கூட்ட நெருக்கடியில்
முன் சென்ற பெண்ணை
ரகசியமாய் தீண்டி
அவள் கன்னம் சிவக்க
வைக்க எண்ணிய அவனுக்கு
பெரிய ஏமாற்றம்..
பகிரங்கமாய்
அவன் கன்னம் சிவக்க
வைத்தாள் அவள்!!
எவரூ எவரூனு..
சளைக்காமல் என் நம்பருக்கு
கால் செய்பவர்களுக்கும்
Hey who r u.. who is dis.. என்று
மண்டையை பிய்த்து கொண்டு
மெசேஜ் அனுப்புபவர்களுக்கும்
கண்டிப்பாக தெரிந்திருக்க நியாமில்லை
இவை என் கடை குட்டி பையனின்
லீலையில் ஒன்று என்று!!
அது என்ன மெனு கார்டில்
புதுசா உளவுசாறு தோசை
என்ற கிறுக்கு புத்தியின் சொல்
கேட்டு உளவு பார்க்க ஆர்டர்
செய்தாயிற்று…
கொஞ்சம் திக் திக் என்று
இருந்தாலும் அந்த தோசைக்கு
குடுத்திருந்த பில்டப் பார்த்து
சிறிது ஆறுதல் உண்டாயிற்று…
குண்டூர் ஸ்பெசல் என்று குறிப்பிட்டு
இருந்ததை பார்த்தாவது சற்றே
சுதாரித்திருந்திருக்கலாம்…
சத்தியமாக நினைக்கவே இல்லை
கொள்ளு, மிளகாய் வத்தல், மிளகு
புளி சேர்த்து கெட்டி ரசம் வைத்து
தோசை முழுவதும் தடவி குடுப்பார்கள் என்று!
யாருய்யா வானத்துக்கு விடாம
சீரியல் போட்டு காட்டுரது
இப்படி மூக்கால அழுது தள்ளுது!!
மக்காச்சோளம் அவிச்சு குடுக்கனும்
என்று நினைத்தால் மட்டும் போதாது
குக்கரில் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு
அதை மூடுவதற்கு முன் மக்காசோளத்தை
உள்ள போட்டாச்சா என்று சரி பார்த்து கொள்வது
நலம் இல்லயேல் பசியோடு வரும் கணவர்
உங்களை அவித்து விடுவது நிச்சயம்!!
மழையே!
நீ விலாசம் மாறி
வந்து விட்டாயா
இது சிரபுஞ்சி
அல்லவே!! — in Guntur.
ஏ மழையே!
உன் சாகசத்தால்
என் மேனியில் உள்ள
ஒவ்வொரு செல்லிலேயும்
பூக்கள் பூத்ததோ இல்லையோ
என் வீட்டில் துவைத்து காய்ந்து
கொண்டே இருக்கும் துணிகளில்
பூஞ்சைகள் பூக்க போவது நிச்சயம்!!
விடாது பெய்யும் அடை மழையால்
நிறம் மாறின வெள்ளை பூக்கள்..
பஞ்சு!!
3:29 பிப இல் ஒக்ரோபர் 26, 2013
அவ்வளவு மழை பெய்கிறதா ? மழையைப் பற்றிய எண்ணங்கள் தான் அதிகமாயிருக்கிறது. அத்தனையும் படிக்க படிக்க ‘ ஜில்’ என்றாகி விட்டது மஹா.
உங்கள் பையனின் லீலை ரசித்தேன்.
வாலிபனின் லீலைக்குக் கிடைத்த பரிசையும் பார்த்தேன்.
உங்கள் மக்கா சோளம் பற்றிய செய்தி புன்னகையை வரவழைத்தது.
மொத்தத்தில் அருமை மஹா.
5:26 முப இல் ஒக்ரோபர் 27, 2013
வாங்க வாங்க ராஜி மேடம்! உங்க பின்னூட்டம் பார்த்தவுடன் மழை பெய்தது போன்று ஜில் என்று குளிர்ச்சி ஆகி விட்டது என் மனது 🙂
6:54 பிப இல் ஒக்ரோபர் 28, 2013
மகா மிக நன்று பதிவு.
நானும் நேர நெருக்கடியில் நீங்களும் அப்படியா!
சரி வந்து விட்டோமே!…
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
4:15 முப இல் ஒக்ரோபர் 29, 2013
வருகைக்கு மிக்க நன்றி கவியே 🙂
10:27 முப இல் ஒக்ரோபர் 29, 2013
“பூக்கள் பூத்ததோ இல்லையோ
என் வீட்டில் துவைத்து காய்ந்து
கொண்டே இருக்கும் துணிகளில்
பூஞ்சைகள் பூக்க போவது நிச்சயம்!
அருமை,
3:56 முப இல் ஒக்ரோபர் 30, 2013
உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி சார்!