எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

சிரிக்கலாம் வாங்க-3

2 பின்னூட்டங்கள்

படம்

கிலோவுக்கு, 
நூற்றி நாற்பது ரூபாய் கொடுத்தும் , 
வாங்கி வந்த சின்ன வெங்காயத்தை,

கண்ணீர் சிந்தாமல் வெட்ட முடியவில்லை….— feeling sad  in Guntur.

 

 

30 நாளில் தெலுங்கு,
புத்தகத்தை, படித்து முடித்த தைரியத்தில்,
அயன் பண்ண குடுத்த துணிகளை வாங்க சென்ற நான்,
சுந்தர தெலுங்கில் ‘அயன் ஆகி போயிந்தா!’ என்று சொல்லி கூட முடிக்கவில்லை,
என் தவ புதல்வன்,’என்னம்மா bad words பேசறீங்க ‘ என்று உருளாத குறையாய் சிரிக்க,
அவன் வாயை பொத்தி வீடு வந்து சேர்வதற்குள்,எனக்கு போதும், போதும் என்று ஆகி போச்சு!!! — feeling annoyed in Guntur.

 

என் பையனோட ஆர்வ கோளாறுக்கு,
ஒரு அளவே இல்லாம போச்சு! 
மார்க்கெட்டில்,அவன் பார்வைக்கு,
புதுசா எது பட்டாலும், 
வாங்கி உபயோகப்படுத்தி பார்த்து விட துடிப்பான்.. 
நேத்திக்கு கூட இப்படிதான்,
Garlic Paste டை , எடுத்து வந்தவன்,
‘இதையும் சேர்த்து பில் போட்டுடுங்க,
எப்படித்தான் இருக்குனு Brush பண்ணி பார்க்கணும்!!!!!!!!!!!! — feeling irritated in Guntur.

Childrens Hospital, வீட்டுக்கு பக்கமா எங்க இருக்குன்னு 
கூகுளில் தேடி கண்டு பிடிச்சாச்சு! 
முகவரியில் தெளிவாக குறிப்பிட்டு இருந்தார்கள்,
‘Near Bose Bomma Centre ‘
இதி எக்கட?? நு கேட்டு , நாலு பேர் கை காட்டிய வழியில்,
சத்தியமா எந்த பொம்ம கடையும் இல்லை..
தேடிய Hospital எங்க பார்வைக்குள் வந்த அடுத்த நொடி,
Mr.Bose தென்பட்டார்……..
.
.
.
.

நடுநாயகமாய் வீற்றிருந்தார் சிலையாய்!!! — at Kothapet, Guntur.

 

2 thoughts on “சிரிக்கலாம் வாங்க-3

 1. so, புது ஊரு குண்டூரா? சீக்கிரம் பழகி விடும். கவலைப்பட வேண்டாம்.
  அப்படி இப்படின்னு செட்டில் ஆகிட்டீங்களா?

  Bad word … Garlic பேஸ்ட்…நல்ல ஜோக்ஸ்!

  இங்கு மருத்துவ மனையை (clinic) டாக்டர் ஷாப் என்பார்கள். இங்கு வந்த புதிதில் பட்ட அவஸ்தையை நான் கூட எழுதி இருக்கிறேன்.

  தெலுங்கு நன்றாகக் கற்றுக் கொண்டு தெலுங்கில் ஒரு ப்ளாக் ஆரம்பிக்க வாழ்த்துகள்!

 2. ஓரளவு செட் ஆயிடுச்சு அம்மா! என் கடைக்குட்டி பையனுக்கு மட்டும் ஸ்கூல் செட் ஆகணும்! ப்ளாக் எழுத சில நிமிடங்களை ஓதுக்க முயற்சித்து கொண்டிருக்கிறேன்!
  தெலுங்கும் கற்று கொண்டிருக்கிறேன் 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s