வஞ்ச புகழ்ச்சி யாவரும் அறிவர்..
வஞ்ச அக்கறை யாரும் அறிந்ததுண்டோ?
அதிகாலை நேரம் துகில் கலைய மறுத்த
பையனை அரும்பாடுபட்டு எழுப்பி
பின் ஒருவாறு குளியலறை அனுப்பி
அவன் குளித்து முடியும் வரை பொறுத்திருந்து
பின் அவனுடைய ஈரத் தலையை துடைத்து
விடுகிரேன் என்ற பெயரில் தலையை
துண்டால் நற நற.. வென துடைத்து
அவன் மூளைக்கு செல்லும் ரத்த
ஓட்டத்தை அதிகரித்து புத்துணர்ச்சி
அளித்ததோடு மட்டுமல்லாமல் என்னுள்ளே
பொருமி கொண்டிருக்கும் கோபமும்
கத்தி தீர்க்காமல் சாந்தமாய் வெளியேறவும்
வழி வகுக்கிறது!!
கணவர் செய்யும்
மன்னிக்கவே முடியாத
குற்றங்களில் ஒன்று..
.
.
.
சீப்பா கிடைத்தது
என்ற ஒரே ஒரு
காரணத்துக்காக
2 கிலோ மூன்று கிலோ
ஏதேனும் ஒரு காய்கறியை
தன் சிறிய குடும்பத்துக்காக
வாங்கி வந்து குவிப்பது!!
காதல் பொங்கி வழிந்தது!!
.
.
.
.
.
குழம்பு கூட்டு பொரியல்
பக்காவா ரெடி பண்ணிட்டு
சோறு பொங்க நான் மறந்து
விட்ட போதிலும் ஆங்கார
பசியிலும் பத்து நிமிடம்
கோபம் பொங்காமல் பொறுமை
காத்த அன்பு கணவர் மேல்
மேல் இருந்து படிக்கவும்..
நல்ல உச்சி வெயிலில்
கதவை திறந்து பார்த்து
விட்டு யாரு இங்க வெட்டியா
லைட்ட போட்டு வெச்சிருக்கா
என்று அவசர அவசரமா
ப்ரிஜ் உள்ளே அதை அணைப்பதற்க்கு
ஸ்விட்சை தேடுனீங்க என்றால்
பெருமை பட்டு கொள்ளுங்கள்
நீங்க தான் உண்மையான
மின் சிக்கனவாதி!!
12:09 பிப இல் திசெம்பர் 20, 2013
ரசிக்கிறது புரிகிறது…
வாழ்த்துக்கள்….
5:15 முப இல் திசெம்பர் 21, 2013
பதிவை படித்து ரசித்ததை எனக்கு தெரியப்படுத்தியதற்கு என் மனமார்ந்த நன்றிகள் தனபாலன் சார் 🙂
4:28 பிப இல் திசெம்பர் 20, 2013
வணக்கம்
சகோதரி
தங்களின் எண்ணம் போல எழுதிய எண்ணங்களும் சிறப்பு..வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
5:19 முப இல் திசெம்பர் 21, 2013
உங்கள் இதயம் கனிந்த பாராட்டுக்கு மிக்க நன்றி சகோதரா 🙂
5:20 பிப இல் திசெம்பர் 20, 2013
கணவர் மேல் பொங்கி வழியும் உங்கள் காதல் புரிகிறது. பையன் தலையை துடிப்பதன் ரகசியமும் புரிந்தது.மின் சிக்கனத்திற்கும் வழி காட்டியிருக்கிறீர்கள்.
அருமையான எண்ணங்கள் மகா.
5:21 முப இல் திசெம்பர் 21, 2013
உங்கள் வருகையும் உங்கள் உண்மையான கருத்துக்களும் என்னை மென்மேலும் உற்சாகபடுத்தும் ஒன்று! மிக்க நன்றி ராஜி மேடம் 🙂
4:11 பிப இல் திசெம்பர் 22, 2013
சிறந்த கருத்துப் பகிர்வு
4:34 முப இல் திசெம்பர் 23, 2013
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார் 🙂