எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

சிரிக்கலாம் வாங்க -2

6 பின்னூட்டங்கள்

படம்

எவ்வளவு மருந்து உட்கொண்டாலும்,
side effect கிடையாது,
மருந்து கசப்பு துளி கூட தெரியாது,
எல்லா வித பிரச்சனைக்கும் சுலபமான தீர்வு, என்று,
மூச்சுக்கு முந்நூறு தடவை,
கோமதி டாக்டர், புகழ் பாடும், 
பூக்கார அக்காவின் புகழாரங்களாள்,
‘யாரந்த, MULTI SPECIALITY DOCTOR’,
என்று,வியந்த எனக்கு,
போர்டை பார்க்கும் வரை,
சத்தியமாக புரியவில்லை,
அது கோமதி டாக்டர் அல்ல, 
 ஹோமியோபதி டாக்டர் என்று!!!

 

எண்ணெய் விக்கிர விலைக்கு,
இப்போதெல்லாம்,
குழம்பு செய்யும் போது ,
சமையல் குறிப்பில்,
சொன்னபடி,
எண்ணெய் தெளிய விட்டு,
எல்லாம் இறக்குவதில்லை,
பேருக்கு,சிறிது எண்ணெய் தெளிப்பதோடு சரி!!!

 

தீராத தொண்டை வலிக்கு இதமாக,
ஒரு கப் சூடான காபி குடிக்க எண்ணி,
பாலை சுட வைத்து,
ஒரு கரண்டி காபி தூளும்,
சர்க்கரையும் இட்டு,
பின்பு, காபி தூள், அதிகமான காரணத்தினால்,
சிறிது பால் சேர்த்து, 
கசப்பு சுவையை குறைக்க,
சிறிது சர்க்கரை சேர்த்து,
இப்படி மாத்தி, மாத்தி, ஒவ்வொன்றாக,
கூட்டி, பின்பு குறைத்து,
ஒரு டம்ளர் காபி, இரண்டாக ஆகி,
அடுத்த நாள் காலை,
பித்தம் தலைக்கேறி,
தலை கிறுகிறுத்தது தான் மிச்சம்!!
இதுக்குதான், அப்ப அப்ப,
BRU இரண்டு ரூபாய் சஷே வாங்கி,
எனக்கு ரொம்ப பிடித்த காபியை,

எந்த அளவுக்கு நல்லா போட தெரியும்னு,

  அப்பப்ப டெஸ்ட் பண்ணி இருக்கனும்!! 
எப்பவாது, காபி போட்டா இப்படித்தான்!!!

 

6 thoughts on “சிரிக்கலாம் வாங்க -2

  1. நகைச்சுவை திலகமே!

    ஹோமியோபதி டாக்டர் கோமதி டாக்டர் ஆன விதம் சூப்பர்!

    எண்ணெய் விக்கிற விலைக்கு நீங்கள் செய்வதுதான் சரி.

    எப்பவாவதுதான் காப்பி சாப்பிடுவீர்களா? தினமும் டீயா?

    எங்க ஊர்ல பை-டூ! ஒரு டம்ப்ளர் காப்பியை இரண்டு பேர் பகிர்ந்துக்குவாங்க!

    எங்களுக்கெல்லாம் காப்பியில் தான் பொழுதே விடியும்.

    இப்ப பதினைந்து நாளா பெண் வீட்டில் – நோ காபி, ஒன்லி டீ!

    சிரிக்க சீக்கிரம் மறுபடி வருகிறோம்.

    • வாங்க அம்மா! இவை எல்லாம், என் மனதில் உதிக்கும் போது, என் முக புத்தகத்தில்,நான் இடும், என் status updates 🙂 அதை அப்படியே தொகுத்து பதிவுகளாக இடுகிறேன்! இதை படித்து, ஓரிருவர் வாய் விட்டு சிரித்தால், அதை விட சந்தோஷம் வேறு என்ன அம்மா! காபி என் favourite drink! ஆனால் காபி குடித்தால் பித்தம் ஏறி விடும்! அதனால் என்றைக்காவது ஆசைக்கு காபி, மற்ற நேரங்களில் டீ 🙂 கண்டிப்பாக சீக்கிரமே சிரிக்க வாங்க அம்மா:)

  2. ”..ஹோமியோபதி டாக்டர் கோமதி டாக்டர் ஆன விதம் சூப்பர்!…”’
    சகோதரி ஒரே சிரிப்பத் தான்….
    நல்லாயிருக்கு…
    பாராட்டுகள்.
    வேதா. இலங்காதிலகம்.

கோவை கவி -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி