எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ஒளிந்திருந்த முகம்- 3

13 பின்னூட்டங்கள்

படம்ரகசிய அறைக்குள் செய்வதரியாது தவித்த பெலென், அந்த ரகசிய அறையிலிருந்து தப்பிக்க ஏதாவது வழி இருக்கிரதா என்று தேடுகிராள். தன்னிடம் உள்ள வேறு சாவிகளை வைத்து, அந்த கதவை திறக்க முற்படுகிராள். அவள் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிகின்றன.. அந்த அறைக்குள், தண்ணீருக்கென்று ஒரு குழாய், அதை திறந்தால், செம்மண் கலந்த நீர் வெளிவருகிரது.. அதன் உள்ளே இருந்த அலமாரியில், அந்த வீட்டின், உறிமையாளரின், சில துணிமணிகள், அந்த வீட்டின் உடைய வரைபடம் எல்லாம் இருக்கிரது. அது போக, சில பதப்படுத்தப்பட்ட உணவும் அவள் கண்ணில் தென்படுகிரது. அந்த உணவு, எத்தனை நாளுக்கு முற்பட்டதோ, அது அடைக்கபட்ட டப்பாவை திறந்து, சிறிது தன் வாயில் வைத்து ருசி பார்க்கிராள்! பெலெனுக்கு குமட்டி கொண்டு வந்தது. பிறகு வேறு வழி தெரியாமல், அதையே தன் பசிக்கு இரையாக்குகி றாள். படம் இரு நாட்களாய், பெலென் பிறிந்து சென்ற துக்கம் தாங்க முடியாமல், குடியிலேயே தன் பொழுதை களித்தவன், அந்த நேரத்தில் ஒரு முடிவுக்கு வந்தவனாய், தன் காயத்துக்கு மருந்தாக செயல்பட்ட, பாரில் வேலை செய்யும் Fabianaவை தேடி செல்கிரான். அவளிடம் சென்று, தனக்கு அவளை பிடித்திருப்பதாகவும், தன்னோடு, தன்னுடைய தோழியாய், காதலியாய், தன் வீட்டிற்கு வருமாறு வேண்டுகிரான். முதலில், சிறிது தயக்கம் காட்டும் Fabiana, பிறகு, அவனுடைய, அழகு, திறமை,பணம், புகழுக்கு அடிமையாகி, அவனுடன், அவனுடைய வீடு வந்து சேர்கிராள்.படம் திடுதிப்பென்று, சம்பந்தமே இல்லாமல், யாரையோ,தன் படுக்கையறை வரை அழைத்து வரும், Adrianனை பார்த்து, உள்ளம் கொதித்து போகிராள் பெலென். அதிர்ச்சியடையும் அவள்,புதிதாக பெய்த மழையில் முழைத்த காளான் போல் வந்திருக்கும் Fabianaவை வாய்க்கு வந்தபடி திட்டுகிராள். தன் இடத்தில் வேறு ஒருத்தியை காண சகிக்காமல், குமுறி, குமுறி அழுதபடியே தூங்கி விடுகிராள். அடுத்த நாள் காலை, Fabiana பல் துலக்குவதற்க்காக, வாஸ்பேசினின் கண்ணாடியை பார்த்தபடி, நின்று கொண்டு இருக்கிறாள். அவளை பார்த்தவுடன், தன் கோபத்தை எல்லாம் கேவலமான வார்த்தைகளால், ரகசிய அறையில் இருந்த குழாய் வழியாக கத்துகிராள், பெலென். ஏதோ சத்தம் கேட்டவளாய்,Fabiana, வாஸ்பேசின் குழாய் அருகே, தன் காதை வைத்து கேட்டு விட்டு, ஏதாவது பிரமையாய் இருக்கும் என்று நினைத்து விட்டு, சென்று விடுகிராள். இதே போல் ஒருமுறை, குழாய் வழியாக சத்தம் கேட்டு, பயந்து போய், குளியளறையை விட்டு வெளியேரும் Fabiana, விழுந்து அடித்து ஓடி வந்த நாயை பார்த்து அதிர்ச்சியடைகிராள். தான் குளியல் தொட்டியில், குளித்து கொண்டிருந்த போது,எழுந்த நீர் அலைகள், அடிக்கடி வாஸ்பேசின் குழாய் வழியாக வரும் சத்தங்கள், படுக்கையறை முகம் பார்க்கும் கண்ணாடியின் முன்னயே, படுத்து கிடக்கும் வளர்ப்பு நாய், இவை யனைத்தும், அவளுக்குள், சிறிது கிலியை கிளப்பி விடுகிரது. Adrianனிடம், பயந்துபோய் அவள் சொல்ல, அவன் அவளை பார்த்து சிரித்து விட்டு செல்கிரான்.                                                                    the_hidden_face_review

Fabiana ஏதேச்சையாக, படுக்கையறையில் தொலைந்து போன, சாவியை கண்டெடுக்கிறாள். அதை மாலை போல அணிந்து கொள்கிராள். அதை கவனித்த பெலென், சாவி Fabiana கையில் கிடைத்த மகிழ்சிசியில் துள்ளி குதிக்கிறாள்! அவள் அது எதனுடைய சாவி, என்று அறிந்து கொள்ள முயலுவாளா, என்று ஆர்வத்துடன் கவனித்த பெலெனுக்கு, ஏமாற்றமே மிஞ்சுகிரது! கரண்ட் திடுதிப்பென்று, போய் விடுவதால், Fabiana, அந்த அறையை விட்டு வெளியே போய் விடுகிராள்.                                                vlcsnap-2013-07-11-15h47m01s27

அடுத்த நாள், Adrianனுக்கு, லோக்கல் போலீஸிடம் இருந்து, ஒரு போன் கால் வருகிரது. ஒரு பெண்ணுடைய பிணம் கிடைத்து இருகிரது எனவும், அது, அவனுடைய முன்னால் காதலி பெலென் உடையதா, என்று பார்த்து சொல்வதற்க்காக வர சொல்கிரார்கள். இதை கேட்ட, Fabianaவுக்கு, சிரிப்பி அள்ளி கொண்டு வருகிரது, ஆட்ரியன் தனக்கே, தனக்கு என்ற எண்ணம், அவளை குதூகூலம் அடைய செய்கிரது. அட்ரியன் வெளியில் சென்றவுடன், தோட்டத்துக்கு செல்லும் Fabiana, அங்குள்ள நீர் நிறைந்த குட்டையில், கல்லை தூக்கி போட்டு விளையாடுகிராள். அப்பொழுது, அந்த குட்டையில் எழும்பிய நீர் அலைகள், அவளுக்குள் இருந்த துப்பறியும் மனதை தட்டி எழுப்புகிரது. vlcsnap-2013-07-11-15h49m11s47

நேராக குளியலறை சென்றவள், வாஸ்பேசினில் கட கட வென்று, தண்ணீரை நிரப்பி விட்டு, முகம் பார்க்கும், கண்ணாடியை நோக்கி, ஆரம்பி என்று கத்துகிராள். இதை கொஞ்சமும், எதிர் பார்க்காத பெலென், மிகுந்த உற்சாகத்துடன், உருட்டு கட்டையை எடுத்து, தண்ணீர் செல்லும் பைப்பை தட்டு தட்டென்று தட்டுகிராள். நீர் அலைகள் வாஸ்பேசினுள் திரண்டு திரண்டு வருகிரது. Fabiana நிறுத்து, என்று சொன்னவுடன், நீர் அலைகள் நின்று போகிரது. இதை கண்டு விக்கித்து போகும் Fabiana, Adrian இது உன்னுடைய வேலையா, இப்படியெல்லாம் செய்து, என்னை பயமுறுத்தாதே என்று அலறுகிராள். நீர் அலைகள் எதுவும் இப்போ ஆடவில்லை. பின்பு சிறிது, தைரியம் கொண்டு, நீ பெலெனா என்று கேட்கிராள். நீர் அலைகளை எழுப்பி, ஆம் என்று பதில் அளிக்கிராள் Belen. நீ இறந்து போய் விட்டாயா?? ஆட்ரியன் உன்னை அடைத்து வைத்து இருக்கிரானா?? போன்ற கேள்விகளுக்கு, அமைதி காத்த பெலென், நீ இந்த முகம் பார்க்கும் கண்ணாடியின் பின்னால் மாட்டி கொண்டு இருக்கிராயா?? என்ற கேள்விக்கு, மிகுந்த உற்சாகத்துடன் நீர் அலைகளை எழுப்புகிராள் பெலென்… Fabiana, உடனே, அந்த ரகசிய அறையுடைய கதவை, தாழ்ப்பாளை தேடுகிராள். படுக்கையறையில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடியின், பக்கத்தில் உள்ள புத்தக அலமாரியில், உள்ள புத்தகங்களை எல்லா தள்ளிய போது, அந்த ரகசிய அறையின் தாழ்ப்பாள் கண்ணில் படுகிரது. தன் கழுத்தில் மாலையாய் தொங்கி கொண்டிருக்கும், சாவியின் நினைவு வரவே, அதை எடுத்து திறக்க முற்படுகிராள்.                                                                                                                                                                                 .vlcsnap-2013-07-11-15h50m49s2

பெலென், இந்த ரகசிய அறையில் இருந்து வெளியே செல்ல போகிரோம் என்று மகிழ்ச்சியின் உச்சத்துக்கே செல்கிராள். தீடிரென்று, என்ன நினைத்தாளோ, Fabiana, தன் முயற்சியை, கை விட்டு விடுகிராள். எங்கே, பெலென் வெளியே வந்து விட்டால், Adrian தன் கை நழுவி போய் விடுவானோ என்ற பயமோ, என்னவோ.. சரியாக அந்த நிமிடம், Adrianனும் வந்து சேர்கிரான். என்னவாயிற்று என்று அக்கறையுடன் விசாரிக்கும், Fabiana, பெலென் பற்றி ஏதாவது தகவல் கிடைத்ததா என்று வினவுகிராள். அதை கேட்ட மாத்திரத்தில், முகம் சுழிக்கும், Adrian, பெலென் என்பவள், இனி தன் வாழ்வில் இல்லை, இனி எல்லாமே நீ தான் என, Fabianவை கட்டி கொள்கிரான். அவனை கட்டி கொண்டவாரே, Fabiana முகம் பார்க்கும் கண்ணாடியை முறைத்து பார்க்கிறாள். கோபம், அதிர்ச்சி, ஏமாற்றம் எல்லாம் ஒன்று சேர, கொதித்து போகிராள் பெலென்!!                                                                                                                                                       vlcsnap-2013-07-11-15h52m55s244

அன்றே, Fabiana, தங்கள் படுக்கையறையை, வேற அறைக்கு மாற்றுகிறாள். அன்று இரவு வீடு வந்து சேரூம் Adrian, திடுதிப்பென்று, அறை மாற்றம் செய்தது கண்டு, முதன் முறையாக அவளிடம் கோப முகம் காட்டுகிரான். அடுத்த நாள், Adrian வேலைக்கு சென்று விட, Fabianaவை உயிருக்கு உயிராய் காதலித்த, அந்த போலிஸ்காரன், ஒரு கவரை Fabianaவிடம் கொடுத்து, Adrianனிடம் எச்சரிக்கையாகவும், இருக்குமாறு,அவளுக்கு புத்திமதி கூறி விட்டு செல்கிரான். அந்த கவரின் உள்ளே, Adrianனும், வயலின் வாசிப்பாளர் Veronicaவும், தனிமையில், நெருக்கமாக இருக்கும் புகைபடங்கள் இருக்கின்றன. அதை பார்த்து வெறுத்து போகும் Fabiana, பெலெனை காப்பாற்ற முடிவு செய்கிராள். சாவியை எடுத்து கொண்டு ரகசிய அறையை திறக்கிறாள். அந்த அறை மிக மோசமானதாக, வீச்சம் அடித்து கொண்டு இருந்தது. உள்ளே தூங்கி கொண்டிருக்கும் பெலெனை, மெதுவாக தட்டி எழுப்புகிராள் Fabiana. திடுக்கிட்டு முழிக்கும் பெலென், Fabianaவை அருகில் பார்த்தவுடன், இருக்கிர கோபத்தில், எரிச்சலில், தன் கையில் வைத்திருந்த ஆயுதத்தால், அவள் தலையில் ஒரு போடு போடுகிராள். மயங்கி சரிகிறாள் Fabiana.                                                                                                                           vlcsnap-2013-07-11-15h57m30s171

அவசர அவசரமாய், சாவியை எடுத்து கொண்டு, ரகசிய அறையில் இருந்து வெளியில் வந்து, ரகசிய அறையை சாத்தி விடுகிராள். Adrianனுடன் ஏற்பட்ட காதல் கசந்து போன நிலையில், அவன் கண்ணில் பட பிடிக்காமல் தன் வழியே செல்கிராள் Belen. போவதற்க்கு முன்னால், தான் Adrianனுடன், முதன் முதல் சேர்ந்து எடுத்த புகைபடத்தை கண்ணாடியில் ஒட்டி விட்டு சென்று விடுகிறாள். ஆட்ரியன், வேலை முடிந்து, வீட்டுக்கு வருபவன், Fabianaவை காணாமல் திகைக்கிரான். Fabiana, நினைவு தெளிந்தவளாய், ரகசிய அறையின் உள்ளே செய்வதரியாமல், கதவை தட்டி கொண்டு நிற்கிறாள்!!!!!!!!!!!!!                                                                                             vlcsnap-2013-07-11-15h59m38s177

 

 

 

முற்றும்..

 

 

 

 

 

Advertisements

13 thoughts on “ஒளிந்திருந்த முகம்- 3

 1. Oh! …பயமாக உள்ளது. கதை. சில இடத்தில் எழுத்துப் பிழை உள்ளது. மற்றும் படி ஓ. கே
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

 2. அப்பாடி! ‘திக் திக்’ என்று இருதயம் துடிக்க வாசித்து முடித்தேன். பாவம் இப்போது Fabiana மாட்டிக் கொண்டு விட்டாளே!

  படங்கள் எங்கு கிடைத்தன? கூகிள் உபயமா?

  நீங்கள் மிக சிறந்த ‘கதை சொல்லி!’ இந்தத் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். ரொம்ப பேருக்கு இந்தத் திறமை இருக்காது.

  • பொறுமையாக, இந்த பதிவை வாசித்தமைக்கு மிக்க நன்றி அம்மா!! கூகுளில் சிறிது படங்கள் கிடைத்தன , மற்றவை vlc media player உதவியால்!!! உங்களுக்கு என்றென்றும் என்னுடைய நன்றிகள்!

 3. Maha , didn’t know that you had so many talents within u.. keep going!! – Meenatchi

 4. இரண்டு படங்களின் முடிவுகள் கிட்டத்தட்ட ஒன்றுதான். இத்தனை நாட்கள் அறையில் மாட்டிக்கொண்டிருந்த பெண் வெளியில் வந்து தன் கணவன் வேறு ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படங்கள் பார்த்து வெறுத்துப் போகிறாள். ரகசிய அறை சாவியை போலீசுக்கு அனுப்பிவிட்டு வெளியூர் போகிறாள் என்று ஹிந்தி படம் முடிகிறது.
  ரொம்பவும் சுவாரஸ்யமாக பார்த்தேன். உங்களுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். கதை முதலிலேயே தெரிந்துவிட்டதால் ஹிந்தி படத்தை ரசிக்க முடிந்தது.

  • நான் இந்த மூன்று ‘ஒளிந்திருந்த முகம்’ பதிவுகளை எதற்காக விழுந்து விழுந்து பதிவு செய்தோம் என்று நினைத்திருக்கிரேன் அம்மா!! இன்று அந்த குறை காணாமல் போய் விட்டது.. உங்கள் விமர்சனத்துக்கு நன்றி அம்மா 🙂

 5. படம் நல்லாத்தான் இருக்கும் போல, ஆனா நீங்க நல்ல எழுதியிருகீங்க அக்கா! 🙂 எனக்கு இந்த முடிவுதான் புடிக்கல.. அனேகமா இந்த படத்த பார்ப்பேனா என்பது சந்தேகமே! 😦

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s