எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

சில எண்ணங்கள் -19

8 பின்னூட்டங்கள்

ஆவிகளுக்கு கால்கள் கிடையாது
இது உலகம் அறிந்த உண்மை..
ஆனால் சத்தியமாக கைகள் உண்டு
இது நான் அறிந்த உண்மை..
அய்யோ! பளாரென்று எப்படி
அறை விடுது தெரியுமா முகத்திலே
இட்லி குக்கரை திறக்க முற்படும்
ஒவ்வொரு தருணமும்!

Image

எங்க வீட்டிலேயும் ஒரு CCTv
கேமிரா மாட்டினால் என்ன
என்று பலமாக யோசிக்கிரேன்..
பின்னே வாங்கியே வராத
கொய்யா பழங்களை எங்கே
என்று குற்ற பத்திரிக்கை
வாசிக்கும் கணவருக்கு இனி
வரும் காலங்களில் மெய்பிப்பதற்க்கு!!

Image

வேண்டாம் என்று தான்
முதலில் நினைத்தேன்
ஆனால் இந்தா வைத்து கொள்
என்று கூப்பிட்டு குடுத்த போது
வேண்டாம் என்று சொல்ல வார்த்தை
வராது விரும்பி இரு கை நீட்டி 
வாங்கி கொண்டேன் அந்த
பச்சை மண்ணு பிள்ளையை…
அழகாய் வசீகரித்த அவனை 
பார்த்து பார்த்து பத்திரமாய் 
கூட்டத்தில் இடி படாமல் நெஞ்சோடு
சேர்த்து வீடு வந்தோம்
அக்கம்பக்கத்தினரை அழைத்து 
அழைத்து அவனை காண்பித்து அவர்கள் 
மனம் திருடி கொண்டோம்
ஆசை ஆசையாய் செய்த பால்
கொழுக்கட்டையை ஊட்டி மகிழ்ந்தோம்
இந்த பச்சை மண் பிள்ளையின்
ஈரம் கூட காயவில்லை அதற்குள்
அவனை ஆற்றிலேயோ குளத்திலேயோ
தொலைத்து விட்டு வர வேண்டுமாமே
என்ன ஒரு அநியாயம்
இதற்கு தான் மனம் முதலிலேயே அடித்து
கொண்டதோ வேண்டாம் வேண்டாம் என்று!

Image

 

மதியம் 3:30 மணிக்கு
சிறிது கண் அசந்து
தூங்க நினைத்து
சாயுங்காலம் 4:30
மணிக்கு எழ அலாரம்
வைத்து இடையே உள்ள
1 மணி நேரத்தில் 40
தடவை மணி ஆயிற்றா
என்று உள்ளம் பதைத்து
பதைத்து எழுந்து பின்
உறங்கியும் உறங்காமலும்
எழுந்து அலாரத்தை
பொறுப்பாக அணைத்து
விட்டு தலை வலிக்க வலிக்க
எழுந்தால் அதுவே குட்டி
மதிய நேர தூக்கம்!!

 படம்

8 thoughts on “சில எண்ணங்கள் -19

 1. மகா,
  இரண்டு மூன்று நாட்களாக உங்கள் எண்ணங்கள் காணவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இல்லை எண்ணங்களை நான் தான் தொலைத்து விட்டேனோ என்று நினைத்தேன்.
  அழகான பச்சை மண் பிள்ளையுடன் வந்து விட்டது எண்ணங்கள். ரசித்தேன்.,ஆவி,
  cc tv, எல்லாவற்றையுமே!
  நன்றி மகா….

  • ஆகா!! என் எண்ணங்களுக்கும் ஒரு ரசிகரா!! வணக்கம் பரமசிவம் சார்.. என் எண்ணங்கள் அனைத்தும் என் மனதை நான் மகிழ்ச்சியாக வைத்து கொள்ள நான் எடுக்கும் ஒரு சிறு முயற்சி! உங்களுடைய மனமும் ரிலாக்ஸ் ஆகிரது என்பதை உங்கள் பின்னூட்டம் மூலம் அறிந்து கொண்டேன்! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி 🙂

   • மஹா…..மஹா…….. சாரி… சாரி…..மேலேயுள்ள கமென்ட் நான் போட்டது. என் கணவருடைய id இலிருந்து எழுதியது நான் தான். தவறுக்கு மன்னிக்கவும்.
    அவரும் இந்த எண்ணங்களைப் படித்துக் கொண்டு தானிருக்கிறார்.நானுமே ரிலாக்ஸ் ஆகிக் கொண்டு தானிருக்கிறேன்.
    நன்றி மகா . உங்கள் பதிலைப் படித்த பின்பு தான் நான் தவறு செய்தது புரிந்தது.இனி நான் ஜாக்கிரதையாக இருப்பேன்.

 2. அழகான பச்சை மண் பிள்ளையாரை வாங்கிக் கொண்டு வந்துவிட்டு யாராவது குளத்தில் போடுவார்களா?
  ஆவியின் கை, மற்றும் CCTV யின் தேவை இரண்டும் நல்ல கருத்துக்கள்.
  எண்ணங்களை கவிதையாக மற்றும் உங்கள் கைவண்ணம் வளரட்டும்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s