எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

சில எண்ணங்கள் -15

12 பின்னூட்டங்கள்

அடேங்கப்பா!
‘Opposite poles attract each other’ என்று
சும்மாவா சொன்னாங்க
தன் கடைசி ஆவி பிரியும் வரை
ரெண்டும் இந்த கடலை போடுது
.
.
.
.
கடாயில் கொதித்து கொண்டிருந்த
எண்ணெய்யை ஏதேச்சையாக
சந்தித்த தண்ணீர் துளிகள்!!

படம்

அரிசி வாங்கும் பொழுது
பழைய அரிசியா என்று கேட்டு 
வாங்குங்கள் இல்லையேல்
புளியோதரை போட நினைக்கும்
தினங்களில் தயிர் சாதம் 
மட்டுமே சாத்தியமாகும்!!

படம்

 

துவைத்து இரண்டு நாட்களே ஆன நிலையில்
மீண்டும் உங்கள் வீட்டு மேஜை விரிப்பில்
சாம்பார் சிந்தி கறையாகி விட்டதா……
கவலை வேண்டாம் ஒரிரு நாள் அப்படியே
விட்டு விடுவீர்களாயின் கறை காய்ந்து
ஒரே சுரண்டலில் உதிர்ந்து காணாமல் போய் விடும்!!

படம்

 

தயவு செய்து 
உங்கள் சமையலறையில்
உள்ள உளுந்தம்பருப்பு
டப்பாவை திறந்து 
நுகர்ந்து பார்த்து 
விடாதீர்கள் மீறினால்
.
.
.
.
முனி அடித்து விடும்!!

படம்

 

பித்தத்தினால் ஏற்படும்
தலை சுற்றல், உமட்டல்
போன்ற நம் உடம்பில்
தோன்றும் அறிகுறிகள்
காணாமல் போவதற்காக
தேனீரில் தட்டி சேர்க்கப்படும்
இஞ்சியை சற்று நிதானத்தோடே
தட்டுங்கள் இல்லையேல்
தட்டிய தட்டில் இஞ்சி
காணாமல் போவது நிச்சயம்!

படம்

12 thoughts on “சில எண்ணங்கள் -15

 1. டீ அதிகம் விரும்புவதால் முதலில் அது பற்றி எழுதுகிறேன். டீயுடன், இஞ்சி தட்டிப் போடும்போது சிலசமயம் டீ திரிந்து விடும். அதற்கு பதில் சுக்கு + மிளகு சேர்த்து பொடி செய்து வைத்துக் கொண்டால் டீயிலும் போடலாம். ஜலதோஷம் பிடிக்கும் போல இருந்தால் சுக்கு+மிளகு பொடி மட்டும் போட்டு கொதிக்க வைத்து சிறிது பால் விட்டு சாப்பிட்டால் தொண்டைக்கு இதமாக இருக்கும்.

  நீர், எண்ணெய் சண்டை சூப்பர்!

  மேஜை விரிப்பின் கறை போவதற்கு கொடுத்த யோசனை சூப்பர் நம்பர் 2!
  புளியோதரையும் தயிர்சாதமும் எப்போதுமே இணை பிரியாதவை. அதனால் அது செய்ய ஆரம்பித்து இது செய்தால் கோவம் வராது! இது எப்படி? இந்த யோசனை சூப்பர் யோசனை நம்பர் 3!

  • சுக்கும், மிளகும் போட்டு குடித்து விட்டு, எப்படி இருந்தது என்று கூடிய விரைவில் தெரிவிக்கிறேன் அம்மா! நான் இவ்வளவு நாள் உங்களுக்கு காபி தான் பிடிக்கும் என்று நினைத்து கொண்டிருந்தேன் 🙂 படித்து ரசித்தமைக்கு மிக்க நன்றி அம்மா!

   • எனக்கு காபி தான் பிடிக்கும். ஆனால் பிள்ளை, பெண் இவர்களுடன் கம்பெனி கொடுப்பதற்காக குடித்து குடித்து டீ ரசிகை ஆகிவிட்டேன்!

   • நானும் காபிக்கு தான் முதலில் ரசிகை! ஆனால் திருமணத்துக்கு பின் கணவருடன் சேர்ந்து இஞ்சி, ஏலக்காய் மணக்க தேனீரின் ரசிகை ஆகி விட்டேன் அம்மா!

 2. “வயிறு சமிபாடு அடையாவிட்டால்
  இஞ்சித் தேத்தண்ணி
  நல்ல மருந்தாகும் கேட்டியளோ!” என
  தங்கள் பதிவு நினைவூட்டுகிறதே!

  • வணக்கம் சார்!
   முதலில் உங்கள் வருகைக்கும்,பதிவை படித்து ரசித்தமைக்கும் மிக்க நன்றி!
   ஆமாம் சார், பித்தத்தால் வருந்தும் ஏனையோருக்கு இந்த இஞ்சியும் தேத்தண்ணீருமே நல்லதொரு மருந்து!!

 3. எண்ணெயும் தண்ணீரும் கடலை போடுவது சூப்பர்.உங்க எல்லா எண்ணங்களையும் ரசித்துரசித்துப் படித்தேன்.

  முதலில் காபி மட்டுமே குடித்த நான் பிறகுதான் டீக்கு மாறினேன்.அதிலும் எனக்கு ப்ளெய்ன் டீ தான் பிடிக்கும்.அப்படியே வேறு டீ குடிக்க நேர்ந்தாலும் மீண்டும் ஒரு சாதா டீ போட்டுக் குடித்தால்தான் நிம்மதியாகும்.

  • வணக்கம் மேடம்! வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!
   நானும் நிறைய பேர் சொல்லி கேட்டு இருக்கிறேன், ப்ளாக் டீ நன்றாக இருக்கும் என்று! இன்று வரை சுவைத்ததில்லை! ஒரு தடவையாவது போட்டு குடித்து பார்க்கிரேன் 🙂

   • உங்க பதிலைப் பார்த்து அடித்துப்பிடித்து ஓடி வந்தேன்.நானும் ப்ளாக் டீ குடித்ததில்லை.பால் சேர்த்து சாதாரணமாக போடும் டீயைத்தான் ‘ப்ளெய்ன் டீ’ன்னு சொன்னேன்.ஒரு நாளைக்கு ப்ளாக் டீ குடிச்சுட்டு உங்க எண்ணத்தை வந்து எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

    ‘மேடம்’லாம் வேண்டாங்க.பெயர் சொல்லியே கூப்பிடுங்க.உங்கள் எண்ண நீரூற்றை இந்தப் பக்கமும் http://chitrasundars.blogspot.com/ கொஞ்சம் திருப்பிவிடுங்க,செழித்து வளரட்டும்.

 4. சின்ன சின்ன சமையல் குறிப்புகளுடன் நகைச்சுவையையும் அளவாய் கலந்து கொடுத்து பதிவை ருசிமிக்கதாக்கி விட்டீர்கள்.

  நான் மிகவும் ரசித்தது , எண்ணெய்யும் ,தண்ணீரும் இறுதிவரை ஒன்றாக இருந்தே தீருவது என்று போராடுவது பற்றி எழுதியிருந்த கவிதை.

  நன்றி பகிர்விற்கு.

  • வணக்கம் மேடம்!
   நான் உங்களை ரசிக்க வைத்தது என்னவோ கடுகு அளவு தான்! நீங்கள் உங்கள் ‘ராசி சூப்பர் சிங்கர் ஆகிராள்’ பதிவு மூலம் என்னை வானளவு உங்களின் எழுத்தின் ரசிகை ஆக்கிவிட்டீர்கள் 🙂

   • என் எழுத்தை இப்படி வானளவா புகழ்கிறீர்களே! மிக்க நன்றி மகா. மகா என் ரசிகை ஆவதற்கு நானுமே கொடுத்து வைத்திருக்க வேண்டும். நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s