எங்கோ இருக்கும் நெசவாளி
தறியில் பட்டு நூல் கோர்க்கும்பொழுதே
இந்த சேலை இந்த பெண்ணுக்கு தான்
என்று நினைத்து கொண்டே நெய்வார்..
கொஞ்சம் மெதுவா சொல்லும்மா திரிஷா
நெசவாளியின் வீட்டுக்காரம்மவுக்கு
கேட்டுட போவுது!!
எந்த ஒரு கல்யாண வீட்டுக்கு
சென்றாலும் அங்கே வரும் அழகான
மூக்கும் முழியுமாய் வரும் திருமதிகளை
பார்த்து விட்டு ‘இந்த பெண்ணை எனக்கு தான்
முதலில் பார்த்தார்கள்’ என்று மனைவியிடம்
பெருமையடிக்கும் ஆண்களே….
ஒன்று தெரிந்து கொள்ளுங்கள்
உங்கள் மனைவி அந்த பெண்ணை
பார்த்து பெருமூச்சு விட்டு
கண்டிப்பாக மனதினுள் எண்ணுவாள்
தப்பிச்சிட்டியேடி!!!
பிள்ளைகளை ஸ்கூலுக்கு கிளப்பி விட
இன்னும் ஐந்து நிமிடங்களே பாக்கி
இருக்கும் போது தான் ஃபோன் வரும்..
கண்ட நேரத்தில யாருனு எரிச்சலோட
நீ எடுடா என்று பையனை கை நீட்ட
அவனும் ஃபோனை எடுத்து ரிசீவரை
காதில் வைத்து விட்டு
பொய்யான வருத்தம்
குரலில் தொணிக்க சொன்னான்
‘என்னது ஸ்கூல் லேதா???’
அதை கேட்டு அதிர்ச்சியடைந்த நான்
ரிசீவரை பிடுங்கி காதில் வைக்க
எவரோ ‘விஷ்ணு லேதா? ‘நு கேட்டு
கொண்டு இருந்தார்…..
அவங்கவங்க பிரச்சனை அவங்கவங்களுக்கு!!
‘பார்பீ ஸ்டிக்கர் இருந்தா வாங்குங்க
இல்லையா டொரேமான் ஸ்டிக்கர்
வாங்கிடுங்க…
எங்க கிளாஸ் பொண்ணுங்களுக்கு
இந்த இரண்டும் தான் புடிக்கும்’
ரக்சா பந்தனை இன்று ஸ்கூலில்
கொண்டாட போகும் என் பையன்!!
யாருடைய கவனத்தையும் ஈர்க்காமல்
இருப்பதற்க்காக அணிய படுகின்ற
உடைகள் கூட பளிச் பளிச் என்று
கண்ணை சிமிட்டி நம்மை திரும்பி
பார்க்க வைக்கிறது
.
.
.
.
வெள்ளை நிற கற்கள் பதிக்கபட்டு
அழகு வேலைப்பாடுகள் செய்யப்பட்ட
பர்தாக்கள்!!!
5:55 முப இல் ஓகஸ்ட் 24, 2013
“பார்பீ ஸ்டிக்கர் இருந்தா வாங்குங்க
இல்லையா டொரேமான் ஸ்டிக்கர்
வாங்கிடுங்க…
எங்க கிளாஸ் பொண்ணுங்களுக்கு
இந்த இரண்டும் தான் புடிக்கும்’
ரக்சா பந்தனை இன்று ஸ்கூலில்
கொண்டாட போகும் என் பையன்!!”
arumaiyana sinthanai !!!
🙂
4:45 முப இல் ஓகஸ்ட் 26, 2013
Thanks a Lot 🙂
2:24 முப இல் ஓகஸ்ட் 25, 2013
//“பார்பீ ஸ்டிக்கர் இருந்தா வாங்குங்க
இல்லையா டொரேமான் ஸ்டிக்கர்
வாங்கிடுங்க…
எங்க கிளாஸ் பொண்ணுங்களுக்கு
இந்த இரண்டும் தான் புடிக்கும்’
ரக்சா பந்தனை இன்று ஸ்கூலில்
கொண்டாட போகும் என் பையன்!!”//
இதைப் அப்டித்து விட்டு வாய் விட்டு சிரித்தேன்.
த்ரிஷா புடவை நெய்த நெசவாளி மேல் உங்களுக்கு என்ன கோபம். ?பாவம் அவர் குடும்பத்தில் குழப்பம் வரவழைத்து விடுவீர்கள் போலிருக்கிறதே!
4:48 முப இல் ஓகஸ்ட் 26, 2013
எத்தனையோ பேரை உங்கள் எழுத்தால் வாய் விட்டு சிரிக்க வைக்கும் உங்களை நான் சிரிக்க வைத்தது என்னுடைய பாக்கியம்! வருகைக்கும் கருத்துக்கும் என்னுடைய நன்றிகள் 🙂
9:39 முப இல் ஓகஸ்ட் 27, 2013
ஒவ்வொரு அரிசியின் மேலும் அதை சாப்பிடப் போகிறவரின் பெயர் எழுதியிருக்கும் போது, அணியப் போகும் புடவையின் மீது அவரவர்கள் பெயர் எழுதியிருக்காதா? (ச்சும்மா!)
சமீபத்தில் நான் வாங்கிய புடவையில் என் பெயர் இல்லை. திடீரென்று வந்த முக்கியமான விருந்தளிக்குக் கொடுத்துவிட்டேன்!
சமீபத்திய பயணத்தில் சில பெண்கள் அணிந்திருந்த பர்தாக்களைப் பார்த்து அசந்து விட்டேன். என்ன வேலைப்பாடுகள். ஒரு பெண் கையில் போட்டிருந்த டிசைன் தங்க வளையல்கள் அணிந்திருந்தது போலவே இருந்தது. நீங்கள் போட்டிருக்கும் டிசைனில் கூட அந்தப் பெண்களில் ஒருத்தி அணிந்திருந்தாள்!
எண்ணங்கள் புதுமை! சாதாரணமாகப் பார்ப்பவற்றை அசாதாரணமுறையில் சொல்லியிருப்பது நன்றாக இருக்கிறது.
9:57 முப இல் ஓகஸ்ட் 27, 2013
போத்தீஸ் விளம்பரத்தை டீவீயில் பார்த்த போது, நானும் அவசர அவசரமாக, நான் கட்டி இருந்த சேலையில் ஏதாவது பெயர் இருக்கிரதா என்று பார்த்தேன்! ஏக்தா என்ற பெயர் இருந்தது, ஐயையோ, ஏக்தா கபூர் சேலை, தெரியாமல் நம்மிடம் வந்து விட்டதே, என்று வருந்தினேன் 🙂 அம்மா ஒரு விஷயம் தெரியுமா, என் கணவர் முதல் போத்தீஸ் எண்ணத்தை படித்ததுக்கப்புரம், அந்த போத்தீஸ் விளம்பரத்தை டீவீயில் பார்த்து அடக்க முடியாமல் சிரித்தார் 🙂