கொசுக்களுக்கு வெண்டக்காய்
ரொம்ப பிடிக்குமோ!!
.
.
.
.
.
.
என் விரலை மட்டும் ஏன்
இந்த கடி கடிக்குது!!
திடுதிப்பென்று வீட்டினுள் வருவார்
இந்த அழையா விருந்தாளி
திருப்பி வீட்டை விட்டு கிளம்புதற்கு முன்
வீட்டில் உள்ள அத்தனை பேரையும்
ஒருத்தர் மாத்தி ஒருத்தராய் கட்டி
அரவணைத்து பிரியா விடை குடுத்தே
செல்வார் இந்த பாசக்காரர்
.
.
.
.
.Viral Infection!!
யாரொருவர் மிகுந்த துயரத்தில்
விக்கி விக்கி அழுதாலும்
நீங்கள் அவருடைய துயரை
துடைக்க பெரியதாக எதுவும்
செய்யாவிட்டாலும், ஒரு டம்ளர்
தண்ணியாவது குடிக்க குடுங்கள்
அவர் விக்கலை நிறுத்துவதற்கு!!
ஒரு திரைப்படத்தை கண்டு
முடித்த பின்னரும் மூன்று
நாட்கள் வரை தூக்கம் வரவில்லை
என்றால் அது திகில் படம்..
அதே தூக்கம் ஒரு திரைப்படத்தை
பார்த்து கொண்டிருக்கும் பொழுதே
மூன்று தடவை வந்தால்
அது துயில் படம்!!
7:48 முப இல் ஓகஸ்ட் 31, 2013
Aaha!..கொசுக்களுக்கு வெண்டக்காய்
ரொம்ப பிடிக்குமோ!!
.என் விரலை மட்டும் ஏன்
இந்த கடி கடிக்குது!!..”’ What a comic!….
பார்த்து கொண்டிருக்கும் பொழுதே
மூன்று தடவை வந்தால்
அது துயில் படம்!!…aaha!..ha!…very good Rasiththen!
Eniya Vaalththu….
Have a nice day (9.47AM…31-8-2013
10:04 முப இல் ஓகஸ்ட் 31, 2013
உங்கள் வருகைக்கும்,படித்து ரசித்தமைக்கும் என்னுடைய நன்றிகள் 🙂
11:16 பிப இல் செப்ரெம்பர் 1, 2013
வெண்டக்காய்
விரலை மட்டுமா கடிப்பார்
கொசுவார்/நுளம்பார்
உடலிலுள்ள செந்நீரை (குருதியை)யும்
குடிப்பாரெல்லோ…
10:07 முப இல் செப்ரெம்பர் 2, 2013
வாங்க சார்,
கொசு கடிக்கும் துன்பம் ஒரு பக்கம் இருந்தாலும், உங்கள் அழகு தமிழ் மொழி நடையை என்னுடைய இந்த பதிவில் பின்னூட்டமாய் காண பெரும் பேறு பெற்றேன் 🙂