எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

சிரிக்கலாம் வாங்க-5

7 பின்னூட்டங்கள்

laughing

இமை மூடி திறப்பதற்குள்,
மீண்டும் அது நிகழ்ந்துவிட்டிருந்தது,
மோசமாய் கசங்கி, ஈரமாய், பழுப்பேரிய நிறத்தில்,
இருந்த சண்டே மேகசின் பேப்பரை,
கையில் பிடித்தவாறு,ஙே!! என்று விழிக்க,
ஒரு நொடி முன் ,ஒடி வந்து,
கழுத்தை இருக்க கட்டிய
கடைகுட்டி பையன்,
டீ கொட்டியது பத்தாது என்று,
அன்பையும் சேர்த்து கொட்டி கொண்டிருந்தான்,
என் கன்னத்தில் !!

 

சட்னி அரைப்பதற்க்காக,
ஓட விட்ட ,
மிக்ஸ்யின் திடீர் ,
அலறல் சத்தம் கேட்டு,
மறைந்து இருந்த,
இடத்தை விட்டு,
உயிரை கையில்,
பிடித்து கொண்டு ,
திடு திடுவென்று,
ஜன்னல் பக்கமாய்,
ஓடிய மரபல்லியை,
பார்த்து, நானும்,
வீ ல்……………………
என்று அலறி கொண்டே ஓடினேன்!!!

 

புதுசா இருக்கும் போது,
அலுங்காம, குலுங்காம,
ரொம்பவும் சூதானமாய்,
கையாளப்படும் பாத்திரங்கள்,
கொஞ்சம் ஈ…… என்று,
பல் இளித்தவுடன்,
டமால், டுமீல் என்று,
கையாளப்படுவது,
சமயலறையில்,
மறைந்திருக்கும்,
கசப்பான உண்மையில் ஒன்று!

 

இந்த திங்கட்கிழமை எல்லாம்,
எதுக்கு தான் வருதோ,
பாசக்காரங்க எல்லாம்,
பகையாளிகளா மாறிடறாங்க…
எட்டு மணிக்குள்,
ஸ்கூலுக்கு கிளம்பும் என் பிள்ளைகள்!!

Advertisements

7 thoughts on “சிரிக்கலாம் வாங்க-5

  1. வணக்கம்
    சகோதரி

    பதிவு அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

  2. எல்லாம் நன்றாக இருந்தாலும் ரொம்பவும் பிடித்தது ‘டீ கொட்டி, கூடவே அன்பையும் கொட்டிய ‘ உங்கள் குழந்தையை!

    வாழ்த்துக்கள்!

  3. வீடுகளில் நடக்கும் சண்டையின் போது பாத்திரங்கள் பறக்கும். ஆனால் புதிய பாத்திரங்கள் அல்ல! பழையவை மட்டுமே உண்மை என்னவெனில் “ச்சே இவனை அடிக்க புதுசா வாங்கின பாத்திரம் எதுக்கு? இந்த மண்டைக்கு பழசே அதிகம்…” என்பது தான் 😜😜😜

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s