இதுவரை புன்னகையை மட்டும்
பகிர்ந்து கொண்ட ஆந்திர கீழ்வீட்டுக்காரங்க
முதன்முறையாய் படி ஏறி வந்து புரிந்தும்
புரியாமலும் வார்த்தைகளை பகிர்ந்து கோண்டார்..
அவர் வீட்டில் லட்சுமி பூஜையாம்
கலந்து கொள்ள வேண்டினார்
மறுக்காமல் தலையை ஆட்டி வைத்தேன்
இரவு 8 மணிக்கு அவர் வீட்டை சென்றடைந்தோம்
அவர் அவர் மாமியார் மைத்துனர் சகிதமாய்
தயாராகவே இருந்தார்…
அவர் மாமியார் ஏதோ ஜெபித்து கொண்டிருந்தார்
மரியாதை நிமித்தமாய் ஒரு சிறு புன்னகையை
உதிர்த்து விட்டு தன் ஜெபத்தை தொடர்ந்தார்
பரஸ்பரம் புரியாத மொழியில் அறிமுகத்துக்கு
பின் எனது பெயரை கேட்டு மனம் குளிர்ந்தார்
பின் ஒரு சிறு பாயை நடு கூடத்தில் விரித்தார்
அதில் என்னை அமற செய்து குங்குமம் சகிதமாய்
வந்து எனது எதிரில் அமர்ந்தார்..
என் உச்சந்தலை வகிடு முழுவதும் குங்குமத்தை
நிரப்பினார் என் தாலியிலும் இட்டு விட்டார்
பின் என்னையும் அவ்வாறே செய்ய சொன்னார்
அதன் பின் பூஜை பிரசாதமாய்
பாயசத்தை அருந்த குடுத்தார்
பின் ஒரு கலவை சாதம்
அதன் பின் மஞ்சள் நிறத்தில் கொஞ்சம்
அரிசியையும் குடுத்து விட்டு
மஞ்சளை சிறிது தண்ணீர் விட்டு கலந்து
எடுத்து வந்து என் பாதங்களை
மஞ்சள் தேய்த்து மஞ்சளாக்கினார்
பின் என் பாதங்களை தொட்டு வணங்கினார்
அய்யையோ நான் தமிழ் நாட்டின் அம்மா இல்லை…
என்று அலற வேண்டும் போல் இருந்தது
தொட்டு வணங்கி விட்டு எழுவார் என்று
பார்த்தால் அவரோ நான் அட்சதை போட்டு
ஆசிர்வதிப்பதற்க்காக காத்து கொண்டிருந்தார்..
அவரிடம் எப்படி சொல்லுவது அவர் அட்சதை
போடுவதற்க்காக குடுத்த மஞ்சள் அரிசியை
நான் எப்பொழுதோ வாயில் போட்டு விட்டேன் என்று!
7:16 முப இல் செப்ரெம்பர் 28, 2013
ஹா …ஹா…..ஹா…….
அப்புறம் என்ன தான் செய்தீர்கள். எப்படி சமாளித்தீர்கள் நிலைமையை?
அறிய ஆவல்.
11:44 முப இல் செப்ரெம்பர் 28, 2013
பேந்த பேந்த விழித்த என்னை பார்த்து அவர்களே புரிந்து கொண்டு திருப்பி அரிசியை எடுத்து குடுத்தார்கள்! அனேகமாக அடுத்த தடவை எல்லாம் கூப்பிட மாட்டார்கள் என்று நினைக்கிரேன் 🙂
10:31 முப இல் செப்ரெம்பர் 28, 2013
ராஜியுடன் சேர்ந்து நானும் சிரித்தேன்.
இங்கும் இப்படித்தான், மஹா! சுமங்கலிகள் என்றால் வயதைப் பார்க்க மாட்டார்கள். நமக்குத்தான் கொஞ்சம் கூசும்.
எப்படி சமாளித்தீர்கள்?
11:46 முப இல் செப்ரெம்பர் 28, 2013
ஆமாம் அம்மா, ரொம்பவே தர்ம சங்கடமான சூழ்நிலை தான், என்ன செய்ய, வீட்டுக்கு வந்து கணவரிடம் சொல்லி சொல்லி சிரித்தேன் 🙂
5:23 முப இல் செப்ரெம்பர் 29, 2013
Aaha!…ha!….அப்புறம் என்ன நடந்தது. என்று கேட்க ஆசை .ஆனால் பதிலும் கொடுத்துள்ளீர்களே!…நல்ல சம்பவம்.
நீண்ட நாளாகிவிட்டது. இங்கு வந்து …மன்னிப்புடன்…
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
5:27 முப இல் செப்ரெம்பர் 29, 2013
வாங்க Sis, மன்னிப்பு எல்லாம் தயவு செய்து வேண்டாம், நீங்க எப்போ வந்தாலும் சந்தோஷம் தான் 🙂
7:04 முப இல் ஒக்ரோபர் 1, 2013
மிக அருமையான சடங்கு!. சின்ன பெண்களுக்கும் காலில் மஞ்சள் தேய்த்து விடுவது உண்டு. சிராவண மாதம் என்றால் கடலை வைத்து வெத்திலை பாக்கு கிடைக்கும்!
எல்லா பெண்கள் கால்களும் பளீர் மஞ்சேல்.
9:26 முப இல் ஒக்ரோபர் 1, 2013
ஆம் நீங்கள் சொல்வது போல் அருமையான சடங்கு தான்! இரண்டு நாட்கள் ஆனது அந்த மஞ்சள் நிறம் போவதற்கு 🙂 ஆனாலும் அழகாக தான் இருந்தது.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🙂
4:32 முப இல் ஒக்ரோபர் 25, 2013
ஹா ஹா சுவையான சம்பவம்.
4:34 முப இல் ஒக்ரோபர் 25, 2013
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🙂
3:51 பிப இல் மார்ச் 14, 2015
hahaha அய்யோ!!!!