நெடு தூரம் பயணித்து
களைத்து போன வழியே
திரும்பி தடை கற்களாய்
தோன்றும் வளர்ந்து கொண்டே
செல்லும் படிகற்களில் தாவி
குதித்து வீட்டு வாசலை
வந்தடையும்போது சிறு
குழந்தையாய் உற்சாகம் தொத்தி
கொள்ளுமோ என்னவோ இறக்கைகள்
இல்லாமலேயே படபடத்து
விடுகின்றது எனது இதயம்!!
ஒரு கஷ்டம்னு கஸ்டமர் கேர்
கால் பண்ணி மூச்சு
விடாம அவுங்க சொல்ற
இதுக்கு ஒன்ன அமுக்கு
அதுக்கு ரெண்ட அமுக்கு..
ஆப்சனில் தொலைந்து போய்
எதுக்கு எத அமுக்கனே மறந்து
இப்ப எதுக்கு கால் பண்ணோம்
என்பதும் மறந்து திக்கு தெரியாத
காட்டில் கண்ணை கட்டி
விட்டது போல் தத்தளிக்கும் போது
ஆபத்பாந்தவனாய் வந்து
காத்தருள்வது கடைசி ஆப்சன்
To Repeat Press ‘0’
நாம் சொல்வதை எல்லாம்
காதில் வாங்கா விட்டாலும்
புரியாமல் புரிந்து கொண்டும்
அறியாமல் அறிந்து கொண்டும்
என் வேலை தலை ஆட்டுவது
மட்டுமே என்று ஆட்டும் போது
தலையாட்டி பொம்மைகள் மட்டுமே
விரும்பப்படுகின்றன ரசிக்கபடுகின்றன
வாழ்க்கை துணைவர்கள் அல்ல!!
அச்சம் மடம் நாணம்
இவை மூன்றும் சரி விகிதத்தில்
கலந்த மணப்பெண்ணாய்
தன் மணவாளனுக்காக காத்திருக்கும்
குண்டூருக்கு தெரியாது பாவம்
வருபவர் தன்னை கை பிடிப்பதற்கு
முன் பலரையும் சூறையாடி கொண்டு
வரும் மோசக்காரர் என்று..
லெஹர் புயல்!!
10:21 முப இல் திசெம்பர் 9, 2013
“..தலையாட்டி பொம்மைகள் மட்டுமே
விரும்பப்படுகின்றன ரசிக்கபடுகின்றன
வாழ்க்கை துணைவர்கள் அல்ல!!..”
அடடா எங்கள் தலைகளை உருட்டுகிறீர்களே!
ஆனால் அது உண்மைதான்
அழகாகச் சொன்னீர்கள்
4:41 முப இல் திசெம்பர் 10, 2013
ஆமாம் சார்! உண்மையான கோபத்தில் பிறந்த வார்த்தைகள் தாம் அவை! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்!
3:35 முப இல் திசெம்பர் 10, 2013
வணக்கம்…
வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்… இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி…
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_10.html) சென்று பார்க்கவும்… நன்றி…
4:30 முப இல் திசெம்பர் 10, 2013
வணக்கம் தனபாலன் சார்,
உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! மிகுந்த சந்தோஷமும் கூட, ஏன் தெரியுமா, பின்னே நீங்கள் என் ஊர்க்காரர் அல்லவா! ஆமாம் சார், நான் பிறந்த ஊர் திண்டுக்கல் 😀