எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

சில எண்ணங்கள் -11

6 பின்னூட்டங்கள்

போனவுடன் கடிதம் போடு
புதினாவும் கீரையும் சேரு
புத்திமதி சொல்லும் தாயின்
மொழியே இல்லை!
ஏன் என்றால்………….
.
.
.
.
.
.
Whatsapp இருக்கே
தூரமில்லை!!!

படம்

அதிகாலையிலே உங்கள்
வீட்டின் சமையலறையில்
பூக்கின்ற பளிச் வெள்ளை நிற
பூக்கள் தீடீரென்று சற்றே
சிவந்து சிவந்து பூத்தால்
நீங்கள் தேங்காய் துறுவிய
கையோடு தேங்காய் மூடியையும்
சேர்த்து தூக்க கலக்கத்தில்
துறுவுகிறீர்கள் என்பதை
நினைவில் கொள்ளுங்கள்!!

படம்

மிளகு இருக்கும்
வறுத்த முந்திரி கிடக்கும்
வெண்பொங்கல் அல்ல
வேக வைத்த நிலகடலை அலங்கரிக்கும்
புளியோதரை அல்ல
ரொம்பவும் குழைவாக இருக்கும்
தயிர் சாதமும் அல்ல
ப்ரவுன் நிறத்தில் நெய்யில் வறுத்த
முந்திரி மிளகு நிலகடலையால்
அலங்கரிக்கபட்டு மிதமான காரத்துடன்
கடைசி வாய் சாப்பிடும் வரை 
சூடு தாங்க முடியாமல் நாக்கு
அலற அலற, என்னவாக இருக்கும் என்ற
ஐயம் தீராமலேயே வயிற்றினுள் தள்ளினால்
அதுவே குண்டூர் பெருமாள் கோவில் பிரசாதம்!

படம்

ஏழு ஸ்வரங்கள் உண்டு செய்யும்
மாயங்களில் அவ்வபொழுது
தொலைந்து போகும் எனக்கும்..
பள்ளியில் இருந்து பிள்ளைகள்
வீடு திரும்ப தாமதமாகும்
ஒவ்வொரு நொடியும் ஆட்டோவின்
பேரிரைச்சலை தவிர மற்ற எல்லா வகை 
இசையும் நாராசமாகவே ஒலிக்கின்றது!

படம்

மிஸ் பண்ணவே 
கூடாத விஷயங்கள் இரண்டு…
.
.
.
.
.
.
.
.
1)கத்தி
2)குக்கர் வெயிட்
இல்லாட்டி போனா
அன்றைய நாள் முழுக்க
சமையலறையினுள்
நீங்கள் தொலைந்து
போய் விடுவது நிச்சயம்!

படம்

6 thoughts on “சில எண்ணங்கள் -11

  1. மிக சுவையாக உள்ளது பதிவு.
    எடுத்த வேகத்தில் வாசித்தேன்…sis…..
    மிக நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

  2. I miss you நான் தோசை மாவிடம் கூட சொல்வது உண்டு.
    உங்கள் கவிதைகள் ,உங்களின் வித்தியாசமான் சிந்தனைகளை சொல்கிறது.
    அருமையான சிந்தனை.

  3. தூக்கக் கலக்கத்தில் தேங்காய் துருவலும், குண்டூர் பெருமாள் கோவில் பிரசாதமும் ரசிக்க வைத்த எண்ணங்கள்.
    எல்லா இளம் தாய்மார்களுக்கும் நீங்கள் சொன்ன இசைதான் பிடித்த இசை.
    கத்தி, குக்கர் வெயிட் இரண்டையும் கைதவறி எங்கேயும் வைத்துவிடக் கூடாது. சரியாகச் சொன்னீர்கள்.

    எண்ணங்கள் நாளுக்கு நாள் மெருகேறி வருகின்றன. வாழ்த்துக்கள்!

ranjani135 -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி