ஒரே சத்தம் உள்ள இரு வார்த்தைகள்
ஆனால் அர்த்தமும் எழுத்துக்களும்
வெவ்வேறு என்றால் அது ஹோமோபோனு..
வாங்க நினைக்கும் பழைய வீடு
பற்றி இருவர் இரு விதமாக பேசினால்
சத்தம் போடாம வாங்கி போட்டு
ஒரு ஹோமம் பண்ணு…
இன்று ஜுஸ்ட் மிஸ்ஸு
இல்லையேல் முன் நடந்து
சென்ற திருவாளர் வாயில்
இருந்து சுழன்று வந்த
எச்சில் என் மீது பட்டு நான்
மூடு அவுட் ஆகி இருக்ககூடும்!!
ஒரு வாய் சப்பாத்திய
எவ்வளவு நேரம் வாயிலேயே
வெச்சிட்டு இருப்ப அது என்ன
பபிள்கம்மா.. முழுங்குடா..
கரெக்டா சொன்னீங்கம்மா
பபிள்கம் மாதிரி தான் இருக்கு
தூ..நு துப்பிடட்டா..
??
பளீர் என்று அடித்த அடியில்
நேற்று தலையெல்லாம் ஒரே பெயின்
இன்று தொண்டையெல்லம் ஒரே பெயின்
சரியா தான்யா வெச்சிருக்காங்க
பெயர் ‘பெய்ன்’ட் என்று!!
இன்று என் வீட்டுக்கு வரும்
எந்த ஒரு போன் காலை
நான் எடுத்து பேசும் போது
கண்டிப்பாக போன் செய்தவர்
கேட்பார் ‘ தம்பி அம்மா வீட்டில்
இருந்தால் கொஞ்சம் குடுப்பா..’
தொண்டை கரகரப்பு!!
5:30 முப இல் ஜனவரி 10, 2014
இருமல் மருந்து வாங்க செல்ல வேண்டும்…!
5:37 முப இல் ஜனவரி 10, 2014
வாங்க மின்னல் வேக தனபாலன் சார்,
இன்னும் இருமல் ஆரம்பிக்க வில்லை! மருந்து கண்டிப்பாக எடுத்து கொள்வேன்.. நன்றி சார் 🙂
6:00 முப இல் ஜனவரி 12, 2014
எல்லா ஹாஸ்யத்தையும் வெகுவாக ரஸித்தேன்.ஹோமம்,பபிள்கம்,பெயின்ட் என எல்லாமே ரஸித்தேன். அன்புடன்
6:30 முப இல் ஜனவரி 14, 2014
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் 🙂
10:33 முப இல் ஜனவரி 12, 2014
சிறந்த கருத்துப் பகிர்வு
தங்களுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!
6:30 முப இல் ஜனவரி 14, 2014
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் 🙂
5:34 பிப இல் ஜனவரி 13, 2014
உங்களுடைய எண்ணங்களை முக நூலில் படித்து சிரித்தேன். அதிலும் ஒருவர் பெயின் என்பதை பேண்(lice) என்று புரிந்து கொண்டதாக எழுதியிருந்தாரே , அது கூடுதல் நகைச்சுவை மஹா
உங்கள் எண்ணங்கள் எப்பொழுதும் போல் அசத்தல்..
6:28 முப இல் ஜனவரி 14, 2014
நன்றி ராஜி மேடம்! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் 🙂