து தன் ஐயம்
முழுதும் தீர்ந்த பின்னரே
அதை வாங்கி தன் கூடையில்
போட்டு கொண்டாள் காய்கறிகாரி!!
பசி தாங்க மாட்டாமல்
வீல் என்று அலறிய
குழந்தையை கண்டு
மனம் பொறுக்கமாட்டாமல்
அப்பொழுது தான் வடித்த
சோற்றை ஒரு கரண்டி
எடுத்து பருப்பும் நெய்யும்
விட்டு பிசைய முற்படும்
போது சூடு தாங்கமாட்டாமல்
ஆ வென்று அலறிய அம்மாவை
பார்த்து அழுகை நிறுத்தி
விட்டு புரியாமல் வேடிக்கை
பார்த்தது குழந்தை!!
5:09 முப இல் ஜனவரி 17, 2014
ஹா… ஹா… குருமா சூப்பர்…!
எண்ணங்கள் தொடர வாழ்த்துக்கள்…
6:10 முப இல் ஜனவரி 17, 2014
ஒரு குறிப்பிட்ட நேரம் தூங்கி எழுந்த பின் திரும்பவும் அதே வேலைகள் அணிவகுக்கும். ரஸித்தேன். அன்புடன்
5:18 முப இல் ஜனவரி 18, 2014
உங்கள் வருகையும் கருத்தும் மிகுந்த மகிழ்ச்சி அளித்தது காமாட்சி அம்மா 🙂
3:07 பிப இல் ஜனவரி 17, 2014
சகோதரி மஹாலக்ஷ்மி விஜயன்,
கவிதை உங்களுக்கு
மிக இயற்கையாகவே வருகிறது.
கவிதை என்றால் கற்பனை என்பார்கள்.
ஆனால் உங்கள் கவிதைகள் நிஜத்தையே
சொல்கின்றன..!
தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.
எல்லா நலமும் பெற வாழ்த்துக்கள்.
-காவிரிமைந்தன்
5:14 முப இல் ஜனவரி 18, 2014
வணக்கம் சகோதரர் காவிரி மைந்தன் அவர்களே,
உங்கள் பின்னூட்டம் கண்டு மனம் மகிழ்ந்தேன். ‘உங்களுக்கு யாரிடம் ஏதேனும் பிடித்திருந்தால் அதை அவர்களுக்கு தெரியபடுத்துங்கள்’ என்று நீங்கள் ஒரு பதிவில் சொன்னது என் மனதில் ஆழமாய் பதிந்து விட்டது. உங்களுடைய இந்த பின்னூட்டமும் அதையே தான் பறைசாற்றுகிறது.. மிகுந்த ஊக்கம் பெற்றது போல் இருக்கிறது. நன்றி 🙂
5:16 முப இல் ஜனவரி 18, 2014
பதிவை படித்து, ரசித்து சிரித்ததற்கு என் நன்றிகள் தனபாலன் சார் 🙂
10:07 முப இல் ஜனவரி 18, 2014
வணக்கம்
சகோதரி
ஒவ்வொரு எண்ணங்களும்… சிறக்க வாழ்த்துக்கள்…
கவிதையாக என்பக்கம் வாருங்கள்(நெஞ்சைத் தழுவினாய் பின்பு என் கண்ணீரைத் தழுவினாய்)வாருங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
4:53 முப இல் ஜனவரி 20, 2014
மிக்க நன்றி சகோதரா! உங்கள் பக்கத்துக்கு கண்டிப்பாக வருகிறேன் 🙂
8:00 முப இல் ஜனவரி 19, 2014
நீங்கள் பஞ்சாயத்து பண்ணும் விதம் அலாதியாக இருக்கிறதே! உங்கள் பிள்ளைகள் ‘ தீர்ப்பை மாத்தி சொல்லு ‘ என்று மிரட்டவில்லையா?
காலை எழுந்ததும் வரிசையாக் நிற்கும் வேலைகள் பயமுறுத்துவதையும் மகாவின் கைவண்ணத்தில் கவிதை ஆனதே! கிளியும், தேனும், அழுகையை நிறுத்தும் குழந்தையும் உங்கள் கவிதை எனும் கேமிராவினால் அழகான படமானது.
4:52 முப இல் ஜனவரி 20, 2014
ராஜி மேடம்,
ஒவ்வொன்றையும் ரசித்து நீங்கள் இடும் பின்னூட்டமே நான் ரசித்து படிக்கும் கவிதை! நன்றி 🙂
10:13 முப இல் ஜனவரி 23, 2014
” ‘ஆ’ வென்று அலறிய அம்மாவைப் பார்த்து
அழுகையை நிறுத்தி விட்டு
புரியாமல் வேடிக்கை பார்த்தது
குழந்தை!! ” என
அழகாகச் சொன்னீர்கள்
பருப்பும் நெய்யும் எடுத்து
சோற்றோடு பிசைவதை…
4:30 முப இல் ஜனவரி 24, 2014
எல்லாம் சொந்த அனுபவம் தான் சார் 🙂 வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி சார்!
1:17 முப இல் ஜனவரி 24, 2014
இன்றைய எண்ணங்களும் அருமை. கறை, நாட்டாமை, வீட்டுவேலை, காய்கறிகாரர், தேன், அழுத குழந்தை என எல்லாமும் சூப்பர்.
4:45 முப இல் ஜனவரி 24, 2014
நன்றி நன்றி சித்ரா அக்கா 🙂
2:46 பிப இல் பிப்ரவரி 6, 2014
கறையில் தொடங்கி, கையில் பட்ட சூடு வரைக்கும் அத்தனையும் ரசிக்கவைத்தது.
இடையில், அந்த ரிமோட், அதுக்கும் ஒரு ரிங்டோன் இருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும் என்பது எங்க வீட்டிலும் அடிக்கடி பேசப்படுகிற விஷயம் 🙂
4:47 முப இல் பிப்ரவரி 7, 2014
வாங்க வாங்க.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! நீங்க சொல்லுர மாதிரி ரிமோட் என்ன எல்லாத்துக்கும் ரிங்க்டோன் இருந்தா நல்லா தாங்க இருக்கும் 🙂