கணவர் கோபத்தில்
வீசி எறியும்
வார்த்தை பந்துகளை
பதில் வார்த்தைகளால்
அடிக்காமல் விடுவதும்,
சுழற்றி சுழற்றி
விளாசி சிக்சர் அடிப்பதும்
ஒவ்வொரு மனைவியின்
சாமர்த்தியத்தை பொறுத்த விஷயம்!!
அந்நிய தேசத்தில்
வளரும் நம் தேசத்து
குழந்தைகளுக்கு
தாத்தா பாட்டி என்பவர்கள்
கம்ப்யூட்டர் ஜன்னல் வழியாக
அவ்வப்பொழுது எட்டி பார்த்து
பிஞ்சு மனங்களை
குதூகலிக்க வைப்பவர்கள்
Skype!
எனக்கு புரியாத புதிர்களில் இதுவும் ஒன்று
சில சமயம் இழுத்த முதல் இழுப்பிலேயே
தன் தையலை பிரித்து விடும் அரிசி பை
பற்பல நேரங்களில் என்னை
முழி பிதுங்க வைப்பது ஏனோ!!!
Twist பண்ணு
Lick பண்ணு
Dunk பண்ணு
அப்படியே
.
.
டாக்டர்ருக்கு கால் பண்ணு
அப்பாய்ன்ட்மென்ட் பிக்ஸ் பண்ணு
OREO!!
3:41 பிப இல் ஜூலை 29, 2013
வணக்கம்
சகோதரி
படித்தேன் ரசித்தேன் பதிவு அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
4:21 முப இல் ஜூலை 30, 2013
தேடி வந்து, படித்து ரசித்தமைக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் சகோதரா!!
4:38 பிப இல் ஜூலை 29, 2013
பதிலுக்கு அடிக்காமல் விடும் சாமர்த்தியம் தான் வேண்டும் – சண்டைகளை தவிர்க்க!
தாத்தா பாட்டி பற்றிய கவிதை நிஜம்.
எனக்குக்கூட அரிசிப்பை சிலசமயம் இதுபோல படுத்தும்.
ஓரியோஅதிகம் சாப்பிடுவது நல்லதில்லையா?
4:18 முப இல் ஜூலை 30, 2013
வாங்க அம்மா, OREO 30 ரூபாய் கொடுத்து வாங்கி, 300 ரூபாய் டாக்டரிடம் கொடுக்கும் பெற்றோர்கள் நிறைய பேர் 🙂
8:19 பிப இல் ஜூலை 31, 2013
”..சில சமயம் இழுத்த முதல் இழுப்பிலேயே
தன் தையலை பிரித்து விடும் அரிசி பை
பற்பல நேரங்களில் என்னை
முழி பிதுங்க வைப்பது ஏனோ!!!…”’
This is happening to me also…..good…congratz.
Vetha.Elangathilakam.
4:08 முப இல் ஓகஸ்ட் 1, 2013
நன்றி நன்றி சகோதரி!
10:35 முப இல் ஓகஸ்ட் 6, 2013
உண்மை தான், அரிசி மூட்டையும் சிமெண்ட் மூட்டையும் இப்படிதான் மூச்சு முட்டும் சில நேரங்களில்
6:16 முப இல் ஓகஸ்ட் 7, 2013
Bomb defuse செய்வதை போல தான்! வருகைக்கு நன்றி 😀
5:38 முப இல் ஓகஸ்ட் 23, 2013
சிரிக்க வைத்ததுடன் சிந்திக்கவும் வைத்த பதிவு பாராட்டுக்கள்
10:01 முப இல் ஓகஸ்ட் 23, 2013
உங்கள் வருகைக்கும், படித்து விட்டு ரசித்தமைக்கும் என்னுடைய நன்றிகள் மேடம் 🙂
4:20 பிப இல் திசெம்பர் 21, 2013
அந்நிய தேசத்தில்
வளரும் நம் தேசத்து
குழந்தைகளுக்கு
தாத்தா பாட்டி என்பவர்கள்
கம்ப்யூட்டர் ஜன்னல் வழியாக
அவ்வப்பொழுது எட்டி பார்த்து
பிஞ்சு மனங்களை
குதூகலிக்க வைப்பவர்கள்//
உண்மை.
4:41 முப இல் திசெம்பர் 23, 2013
ஆம் மேடம்! கணினி புரிந்த அற்புதங்களில் இதுவும் ஒன்று! வருகைக்கும், கருத்துக்கும் என் நன்றிகள் 🙂