அனுமதியின்றி உடல் ஊடுருவும்
அதிகாலை நேர கத்திரி குளிரில்
ஊசியாய் குத்தி கிழிக்கும்
ஊத காற்றில் அனிச்சையாய்
செயல்படும் கைகள் நாடி சென்று
ஆசையாய் அணைத்து கொள்ளும்…….
.
.
.
சூடான தேனீர் கோப்பையை!!
முத்தம் யுத்தம்
இவையின்
சத்தம் நித்தம்
பின் முடிவில்
இரத்தம் இவை
மொத்தம்
ராம்லீலா!!
நை நை நு குட்டி பையன்
என் உசுரை வாங்கும்
ஒவ்வொரு முறையும்
அவன் துண்டை காணோம்
துணியை காணோம் என்று
ஓட வைக்க நான் சொல்லும்
மந்திர வார்த்தைகள்..
கண்ணு CHUBBY CHEEKS..சொல்லு!!
தூள் கிளப்பினாலே
பிரச்சனை தான்..
கண்டிப்பா கிளப்பி
விடுபவருக்கு
கண்ணு(ல) பட்டு விடும்!!
வெயிலும் அடிச்சு
மழையும் பெஞ்சா
காக்கைக்கும் நரிக்கும்
கல்யாணம்…
வெயிலும் அடிச்சு
குளிரும் கொன்னு எடுத்தா
யாருக்கும் யாருக்கும்
கல்யாணம்..
ஷப்பா முடியல!!
கொஞ்சம் பழசு ஆனவுடன்
இந்த கதவெல்லாம் ஏன்
கிரீச்.. கிரீச்.. என்று
சத்தம் போடுதுனு தெரியுமா??
.
.
.
அட இது கூடவா தெரியலா??
கொஞ்சம் Grease போட்டா என்ன
குறைஞ்சா போயிடுவீங்க..
அப்படினு தான்!!
நண்பர்களுடன் படம்
பார்த்து விட்டு பூனை
மாதிரி உள்ளே நுழைந்த
பையனிடம் கடு கடுவென்று
முகத்தை வைத்து கொண்டு
நறுக்கென்று நாலு வார்த்தை
கேட்டேன்…………
.
.
படம் என்ன கதை டா!!
5:38 முப இல் திசெம்பர் 10, 2013
மஹா!
இன்று சித்ரா சுந்தர் உங்கள் வலைத்தளத்தை வலைச்சரம் தளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார். படித்துப் பாருங்கள். இணைப்பு இதோ: http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_10.html
5:40 முப இல் திசெம்பர் 10, 2013
உங்கள் பதிலையும் படித்து விட்டேன், மஹா! நீங்கள் வலைபதிவு செய்வதற்கு இதை விட வேறென்ன பாராட்டு வேண்டும்? தொடருங்கள் உங்கள் எண்ணங்களை.
பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்!
9:50 முப இல் திசெம்பர் 10, 2013
வாருங்கள் அம்மா!
தங்கள் வருகை என்றுமே எனக்கு மகிழ்ச்சி தான்! இன்று காலையிலேயே தனபாலன் சாரும், சகோதரர் ரூபன் அவர்களும், சித்ரா சுந்தர் மேடம் என்னை வலைச்சரம் அறிமுகம் செய்ததை ஆசையுடன் வந்து பகிர்ந்து கொண்டார்கள்.. இன்ப அதிர்ச்சியாக இருந்தது அம்மா! உங்கள் பின்னூட்டம், ராஜி மேடம் அவர்களின் பின்னூட்டம் எல்லாவற்றையும் படித்தேன் அம்மா! என்னை இவ்வளவு ஊக்கப்படுத்தும் எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். உங்கள் பொன்னான நேரத்தில் எனக்காக வந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி அம்ம 😀 😀 😀
6:28 முப இல் திசெம்பர் 10, 2013
ரசித்தேன்…
வாழ்த்துக்கள் அம்மா…
9:41 முப இல் திசெம்பர் 10, 2013
படித்து ரசித்தமைக்கு மிக்க நன்றி தனபாலன் சார் 😀
11:50 முப இல் திசெம்பர் 10, 2013
சூப்பர்… வாழ்த்துக்கள்…
4:19 முப இல் திசெம்பர் 11, 2013
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார் 🙂
1:54 பிப இல் திசெம்பர் 10, 2013
டீக்கோப்பைக்கும் கிரீசுக்கும் எனது ஓட்டு.
4:21 முப இல் திசெம்பர் 11, 2013
வோட்டு போட்டதுக்கு நன்றிங்க 🙂
6:28 பிப இல் திசெம்பர் 11, 2013
ஒரு நிமிடம் அசந்தே போனேன். மெதுவாக சொல்கிறீர்கள் டீ கோப்பை என்று.
கிரீஸ் ரசித்தேன்.
அது என்ன chubby cheeks கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது.
மழையும் அடித்து, குளிரவும் செய்தால் ,யாருக்கும் யாருக்கும் கல்யாணம் என்று வானிலை ஆராய்ச்சி நிலையத்தைக் கேட்டுப் பார்ப்போம் தெரிகிறதா என்று.
மொத்தத்தில் அருமையான எண்ணங்கள்.
உங்கள் கவிதைகளைப் படிக்கும் போது மனம் லேசாவதை உணர முடிகிறது.
நன்றி மஹா.
4:23 முப இல் திசெம்பர் 12, 2013
வாங்க ராஜி மேடம்! எங்க குட்டி பையன் ரொம்ப நை நை என்று நச்சு பண்ணுகிர நேரம் ரைமெஸ் சொல்ல சொன்னால், அம்மா ஆள விடும்மா என்று ஓடி விடுவான்! நானும் என் வேலைகளில் முழு கவனம் செலுத்தலாம், இது எப்படி இருக்கு 🙂 மனசு லேசா ஆனால் போதும் வாழ்க்கையில் எவ்வளவு கனம் வந்தாலும் தாங்கி கொள்ளலாம்! வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!