எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

சில எண்ணங்கள் -8

6 பின்னூட்டங்கள்

கண்கள் இமை கொட்ட மறந்து
கருவிழிகள் நிலையில்லாமல் அலைந்து
இன்றே முடித்து விட துடித்து
அத்தகைய ஆர்வ வெறி
தீரும் வரை கருக் முருக்
என்று பசி இல்லாமலே 
நொறுக்கு தீனிகளை
வெறியாய் கபளீகரம்
செய்து கொண்டு ஒருவர் இருப்பாராயின்
அவரே 100% புத்தக புழு!!

படம்

 

துன்பம் வரும்
ஒவ்வொரு நொடியும்
பூவாய் சிரித்து
பிறரையும் மகிழ்விக்கும்
பெருமை பொறியும் அத்தனை
சோள முத்துகளையும் சாரும்
பாப்கார்ன்!!

படம்

பேசா மடந்தையாய்
கடை தெருவுக்கு சென்று
வேலைகளை முடிக்கும் என்னையும்….
‘சூடண்டி..
ஒக்க பாட்டிலுக்கு ஒக்க பாட்டில் ஃப்ரீ’
என்று பில் போடும் கடை பணியாளர்
கவனிக்க தவறிய 1+1 ஆபரை…
பேச தயங்கிய அந்நிய பாஷையில்
ரௌண்டு கட்டி பேச வைத்தால்
அதுவே ஆபர் செய்யும் மகிமை!!

படம்

 

ஆசை நரைக்கும் முன்னரே
மீசை நரைத்து விடுகிரது
.
.
.
.
கப்பில் பால் குடிக்கும் குழந்தைகள்!!

படம்

அம்மா : What do Hawkers sell in Railway Station?
பையன்: Hawkers sell various things such as, Books….. Books…..Books……….!!!
பொறுமை இழந்து போய் அம்மா சொல்லுவா……
ஆமா..புக்க மட்டும் எல்லாரும் வித்துட்டு இருந்தா அன்னைக்கு வியாபாரம் அவங்களுக்கு விளங்கினா மாதிரி தான்!!

 படம்

6 thoughts on “சில எண்ணங்கள் -8

 1. பாப்கார்ன் கவிதை அருமை நல்ல வித்தியாசமாய் சிந்திக்கிறீர்கள்.
  எல்லா கவிதையுமே ரசிக்க வைத்தன.
  வாழ்த்துக்கள்…..

 2. ”..கருக் முருக்
  என்று பசி இல்லாமலே
  நொறுக்கு தீனிகளை
  வெறியாய் கபளீகரம்
  செய்து கொண்டு ஒருவர் இருப்பாராயின்
  அவரே 100% புத்தக புழு!!..” வியப்படைய வைக்கும் சிந்தனைகள் மிக ரசித்தேன்.
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

 3. புத்தகப் புழு மட்டுமில்லை – கணணி வெறியர் ஆகவும் இருக்கக்கூடும். நான் கணனியில் எழுதும்போது தின்னுவதற்கு இருந்துவிட்டால்….ஆஹா! சொர்க்கமே…!

  ஆபரின் மகிமையைத் தெரிந்து கொண்டேன். தெலுங்கு பேச ஆரம்பித்துவிட்டீர்கள் போலிருக்கிறதே!

  உங்கள் நாய்க்கு இன்று நிறைய பிஸ்கட் போட்டேன்!

  • என் நாயும் என்னை போலவே, உங்கள் வருகைக்காக தான் எல்லா நாளும் காத்திருக்குதோ என்னமோ! நான் காத்திருப்பது உங்கள் பின்னூட்டதிற்காக, என் நாய் காத்திருப்பது, உங்கள் அன்புக்காக 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s