எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

சில எண்ணங்கள் -27(வெற்றிகரமான முதலாம் ஆண்டு நிறைவு நாள்)

15 பின்னூட்டங்கள்

இன்னிக்கே இப்பவே
அடுப்படியிலேயே
டமால் டுமீல்
அவசர தீபாவளி
கொண்டாடனுமா..
காதை குடுங்க
.
.
.
.
.
.
அரிசி மாவு
சீடை பண்ணுங்க!!!

download (5)

 

பரபரப்பான கிளைமேக்ஸ் பட
காட்சியில் வில்லனை கூண்டோடு
அழிக்க ஹீரோ தானே மனித
வெடிகுண்டாய் மாறி வெடித்து
சிதறி எங்கும் தீ மளமளவென
பரவி கொழுந்து விட்டு எரிவதை
பார்த்து கொண்டிருக்கும்
எங்க குட்டி பையன் மட்டும்
பய பக்தியோடு எழுந்து
தீபம் காட்டுவதாய்
இரு கை கூப்பி சாமி கும்பிடுவான்
பக்தி பழமோ!!

download (6)

எதாவது உருப்படியா பேச வேண்டும்
என்றால் பேசு இல்லை இடத்தை
காலி பண்ணு என்று காலை நேர
பரபரப்பில் வெட்டி பேச்சு பேசும்
என் பையனிடம் எரிந்து விழும்
என் சொற்களை கொஞ்சம் கூட தட்டாமல்
அலுத்து கொள்ளாமல் திரும்பவும்
பேச்சு கொடுப்பான் ஏரோப்ளேன் எப்படி
ஓட்டரதுனு சொல்லி தர்றீங்களா..
தாய் சொல்லை தட்டாத தனையன்!!

download (7)

 

புழுங்கலரிசியை ஊற வைத்து
பின் மைய்யாய் அரைத்து
இரும்பு சட்டியில் பேருக்கு சிறிது
எண்ணெய் ஊற்றி அரைத்த மாவை
அதில் கொட்டி கையில்
ஒட்டாத பதம் வரும் வரை வதக்கி
அதாவது திரிசங்கு சொர்க்க நிலையில்
வெந்தும் வேகாமலும்..
கையில் ஒட்டியும் ஒட்டாமலும்..
வதங்கி வரும் வேளையில்
கவன குறைபாடால் ஏதாவது
தவறு நேர்ந்து அதிகமாக வதங்கி விட்டால்
மாவை குழலில் இட்டு பிழியும் போது
அழகு அழகாக இடியாப்பம் வராது
மாவை பிழிய முடியாமல்
அழுகை அழுகையாக மட்டும் வரும்!!

download (8)

 

தன் வெளிச்சத்தால் விளக்கு விளக்கி
காட்டுவதால் ‘விளக்கம்’ உண்டாயிற்றா..
இல்லை விளக்கம் கொடுப்பதால் விளக்கு
என்ற பெயர் உண்டாயிற்றா..
ஒரே குழப்பம்!!

download (9)

எதை பார்த்து பயந்து போயிற்று
இப்படி தலை முடி விரைத்து நிற்பதற்கு…
.
.
.
.
.
.
.
குட்டி பையனின் டூத் பிரஷ்!

images (7)

15 thoughts on “சில எண்ணங்கள் -27(வெற்றிகரமான முதலாம் ஆண்டு நிறைவு நாள்)

  1. முதல் வருட நிறைவிற்குப் பாராட்டுக்கள். உங்கள் எழுத்துக்கள் இன்னும் பல பல வருடங்களுக்கு இதேபோல இளமையாய், இனிமையாய் இருக்க வாழ்த்துகள்!
    Party எப்போ?
    இடியாப்ப அழுகையும், குட்டிப் பையனின் டூத் பிரஷ்ஷும் அருமை.
    உங்களுக்கு சீடை வெடிக்குமா?

    தீபாவளி வாழ்த்துகள் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தவர்களுக்கும்.

    • வாங்க வாங்க ரஞ்சனி அம்மா! நீங்க இதே மாதிரி முதல் முதலா வந்து கமென்ட் குடுத்தப்ப நான் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தேன் என்று எனக்கு மட்டும் தான் தெரியும்! நீங்க ஒவ்வொரு தடவை வரும் போதும் அதே மகிழ்ச்சி ஊற்றெடுத்து கொண்டு தான் இருக்கிறது 🙂 எனக்கு அளவில்லா உற்சாகம் குடுத்த உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்! நீங்கள் வழி காட்டிய பாதை, எந்த தடையும், தடங்களும் இல்லாமல் மேலே, மேலே முன்னேறி செல்வேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் 🙂 🙂 🙂

  2. பக்தி பழமான குட்டிப் பையனின் விறைத்த பிரஷ் சிரிக்க வைத்தது .
    இடியாப்பம் ரெசிபியை இப்படிக் கூட சொல்லலாம் என்று புரிந்தது. இந்த ரெசிபியை முயன்று பார்க்க வேண்டும் என்று நோட் செய்து கொண்டேன்.
    ” Beware of seedai ” ரசித்தேன்.
    ஆமாம். ஏரோப்ளேன் ஓட்டக் கற்றுக் கொடுத்து விட்டீர்களா இல்லையா தாய் சொல்லைத் தட்டாத தனயனுக்கு.
    விளக்கு விளக்கம் விளங்கியது.
    மொத்தத்தில் உங்கள் எண்ணங்களை படித்தேன், ரசித்தேன், சிரித்தேன்.
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    • ராஜி மேடம் நீங்க என்னம்மா சிரிக்க வைக்கரீங்க எல்லரையும், அப்படி பட்ட உங்களை புன்னகை புரியவாது வைக்க வேண்டாமா! நான் உங்க பெரிய ரசிகை என்று சொல்ல பெருமை படுகிரேன்! நீங்கள் முக புத்தகத்தில் இருந்தால் இதோ என் முகவரி,https://www.facebook.com/mahalakshmi.vijayan என்னை தயவு செய்து தொடர்பு கொள்ளுங்கள்! உங்கள் எழுத்துக்களை நான் என் பிரிய நண்பர்களுக்கு காட்டுவதற்கு ஆசை படுகிரேன்! யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம், இந்த சின்ன ஆசையை நிறைவேற்றுவீர்கள் என் நம்புகிறேன் 🙂 வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ராஜி மேடம்!

      • இப்படி ஒரு ரசிகை கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.கண்டிப்பாக உங்களை facebookஇல் friends request அனுப்புகிறேன்.
        என்னை இப்படி புகழ்வதற்கு மிக்க நன்றி மஹா .
        நன்றி.

  3. உங்கள் எண்ணங்களின் முதலாம் ஆண்டு நிறைவிற்கு வாழ்த்துக்கள்.
    Happy Birthday to ‘ Ennangal”

  4. தங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்.
    அதைவிட
    “வெற்றிகரமான முதலாம் ஆண்டு நிறைவு நாள்” என்பது
    மகிழ்சிகரமான செய்தி.
    ஆயுள் முழுவதும் தொடர்ந்து எழுதுங்கள்.
    அதற்கும் எனது வாழ்த்துகள்.

  5. “..அழகு அழகாக இடியாப்பம் வராது
    மாவை பிழிய முடியாமல்
    அழுகை அழுகையாக மட்டும் வரும்!!..”
    ஆகா ஆகாகா!
    சொல்லிலும் சுவை

  6. வணக்கம்
    சகோதரி

    வலைப்பூ ஆரம்பித்து ஒருவருடங்கள் பூர்தி நாளில் சிறப்பு பதிவாக பதிவிட்டது மிக அருமையாக உள்ளது மேலும் பல படைப்புக்கள் மலரட்டும்
    நிறையஎழுதுங்கள் எழுதிக்கொண்டு இருங்கள்…. ஒவ்வொரு கட்டத்தையும் அவதனமாக வைக்கும் போது தடைகள் உடைக்கப்டும் அப்போது ஒரு நாள் வனம் உங்கள் கைவசமாகும் அப்போது அடையும் இன்பம் மேல்…..வாழ்த்துக்கள்
    சகோதரி…

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

  7. முதல் வருட நிறைவிற்குப் வாழ்த்து.
    ”..எதை பார்த்து பயந்து போயிற்று
    இப்படி தலை முடி விரைத்து நிற்பதற்கு…
    .
    .
    குட்டி பையனின் டூத் பிரஷ்!..”
    மிக நிபுணியாகி விட்டதால் இப்போவெல்லாம் கொஞ்சம் விளங்குவதும் குறைவாக உள்ளது.
    பிரமாதம். இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

கோவை கவி -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி