எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

குறுகுறுபார்வை..

20 பின்னூட்டங்கள்

images (16)

குறுகுறுபார்வை முதன் முதலாய் என் மேல் பதிந்த அந்த நொடி தரிசாய் கிடந்த என் மனமாகிய நிலத்தில் திமிர் முளை

விட்டது! இது அகந்தையினால் வந்த திமிர் அல்ல.. நானும் இவ்வுலகத்தில் யாரோ ஒருவரால் கவனிக்க படுகிறோம் என்ற

நினைப்பால் வந்த திமிர்! என்ன தான் அச்சம், மடம், நாணம்.. நீ முந்தி,நான் முந்தி என்று விழுந்தடித்து ஓடி வந்தாலும் எதுவுமே

நடக்காதது போல் முகத்தில் உணர்ச்சியை காட்ட வைத்த திமிர்.

 

நடை,உடை பாவனை மாற்றியது! ஒவ்வொரு குறுகுறு பார்வைக்கும், திமிராகிய செடி புது

புது இலைகளை விட்டு நெடு நெடுவென வளர்ந்து கொண்டே தான் வந்தது. உடைகளை தேர்ந்தெடுப்பதில் அதிக

முக்கியத்துவம் காட்டியது! யாருடைய கவனத்தையும் திருப்பாத வண்ணம் உடை உடுத்த பழகி கொண்டது! நிமிர்ந்த நடையும்

நேர் கொண்ட பார்வையும் பார்க்க வைத்தது! எந்த புதியவரிடத்திலும் கண்ணை பார்த்து பேச பழக்கியது! தவறு செய்பவர்களை

தைரியமாக சுட்டி காட்ட மனதில் தைரியம் முளைத்தது!பிடித்தவர்களிடம் நட்பு வளர்த்து கொண்டது!புறம் பேசுபவர்களை

ஒதுக்கி தள்ளியது. தன்னம்பிக்கையும்  கனிகளாய் காய்த்து குலுங்கவைத்தது!

இப்படியாக வளர்ந்த வந்த திமிராகிய செடி இன்று மரமாக தழைத்து நின்று கொண்டிருக்கிறது. என் வாழ்க்கை துணைவர்

என்னை தன் உற்ற தோழியாய் நினைக்க தோன்றியது கூட இந்த திமிர் திமிர் திமிரால் தான்!! சில சமயங்களில் இதே குறுகுறு

பார்வைகள் என்னை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்ததுண்டு! கணவருடன் ஒரு பனி கால இரவில் பைக்கில் வெளியில் சென்று

வரும் போது ஒரு நபர் எங்களை பின் தொடர்ந்தார் அவருடைய ஓட்ட ஸ்கூட்டரில்! நாங்க மெதுவாக சென்றால் அவரும்

மெதுவாக, வேகமாக சென்றால் அவரும் வேகமாக.. பார்க்க முதியவர் போல இருதாலும், அவருடைய குறுகுறு பார்வை சிறிது

எரிச்சலூட்டியது. கணவரிடம் சொல்லவா வேண்டாம ஒரே குழப்பம்!அவரிடம் சொன்னால் சிரிப்பார், உனக்கு ரொம்பதான்

நினைப்பு என்று! தைரியம் வந்தவளாய் அந்த நபரை உற்று நோக்கினேன்! என் மடியில் இருந்த என் கைபைய்யையும் என்

முகத்தையும் உற்று உற்று நோக்கினார். நிச்சயமாக இவர் திருடன் தான் மனம் எச்சரித்தது.. சுதாரித்து கொண்டேன்.

ஏதேச்சையாக சிக்னலில் நிற்க வேண்டிய கட்டாயம். அவரும் அருகில் வந்து நின்று திரும்பவும் அதே குறு குறு பார்வையுடன்

உற்று நோக்கினார்!! பிறகு தான் புரிந்தது அவர் நான் பந்தாய் சுத்தி வைத்திருந்த ராமர்பச்சை மற்றும் பஞ்சு மிட்டாய் கலரில்

வாங்கிய கொசு வலையை தான் என்னவோ ஏதோ என்று உற்று நோக்கி இருக்கிரார் என்று! அதை பார்த்து தெரிந்து

கொண்டவுடன் எதோ பெரிதாய் கண்டுபிடித்து விட்ட திருப்தியில் தன் வழியே சென்றார்!!

இதே குறுகுறு பார்வையால், என் மனதில் வளர்ந்த திமிர் மரத்தின் கிளைகளை சற்றே

வெட்டி சீர்படுத்திய தருணங்களும் உண்டு! எனக்கு எந்த வேலையையும் காலையிலேயே முடித்து விட வேண்டும் என்ற

நினைப்பு இருக்கும்.ஒரு மாதத்துக்கு தேவையான பலசரக்கை வாங்குவதற்கு நாங்கள் இருந்த ஊரில் உள்ள சூப்பர் மார்கட்

செல்வதுண்டு.. ஒரு நாலைந்து தடவை கவனித்து விட்டேன், அந்த கடையில் வேலை பார்க்கும் என் வயதை விட மிக

கம்மியான வயது உடைய இளைஞன் என் பின்னரே வருவதுண்டு! நான் நின்றால் அவனும் நிற்பான், திரும்பி பார்த்தால்

வேலை பார்ப்பது போல் பாவனை செய்வான்!

அவன் செய்கைகள் சிறிது எரிச்சலை கிளப்பி விடும். நானும் அவனை எத்தனையோ முறை தம்பி

என்று விளித்து சில   பொருட்களின் விபரம் கேட்டதுண்டு! அவனோ நீ என்ன வேண்டுமானாலும் கூப்பிட்டு கொள் என் வேலை

உன் பின் வருவது மட்டுமே என்பது போல் நடந்து கொள்வான்! ஒரு முறை எரிச்சல் முத்தி போய் என் கணவரிடம் இந்த

விஷயத்தை சொன்னேன்!

இந்த வயதில் கூடவா பின்னாலையே வருவாங்க என்ற வார்த்தைகளில் அதே திமிரும் கலந்திருந்தது..

அவரோ வாய் விட்டு சிரித்து விட்டு சொன்னார், நீ கடை திறந்து சிறிது நேரத்திலேயே போய் நின்றால், இந்த பெண்மணி வாங்க

வந்துஇருக்கிராரா இல்லை லவட்டி கொண்டு போக வந்து இருக்கிராரா என்ற சந்தேகம் கடைகாரனுக்கு வந்திருக்கும், அதற்காக

தான் அந்த இளைஞன் உன் பின் வந்திருக்கலாம் என்று ஒரு போடு போட்டு விட்டு நமுட்டு சிரிப்பு சிரித்தார்!!!

20 thoughts on “குறுகுறுபார்வை..

 1. ஹா… ஹா… ஹா… ஹா…

  தொடர வாழ்த்துக்கள்…

 2. ச்சே! என்ன இப்படியாகிவிட்டது, உங்கள் நிலை!
  பதிவு முழுவதும் இருந்த நகைச்சுவையை ரொம்பவும் ரசித்தேன், மஹா!

  வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்!

  • வாங்க அம்மா!
   என்ன அம்மா செய்வது சில நேரம் நாம் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று என்று ஆகி விடுகிறது 😦 உங்கள் வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🙂

 3. குருகுரு பார்வையை துருதுருன்னு பார்த்திருப்பதும் புரிகிரது. வலைச்சர அறிமுத்திற்கு வாழ்த்துகள். அன்புடன்

  • வாருங்கள் காமாட்சி அம்மா!
   உங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! ஆசையுடன் வந்து தட்டி குடுத்து பாராட்டி விட்டு சென்றமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙂

 4. வேர்டுபிரசில் இத்தணை பேர் பின்தொடர்கிறோமே. என்ன செய்வீங்க. #யாருகிட்ட

 5. வணக்கம்
  சகோதரி

  நகைச்சுவை கலந்த கலவையாக பதிவை மிக அருமையாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 6. உங்கள் குறுகுறு நகைசுவையை ரசித்தேன். சில சமயங்களில் நாம் ஒன்று நினைத்திருக்க நடப்பது வேறு மாதிரி ஆகிறது தான்.

 7. என்ன மஹா, கடைசியில இப்படி கொண்டுபோய் முடிச்சிட்டீங்களே .

  இங்கு 10 மணிக்கு ஊதுபத்தி வாசனையுடன் இண்டியன் ஸ்டோர் திறப்பாங்க, வாக் போகும் வழியில், வாரத்தில் இரண்டு நாளாவது,முதல் ஆளா நான்தான் போய் நிற்பேன். இனி போகும்போது உங்க கதைதான் நினைவுக்கு வரப்போகுது.

  • ஹா ஹா.. பரவாயில்லையே சித்ரா அக்கா.. இந்த பதிவு இவ்வளவு தூரம் விளிப்புணர்வு ஏற்படுத்தும் என்று நினைத்து கூட பார்க்கவில்லை!! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி 🙂 🙂 🙂

 8. குறுகுறு பார்வை படும்போது பெண்களின் உள்ளத்தில் எழும் உணர்வுகளை ரசிக்கும்படி சொன்னீர்கள். நன்றாக இருக்கிறது.

 9. முடியல என்னால முடியல!! 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s