எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

கெமிஸ்டிரி மேலே கெமிஸ்டிரி

17 பின்னூட்டங்கள்

Image
கெமிஸ்டிரி சரியா தாங்க பெயர் வைத்து இருக்கிறார்கள், பெயரிலேயே Mystery இருக்குது பாருங்க! முதன் முதலில் கெமிஸ்டிரிக்கு என்று பாட புத்தகம் குடுத்தது எட்டாம் வகுப்பில் என்று நினைக்கிரேன்.. சிறு வயதில் கெமிஸ்டிரி பற்றி சரியாக அறியா பருவத்தில் கலர் கலர் கனவுகள் கண்டதுண்டு! இந்த கையில் ஒரு கலர் குடுவை, அந்த கையில் ஒரு கலர் குடுவை, மாத்தி மாத்தி டீ ஆத்துவது போல் எல்லாம் வருவதுண்டு! ஆனா எட்டாம் வகுப்பு ஆரம்பித்த கொஞ்ச நாட்களிளேயே அத்தகைய கனுவுகள் சுக்கு நூறாக உடைந்து போயின!

பள்ளி செல்லும் காலங்களில் வகுப்பு கால அட்டவணையை பார்த்தலே பிடிக்காது இதிலே இந்த PeriodicTable மட்டும் எப்படி புடிக்கும்! எட்டாம் வகுப்பு ஆரம்பித்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை இந்த Periodic டேபிளை சுத்தி சுத்தியே படிக்க வேண்டும் என்ற நினைப்பே சிறிது தலையை சுத்த வைத்தது! போதாகுறைக்கு என் வகுப்புக்கு கெமிஸ்டிரி பாடம் எடுத்த ஆசிரியைக்கு என்னை கண்டாலே பிடிக்காது! அதனாலேயோ என்னவோ எனக்கும் கெமிஸ்டிரி பாடம் வேப்பங்காயாய் கசந்தது!

கெமிஸ்டிரி ஆசிரியை மிகவும் கண்டிப்பானவர். அவர் அடிக்கடி என்னை திட்டும் வாக்கியங்களில் ஒன்று, ‘ உனக்கு ஒவ்வொரு செல்லிலேயும் கொழுப்பு இருக்கு’ என்று! அப்படி என்றால் என்ன? எனக்கு கடைசி வரை புரிந்ததில்லை. புரிந்து கொள்ள முயற்சி எடுத்ததும் இல்லை! புரிந்தால் தானே இந்த கெமிஸ்டிரியை படிப்பதற்க்கு, இல்லை ஆசிரியையாவது சிறிது ஆர்வம் ஏற்படும் வண்ணம் பாடத்தை கையாள வேண்டும்! இரண்டுமே கடைசி வரை நடக்க வில்லை! அவர் என்னை ஒவ்வொரு வகுப்பிலேயும் எழுப்பி விட்டு வினாக்கள் அடுக்கி என் மானத்தையும் கப்பல் கப்பலாக ஏற்றினார்..

முதலில் சிறிது கஷ்டமாக இருந்தாலும் பிறகு அதுவே சிறிது பழகி போனது! அவர் ஓயாது என்னை வையும் போது அவருடைய உதடுகள் ஏனோ எனக்கு Disney Donald Duck ஐ அடிக்கடி நியாபகபடுத்தும். புரியமலேயே படித்து அதே ஆசிரியை துணையுடனே பத்தாம் வகுப்பு வந்தாயிற்று! கெமிஸ்டிரி பாடம் புடிக்காமல் போனதில் இன்னொரு தீய பழக்கம் எனக்கு புதிதாய் வந்தது! அது என்னவெனில் சாய்ஸ் விட்டு படிப்பது! கெமிஸ்டிரியின் பிரிவுகளான Physicalகெமிஸ்டிரியும், InOrganic கெமிஸ்டிரியும் ஓரளவுக்கு படித்தாலும் இந்த Organicகெமிஸ்டிரியை ஆத்துள வெள்ளம் அடிச்சிட்டு போட்டும் என்கிற அளவுக்கு மனம் வெறுத்து விட்டு விட்டேன்!

Organic மேல் மட்டும் ஏன் அப்படி ஒரு வெறுப்பு, சும்மாவாங்க எந்த பக்கத்த திருப்பினாலும் இந்த CH ஆங்காங்கே எழுதி எழுதி கொம்பு கொம்பாக வரைந்து இருப்பார்கள்!! இப்படி எத்தனை எத்தனை கொம்புகள் டிசைன் டிசைனா, ஒத்த கொம்பு, ரெட்டை கொம்பு அப்புறம் முக்கொம்பு அப்பா..முடியல! அரையாண்டு தேர்வு முடிந்து பேப்பர் திருத்தி எடுத்து வந்தார் ஆசிரியர்! என் பேப்பரை பார்த்து வெறுத்து போய், திட்டி தீர்த்த பிறகும் சும்மா விடவில்லை அவர், வாழ்க்கையில் முதன் முறையாய் Imposition எழுதி விட்டு வர வேண்டும் என ஆணை பிறப்பித்தார்! அதுவும் இரண்டு தடவை மூன்று தடவை இல்லை 25 தடவை கெமிஸ்டிரி பரிட்சை தாளை எழுதி வர உத்தரவிட்டார்!

நானும் அவரின் ஆணைக்கு கட்டுபட்டு மாங்கு மாங்கென்று 10 தடவை எழுதி விட்டேன்! அதுக்கு மேல முடியல, சிறிது கிறுக்கு புடித்தது போல் ஆனது எனது மனது! ஒழுங்காக எழுதி கொண்டிருந்த கை கிறுக்கி தள்ளியது! பயமற்று போனது மனது! ஆனது ஆவட்டும் என்று மனதினுள் தைரியம் பிறந்தது! முடிந்த வரை எழுதியதை எடுத்து கொண்டு வகுப்பறை சென்றேன்! என்னோடு சேர்த்து என் வகுப்பில் படித்த நாலைந்து பசங்களும் இதே தண்டனையை பெற்றிருந்தனர். அவற்றுள் ஒரு பையன் கூட Imposition எழுதி விட்டு வர வில்லை! அவர்களை எல்லாம் வகுப்பறை வெளியே முட்டி போட வைத்தார்! நான் எழுதி கொண்டு வந்திருந்ததை நம்ப முடியாமல் எடுத்து பார்த்து விட்டு ஒரு சிறிது புரட்டியும் பார்த்தார்! நல்ல வேலை கடைசி வரை பார்க்க வில்லை, ஒரு பத்து தடவைக்கு மேல் எழுதி இருந்ததை பார்த்தால் அன்று என் டப்பா டான்ஸ் ஆடி இருக்கும்! அன்று சிங்கத்தின் வாய் வரை சென்று உயிர் பிழைத்த கதை தான்!!
கெமிஸ்டிரி லேபில் நடந்த ஒரு சம்பவத்தை மறக்கவே முடியாது! ஒரு சால்ட் கொடுத்து கண்டு பிடிக்க சொல்லி இருந்தார்கள்! அன்று என் கெட்ட நேரம் நல்ல ஜலதோஷம்! மூக்கினால் எந்த ஒரு வாசனையும் அறிய முடியவில்லை! எனக்கு கண்டு பிடிக்க சொல்லி குடுத்திருந்த உப்பு ஒரு குறிப்பிட்ட அமிலத்தோடு கலக்கும் போது உடைந்து கெட்டு போன முட்டை போல நாற்றமெடுக்கும்! அந்த வாசனையை கொண்டு கண்டு பிடிக்க வேண்டும்! நான் எல்லாம் சரியாக தான் செய்தேன், லேப் முழுவதும் அந்த நாற்றம் அடித்தது! எனக்கு தான் மூக்கும் சரி இல்லையே, கரெக்டா தப்பான ஒரு உப்பின் பெயரை சொன்னேன்! சும்மாவே அந்த ஆசிரியைக்கு என்னை பிடிக்காது, நன்கு கன்னாபின்னாவென்று திட்டி தீர்த்தார்! உனக்கு பொறுமை கிடையாது எல்லாவற்றிலேயும் அவசரம் என்று கத்திய அவருக்கு தெரியாது குற்றம் செய்தது என் மூக்கு என்று!
இப்படியாக ஒரு வழியாய் பத்தாம் வகுப்பு பாஸ் செய்தாயிற்று! அடுத்தும் அதே கெமிஸ்டிரி, அதே Periodic Table, அதே Physical Properties, chemical properties, Inorganic, Organic.. வேறு வழி இல்லை படித்து தான் ஆக வேண்டும்! ஆனால் இந்த முறை அதே ஆசிரியை அல்ல, ஒரு ஆசிரியர்! அவர் பெயர் S.A.Subramanian! முருகரே என் துயர் துடைக்க வந்தது போல் இருந்தது! நல்ல ஒரு சிரித்த முகம், அருமையாக தயாரித்த நோட்ஸ் என்று முதல் வகுப்பிலேயே கலக்கி விட்டார்! சொன்னா நம்ப மாட்டீங்க, நான் முதன் முறையாய் கெமிஸ்டிரி வகுப்பு முழுவதும் தூங்காமல் வகுப்பை கவனித்தேன்! முதன் முறையாய் சொல்லி குடுத்த பாடம் முழுதும் புரிந்தது! இதற்கு தானே இத்தனை வருடம் சிரமபட்டேன்!

நான் கெமிஸ்டிரியை ஆர்வமுடன் படிக்க ஆரம்பித்தேன்! புடிக்கவே புடிக்காத Organicகெமிஸ்டிரி இப்போ மனதுக்கு புடித்த பாடம் ஆயிற்று! கெமிஸ்டிரி ஆசிரியரை எவ்வளவுக்கு எவ்வளவு பிடித்ததோ, அவ்வளவுக்கு அவ்வளவு கெமிஸ்டிரி பிடித்து போனது! ஆமாங்க நிஜமாவே கெமிஸ்டிரி மேலே கெமிஸ்டிரி வந்தது! இந்த பதிவு எனக்கு பிடிக்காத கெமிஸ்டிரியை பிடிக்க வைத்த திரு.S.A.Subramanian சாருக்கு அர்ப்பணம்!

17 thoughts on “கெமிஸ்டிரி மேலே கெமிஸ்டிரி

  1. கெமிஸ்ட்ரி என்றுத் தலைப்பில் பார்த்ததுமே ஓடி வந்து விட்டேன் மஹா. எனக்கு மிகவும் பிடித்த பாடம் கெமிஸ்ட்ரி . அதுவும் organic chemistry அல்வா சாபிடுவது போல . Carbolic acids பற்றிப் படிப்பதில் தீராத ஆர்வம் இருந்தது எனக்கு. நீங்கள் சொல்லும் சால்ட் sulphide salt என்று சொல்லும் அளவுக்கு நினைவிருக்கிறது .என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் .அத்தனை ஆர்வமிருந்தது, இருக்கிறது இன்னும். படித்து முடித்து கிட்டத்தட்ட முப்பந்தைந்து வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் கெமிஸ்ட்ரி மேலிருக்கும் காதல் எள்ளளவும் குறையவில்லை. . .
    இன்றும் என் பேரனுடன் நான் இதையெல்லாம் refresh செய்து கொள்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

    எனக்கு கெமிஸ்ட்ரி மேல் இத்தனை ஆர்வம் உண்டாக்கிய ஆசிரியை திருமதி கமலா அவர்களை அன்புடன், நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன்.
    இத்தனையையும் நினைவு படுத்தி என்னை என் கல்லூரி லேபிற்கு அழைத்து சென்று விட்ட உங்களுக்கு ஸ்பெஷல் நன்றி.
    போரடித்து விட்டேனோ………..

    • உங்கள் பின்னூட்டம் எனக்கு ஊட்டம் மட்டுமே அளிக்கும் கண்டிப்பாக போர் அடிக்காது ராஜி மேடம்! உங்களுக்கும் 35 வருடங்களுக்கு முன்னரே கெமிஸ்டிரி பாடத்தின் மேல் கெமிஸ்டிரி சூப்பராக வொர்க் அவுட் ஆகி இருந்தது கேட்டு நிஜமாவே சந்தோஷமாக இருந்தது! உங்கள் வார்த்தைகளில் அது பிரதிபலித்தது! ஒரு ஸ்கூல் போகும் சிறுவயது பெண்ணின் உற்சாகம் உங்கள் வார்த்தைகளில் கண்டேன்! உங்கள் வருகைக்கும், உங்கள் மனதில் இருந்து குதித்து கொண்டு வெளியேறிய உற்சாகமான கருத்துக்கும் மிக்க நன்றி ராஜி மேடம் 🙂

  2. ஆஹா…! இதுவல்லவோ கெமிஸ்ட்ரி…!

    வாழ்த்துக்கள்…

    • சுட சுட பரிமாறி விட்டு எப்படி இருக்கிறது என்று கேட்பதற்கு முன்னரே ஆஹா அடடா சூப்பர் என்று சுவைத்தவர் சொன்னால் அதன் சந்தோஷமே தனி தான்! மிக்க நன்றி தனபாலன் சார் 🙂

  3. அச்சச்சோ! எனக்கு கணிதம், உங்களுக்கு கெமிஸ்ட்ரியா?
    பள்ளிநாட்களில் சாய்ஸ் என்பது எல்லோருக்கும் கிடைத்த வரப்பிரசாதம் ஆயிற்றே!
    நாங்கள் எல்லாம் எங்கள் காலத்தில் இதையெல்லாம் சேர்த்து விஞ்ஞானம் என்று படித்தோம், அப்பாடி தப்பித்தோம்!

    நகைச்சுவையுடன் அருமையாக எழுதியிருக்கிறீர்கள், மஹா!
    சுப்ரமணியன் ஸார் வந்ததில் நகைச்சுவை போய்விட்டது!

    • வாங்க ரஞ்சனி அம்மா!
      இன்றளவும் என் மனதில் நான் உயர்வாய் நினைக்கும் ஒரு ஆசிரியர் தான் திரு.சுப்பிரமணியன் சார்! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அம்மா 🙂

  4. சூப்பரா எழுதறீங்களே, சபாஷ்! இன்று தான் உங்கள் தளத்திற்கு வந்தேன். பலநாள் இடுகைகளை ஒன்றாகப் படித்தேன். சுவையான கவிதைகள். வாழ்த்துக்கள்!

  5. சிறந்த கருத்துப் பகிர்வு

  6. ஆசிரியர்களாலேயே நம் ஆர்வங்கள் நிர்ணயிக்கப்படுகின்றது என்பது உண்மை. முன்பே ஒரு பதிவர் சொன்னபடி எனக்கும் ஆர்கேனிக் கெமிஸ்ட்ரி மிகவும் பிடிக்கும். அதற்குக் காரணம் பத்தாம் வகுப்பு விடுமுறையில் எனக்கு கெமிஸ்ட்ரி சொல்லித் தந்த திரு. சுவாமி நாதன் சார்தான்… அவர் எளிதில் எப்படி equation solve செய்வதை சொல்லித்தந்தது என் மகன் ப்ளஸ் டூ படிக்கும் வரை கூட ஞாபகத்தில் இருந்ததென்றால் …..ஆனால் என்னை விட்டு பிய்த்துக்கொண்டு ஓடியது பிஸிக்ஸ்… அதனை எடுத்த ஆசிரியை என்ன எடுத்தார் என்பது அவர்களுக்கே வெளிச்சம்..இன்றும் பிஸிக்ஸ் படித்தவர்களை பார்த்தால் பெரும் அறிவாளிகள் எனக் கொள்வேன்….

    • வாங்க மேடம்!
      முதலில் வருகைக்கு நன்றி!
      ஒரு பாடத்தின் மீது ஆர்வம் வருவதும், சுத்தமாக ஆர்வம் இல்லாமல் போவதும் அந்தந்த பாடத்துக்கு ஆசிரியர் அமைவது பொறுத்து தான்! நன்றி 🙂

  7. அடக் கடவுளே! எனக்கு மதமட்டிக்குக்கு இப்படி ஓரு ஆசிரியர் வராமலே போய்விட்டாரே!
    புரியாத பாடம் மதமட்டிக்.
    நல்ல பதிவு .
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

  8. இனிய புத்தாண்டு நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

  9. ஆர்கானிக் கெமிஸ்ட்ரி எனக்கு அத்துபடி… ஆனால் கணிதம் தான் கண்ணைக் கட்டி காட்டில் விடுவதைப் போல… 🙂 🙂

    புதிய பறவை சினிமாவிற்கும், கணிதத்திற்கும் சம்மந்தம் உண்டா? உண்டே… இதோ… கோபாலும், கணிதத் தேர்வும்… http://wp.me/p5gvcj-aD 🙂 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s