எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

சில எண்ணங்கள் -30

14 பின்னூட்டங்கள்

கதவிடுக்கில் நடந்த
கசமுசாவில் இப்போ
ஆறு மாசம்….
.
.
.
.
.
போல் காட்சியளிக்கிறது
நைந்து வீங்கி போன
என் நடு விரல்!!

படம்

 

ஏண்ணா!
என் கரியமிலத்தை வாங்கரேள்..
இப்படி தான் மரம் தன் உசுரை வாங்கும் கணவரிடம் பொறுமை இழந்து கேட்குமோ?? 

படம்

மருதாணியை காலில்
இடுவதை விட
மறந்து ஆணியை
கால் அடியில் இடும்
பொழுது நொடியில்
சிவக்கும் கால்கள்!

படம்

சாய்ந்து சாய்ந்து நான்
சாயுங்கால சூரியனை
ரசிக்க முனையும்
ஒவ்வொரு முறையும்
என் சாயலை ஒத்த
சாயா பின் தோன்றி
என்னை முறைப்பாள்!!

படம்

 

ஹெலெனின் ஒரு ஓர பார்வைக்கே
தன் நிலை மறந்து
உடல் சிலிர்த்து மயங்கி
பின் அவளை காண
கிடைக்காது அழுது
இரவெல்லாம் புலம்பி
காலையில் விடிய மறுத்து
முகம் கறுத்து
சலனம் சிறிதுமின்றி
பார்வை நிலைகுத்தி
ஏனோ தானோ என்று
விடிந்திருக்கிறது குண்டூர்!!

படம்

இரவிலே ஏற்பட்ட திடீர் பவர்கட்டால்
இருட்டிய சமையலறை உண்டாக்கிய
திகிலில் பகீரென்ற மனது சற்றே
நிதானித்து தன் நிலைக்கு வருவதற்குள்
அடுப்பிலே வெந்து கொண்டிருந்த 
திருப்பி போட மறந்த தோசை
கல் எது தோசை எது என்று பிரிக்க
முடியாத வண்ணம் இருட்டிவிட்டிருந்தது!!

 

 

படம்

ஒரு வாரம் பத்து நாளைக்குள்ள
எந்த க்ரீமும் உபயோகிக்காமலேயே
சிகப்பழகை பெற வேண்டுமா??
.
.
.
.
.
அடுத்த ஜென்மத்தில் மிளகாயாய் பிறக்க
இறைவனிடத்தில் இடைவிடாது
பிராத்தனை செய்யுங்கள்!!

படம்

14 thoughts on “சில எண்ணங்கள் -30

 1. வணக்கம்
  சகோதரி

  மருதாணியை காலில்
  இடுவதை விட
  மறந்து ஆணியை
  கால் அடியில் இடும்
  பொழுது நொடியில்
  சிவக்கும் கால்கள்!…

  என்ன வரிகள் உவமித்த உவமை மிக அழகு… வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 2. கவிதை அருமையிலும் அருமை

 3. சிறந்த பதிவு தொடருங்கள்

 4. ‘முதலாவது சரியான சிரிப்பு. அடுத்தது…இது
  ”’…மருதாணியை காலில்
  இடுவதை விட
  மறந்து ஆணியை
  கால் அடியில் இடும்
  பொழுது நொடியில்
  சிவக்கும் கால்கள்!…””
  Eniya vaalththu….
  Vetha.Elanagthilakam.

 5. அருமை – கசமுசாவும், மருதானியும்…

 6. “..கதவிடுக்கில் நடந்த
  கசமுசாவில் இப்போ
  ஆறு மாசம்……” அருமை

 7. எப்படி அக்கா இப்படியெல்லாம்??? ஏன் இப்ப இப்படியெல்லாம் போஸ்ட் போடுறீங்க இல்ல?? why why and why???

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s