எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

சில எண்ணங்கள் -18

3 பின்னூட்டங்கள்

அழுத்தமாய் இதழ்களை பதித்தும் 
பாவம் இவரால் இப்பொழுதெல்லாம்
இம்ப்ரஸ் செய்யவே முடிவதில்லை
.
.
.
.
இன்னிகோ நாளைக்கோ
என்று நாட்களை எண்ணி
கொண்டிருக்கும் 
Liquid Shoe Polish!!

படம்

இருக்கலாம்..
முன் ஜென்மத்து பந்தமாய்
என் தர்ம பத்தினியாய்
பின்னே எவ்வளவு தான்
கண்டும் காணாமலும்
கேட்டும் கேட்காமலும்
பார்த்தும் பார்க்காமலும்
இருந்தாலும் சற்றும் 
சளைக்காமல் சல சலவென
சொன்னதையே திருப்பி
திருப்பி சொல்லுவதும்
நிமிஷத்துக்கு ஒரு முறை
குறுஞ்செய்திகளை அனுப்பியும்
உயிரை எடுப்பதேனோ
.
.
.
விட்டு தொடரும் பந்தம்
Airtel!!

படம்

அது ஒரு நடு நிசி நேரம்
சோவென்று கொட்டியது மழை
இரவை பகலாக்க முயன்று 
தோற்ற மின்னல்கள்
இருட்டிலே துலாவிய கைகள்
பட்டு உயிர் பெற்ற மின்விளக்கின்
வெளிச்சத்தில் முகம் அலம்ப 
நினைத்து முடியாமல் பச்சை
பொத்தானை அவசரமாக
அமுத்த அய்யோ………….
என்று அலறியது உள்ளம்
டேங்கில் தண்ணீர் 
‘காலி’யானது மட்டுமல்லாமல்
மோட்டரும் அநியாயமாய் தன்
உயிரை விட்டிருந்தது!!

படம்

 

துவையல் செய்வதற்காக
கொத்தமல்லி கரிவேப்பிலை புதினா
சம அளவு எடுத்து சுத்தம் செய்து
வாணலியில் நல்லெண்ணையை காய வைத்து
உளுந்தம் பருப்பு ஒரு கையளவு எடுத்து
போட்டு அது பொன்னிறமானவுடன்
காரத்திற்கேற்ப ஐந்து ஆறு பச்சை மிளகாய்
கிள்ளி போட்டு பத்து பல் பூண்டு உரித்து போட்டு
எலுமிச்சை அளவு புளியும் போட்டு
வதக்கி பின் கொத்தமல்லி கரிவேப்பிலை புதினாவை
அதில் போட்டு வதக்கும் போது எழும்
சுகந்தமான வாசனையின் சுகமான இம்சையில்
அருவியாய் ஜொள் அல்ல வியர்வை ஊற்றெடுக்க
அடுப்படி ஜன்னல் வழியாய் எனக்காகவே
புறப்பட்டு வந்து என் முகத்தை ஸ்பரிசித்து விட்டு
செல்லும் தென்றல் காற்று தான் நிஜமாகவே கவிதை!!

படம்

3 thoughts on “சில எண்ணங்கள் -18

  1. liquid shoe polish பற்றி இப்படி ஒரு “A” கவிதையா? ரசித்தேன்.
    தொடரம் பந்தம் தான் Air tel . இருந்து விட முடியுமா அது இல்லாமல் சில பல நேரம்.
    கவிதையே தென்றலைக் கவிதை என்பதா?
    எல்லா கவிதைகளையும் ரசித்தேன்.

  2. Liquid Shoe Polish___ஹா ஹா ஹா வய்விட்டு சிரித்தேவிட்டேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s