எந்த கொம்பனாலையும்
எடுக்க முடியாத
வெள்ளை துணிகளில் படியும்
கலர் சாய கரைகளை
சும்மா அசால்ட்டா ஒரே
சலவையில் நீக்கிடுவான்
இந்த கும்கி
AMWAYயின் SA8!!
பஸ்ஸில் சீட் இருப்பது
போல் கண் கட்டு வித்தை
காட்டினால் அவர்
MAKE MY TRIP.COM
பஸ்ஸில் சீட் இருக்குதா
என்று நோட்டம் விட்டாலே
போதும் அடுத்த நிமிஷமே
கர்சீப் போடாத குறையாய்
ஒரு சீட்டை பிடித்து நம்மை
திக்குமுக்காட வைப்பார்
TRAVELYAARI.COM!!
ஒரு பாவமும் அறியாமல்
தான் உண்டு தன் வேலை உண்டு
என்று தேமேனு இருக்கும் போதும்
நீ இந்த தப்பு பண்ணிட்ட
அந்த தப்பு பண்ணிட்ட என்று
கூசாமல் பொய் சொல்லி
கழுத்தை புடிக்காத குறையாய்
வெளியே தள்ளி விட்டு
அடுத்த நொடியே உள்ள வா வா
என்று அழைக்கும் அவரின்
சொல்லுக்கு உடன்பட்டு மானம்
கெட்டு நாமும் உள்ளே நுழைந்தால்
அவரே IRCTC!!
நேற்று இரவிலிருந்து
எடுத்ததெற்கெல்லாம்
சள் புள்ளு என்று
எறிந்து விழும் என்னை
பார்த்த பின் நிச்சயமாக
என் கணவருக்கு புரிந்திருக்கும்
நேற்று இரவு கோமா நிலைக்கு சென்ற
ஸ்டெபிலைசர், இது நாள் வரை
ஃப்ரிஜின் வோல்டேஜை
மட்டும் கண்ட் ரோல் செய்யவில்லை
தன் மனைவியின் மனநிலையையும்
சேர்த்து தான் என்று!!
போட்டு விட்டு பிள்ளைகள்
பந்தும் கையுமாய்
விளையாட கிளம்பினால்
.
.
.
.
.
.
.
அன்று பந்த்!!
ஒன்னு எடுத்து சாப்பிடுவதும்
Rinogel மருந்து பாட்டிலை திறந்து
ஒரு 10 மில்லி வாயில் ஊற்றிகொள்வதும்
சாத் சாத் ஒன்று தான்!!
9:34 முப இல் ஓகஸ்ட் 14, 2013
நிஜமாகவே amway SA8 நன்றாக அத்தனை இருக்கிறதா?
IRCTC பற்றிய எண்ணங்கள் நூறு சதவிகிதம் உண்மை! ஆனால் நான் விடாமல் ‘புக்’ செய்து அதை அவமானப்படுத்தி விடுவேன்!
மனைவியின் மனநிலையையும் stabilize செய்யும் stabilizer கணவன் அல்லவா?
கடைசி கவிதை ஆல்பேன் லிபி பற்றியது – சரியாகப் புரியவில்லை. இரண்டும் நன்றாக இருக்காதா?
எண்ணங்கள் தொடரட்டும்!
9:43 முப இல் ஓகஸ்ட் 14, 2013
அம்மா வாங்க, ஆம்வேயில் SA8 ஒன்று நிஜமாகவே நன்றாக இருக்கும்! நிறைய தடவை என் கணவரிடம் திட்டு வாங்காமல் என்னை காப்பாற்றி இருக்கிறது 🙂 கடைசி கவிதையில் வரும் Rinogel தொண்டை வலிக்கு குடுக்கபடும் ஒரு மருந்து! ரொம்ப நேரம் அந்த மருந்தின் சுவை வாயை விட்டு அகலாமல் உயிரை வாங்கும் 🙂
1:17 பிப இல் ஓகஸ்ட் 14, 2013
Reblogged this on srinivasan s.
3:08 முப இல் ஓகஸ்ட் 15, 2013
Amway SAB நான் உப்யோகிபடுத்திப் பார்த்ததில்லை.
அவ்வளவு நன்றாக இருக்குமா என்ன!
Yatra.com விட்டு விட்டீர்களே!
irctc எங்களை எவ்வளவு அவமானப் படுத்தினாலும் நாங்கள் லட்சியம் செய்வதில்லை.
ஒரு கன்னத்தில் அடித்தால் என்ன… மறு கன்னம் இருக்கிறதே அதிலேயும் அடி வாங்கிக் கொண்டு தான் வருவோம் என்று நினைப்பவர் நாங்கள்.
8:43 முப இல் ஓகஸ்ட் 16, 2013
ஆம்வேயில் SA8 ஒன்று நிஜமாகவே நன்றாக இருக்கும்! நிறைய தடவை என் கணவரிடம் திட்டு வாங்காமல் என்னை காப்பாற்றி இருக்கிறது 🙂
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
5:35 முப இல் ஓகஸ்ட் 16, 2013
Very good morning! …VIJI!…..here in Denmark7.33 AM.
சிலவற்றைப் புரிந்தும் புரியாமலும், சகோதரி ரஞ்சனி பதிலாலும் ஓரளவு புரிந்து கொண்டேன். முதலில் உண்மைத் தகவலா என்று சந்தேகமும் வந்தது. உண்மைத் தகவல் என்று எழுதினால் என்ன!
ஆனாலும் ரெம்பப் புத்திசாலி நீங்க! …..
ஐடியா எழுத வர வேண்டுமே!
(எனக்கு வரவில்லை…like this….)
அனபு வாழ்த்து. விஜி!… மிக மகிழ்ச்சி.
வேதா. இலங்காதிலகம்.
8:41 முப இல் ஓகஸ்ட் 16, 2013
வாங்க Sister!
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!