எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

சில எண்ணங்கள் -4

4 பின்னூட்டங்கள்

படம்

டீ.ஏ மதுரம் காலத்தில் இருந்தே
பெண்கள் காணும் ரகசிய கனவுகளில் ஒன்று
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
‘ஒரு பட்டனை தட்டி விட்டா
ரெண்டு தட்டுல இட்லியும் சாம்பாரும்
பட்டுனு வந்திடனும்’

படம்

தெலுங்கானாவை
29வது மாநிலமாய்
அறிவித்தாலும் அறிவித்தார்கள்
இரண்டாவது நாளாகியும்
வன்முறைகள் தலை விரித்து 
ஆடுகின்றன வீட்டினுள்
பசங்களுக்கு பள்ளி விடுமுறை!!

படம்

துகிலுரித்த 
சில நிமிடங்களிலேயே
கொதிக்கும் குழம்பிலேயோ
வதங்கும் கூட்டிலேயோ
விழுந்து தன் இன்னுயிரை
மாய்த்து கொள்கிறது
மானமுள்ள வெங்காயம்!!

படம்

கண் முன்னே இருந்த போதிலும்..
என் வண்டி சாவி பாத்தியா
என் சாக்ஸ் எங்க
போன் புக் எங்க.. என்று
காலையிலேயே பரபரக்கும் கணவருக்கும்,
என் ஐ.டீ கார்ட் எங்க
என் பெல்ட் எங்க
என் பென்சில் எங்க..என்று
ஆட்டோ வரும் வரை அலறும் பையனுக்கும்
நான் சொல்ல நினைத்ததெல்லம்
ஒன்றே ஒன்று தான்
நான் ஒன்றும் Search Engine இல்ல!!

4 thoughts on “சில எண்ணங்கள் -4

  1. நான் ஒன்றும் search engine இல்ல – எல்லோருமே சொல்ல நினைத்து சொல்லாமல் விடுவது! இதையே முன் காலத்தில் நான் என்ன வேலைக்காரியா? என்று மனதிற்குள் நினைத்துக் கொள்வோம்……. இப்போ தொழில்நுட்பம் வளர்ந்து search engine ஆயிடுத்து!
    வெங்காயத்துக்கு கவிதை!!! நல்லாத்தான் இருக்கு!

  2. திருமதி ரஞ்சனி சொல்வது போல் வேலைக்காரியா என்பது ஸ்டைலா search engine ஆகிவிட்டது தெரிகிறது. நானும் இனிமேல் நான் என்ன search engine இல்லையே என்று சொல்லப் போகிறேன்.

    மானமுள்ள வெங்காயத்தைப் பார்த்தால் பாவமாகத்தான் இருக்கிறது. இப்ப தான் வெங்காய சாம்பார் வைத்து விட்டு வந்து பார்த்தால் வெங்காயத்திற்கு, இரங்கல் கூட்டம் நடக்கப் போவது தெரிகிறது.

    நன்றி அருமையான கவிதைகள் பகிர்வதற்கு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s