எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

சில எண்ணங்கள் -17

10 பின்னூட்டங்கள்

ஒரு நாள் தாங்கி பிடித்தேன்
மறு நாள் கை நழுவ விட்டேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா…..
என் உயிர் கை பேசியே!

படம்

 

உளுந்தை ஊற வைத்து
நன்கு அரைத்து
உப்பு, வெங்காயம், மிளகாய்,
கரிவேப்பிலையுடன் சிறிது
அன்பையும் சேர்த்து
துளி கூட எண்ணெய்
குடிக்காமல் சுட சுட மெது
வடை சுட்டு குடுத்து
விட்டு ஆசையுடன் கணவரின்
விமர்சனத்தை எதிர்பார்த்தால்
நன்கு ருசித்து புசித்து விட்டு 
சொல்வார் உளுந்து நல்ல
உயர்ந்த ரகம் போல என்று..
முடிவு செய்தாயிற்று
இனி அடுத்த வாரம் வடை 
சுடுவதற்கு பதில் ஒரு
கிண்ணத்தில் இதே உளுந்தை
கொஞ்சம் போட்டு ஸ்பூன்
போட்டு குடுத்து விட
வேண்டியது தான்!!

படம்

நான் எப்போ வருவேன்
எப்படி வருவேன்னு சொல்ல
முடியாது ஆனா மசாலா
நெடி மூக்குல ஏறுகிர ஒவ்வொரு
நொடியும் கண்டிப்பா வந்தே தீருவேன்
.
.
தும்மல்!

படம்

 

வைரசுக்கும் என் மூச்சு
குழாய்க்கும் இடையே
நடந்த ‘வைரஸ்ஸே வெளியேறு’
போராட்டத்தின்
உச்ச கட்டமாய் மூக்கடைத்து
தன் வேலை நிறுத்தத்தை
பகிரங்கமாய் உடம்புக்கு அறிவித்து
இருக்கிறது என் மூக்கு!!

படம்

Advertisements

10 thoughts on “சில எண்ணங்கள் -17

 1. காதோடு தான் பேசுவேன் என்று அடம் பிடிக்கும் செல் மன்னித்து விட்டதா?
  உளுந்தின் மேல் உங்களுக்குப் பொறமையாக இருக்கிறதோ?
  Quit Virus Movement வெற்றி தானே!
  வித்தியாசமான் சிந்தனைகளை ரசித்தேன்.
  நன்றி.

  • ஆமாம் ராஜி மேடம், என் உயிர் கைபேசி ஐம்பதாவது முறையாய் மன்னித்து விட்டது. நல்லவேளை விஜயகாந்த் மாதிரி எனக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு என்று என் கைபேசி அடம் பிடிக்க வில்லை! உளுந்தின் மீது பொறாமை எதுவும் இல்லை, நிஜமாகவே அன்றைக்கு வடை செம சூப்பர்! என் கணவர் தான் வாய் திறந்து சொல்ல மாட்டார், ஆனால் நான் விடாமல், இன்னிக்கு நல்லா இருக்கு இல்ல என்று திருப்பி திருப்பி கேட்டாலும் ஒரே ஒரு உம் மட்டும் கொட்டுவார் 🙂 வெற்றி தான் 🙂 வருகைக்கு நன்றி 🙂

 2. சாதாரண உளுந்தை விட ஊற வைத்த உளுந்து இன்னும் நல்ல வாசனையோட இருக்குமுங்க.இப்படி எல்லாம் கொடுத்திடுவேன்னு பயந்துதான் எங்க வீட்டில் ‘நீ செஞ்சு, நல்லா இல்லாமப் போயிடுமா’ என சொல்லி தப்பித்துவிடுவார்.

  கைப்பேசி,தும்மல் பற்றிய எண்ணங்களும் சுவாரசியமாய் உள்ளன.

  • ஒஹோ ஊற வைத்த உளுந்து இன்னும் வாசனையாக இருக்குமோ! நீங்கள் உண்மையாகவே உளுந்தின் ரசிகை தான் போங்கள்! எனக்கு எப்பவும் பொன்னிறத்தில் வறுக்கப்பட்ட உளுந்தும், வடையும் மட்டுமே புடிக்கும் 🙂 திருமதி. சித்ரா சுந்தர் தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றிகள் 🙂

 3. தும்மல் முதலிடம். அடுத்து வைரஸ். எல்லாவற்றிற்கும் சிகரம் வடை!
  எங்க வீட்டுலேயும் இதே கேஸ்தான். உங்கள மாதிரியே நானும் ‘நல்லா இருக்குல்ல, என்று பல முறை கேட்டு சந்தோஷப்பட்டுக் கொள்வேன்!

  • ஹா ஹா !! ஆமாம் அம்மா, சமையல் நல்லா இருக்கும் அன்று வாயை திறக்கவே மாட்டார், நல்லா இல்லத அன்றைக்கும் வாயை திறக்க மாட்டார், ஆனால் மூஞ்சியை முறைத்து முறைத்து காடுவார் 🙂 நான் எப்பேர் பட்டவள் அன்று அவர் கண் எதிரிலேயே நிற்காமல் சுழன்று சுழறு வேலை செய்வது போல் பாவ்லா செய்து தப்பித்து விடுவேன் 😉

 4. ” நன்கு ருசித்து புசித்து விட்டு
  சொல்வார் உளுந்து நல்ல
  உயர்ந்த ரகம் போல என்று..”

  அவர் இப்படிச் சொன்னால் நீங்கள் உளுந்தைத் தர நினைப்பது சரிதானே!

  • Hello Sir,
   வடை நல்லா செய்து இருக்கிறாயே என்று சொல்வதற்கும், வடைக்கு மூலகர்த்தவாகிய உளுந்தை புகழ்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது! இப்போ சொல்லுங்க சார், நீங்க யாருக்கு சப்போர்ட் பண்றீங்க??

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s