எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

சிரிக்கலாம் வாங்க -1

8 பின்னூட்டங்கள்

laughing

என் கையால் குட்டு வாங்கியும்,
கழுத்து நெறிக்கப்பட்டும்,
தன் ஓயாத அழுகையை,
ஓரளவு நிறுத்தும்,
எங்கள் வீட்டு குழாய்க்கு,
நேற்று சாப விமோசனம் கிடைக்கப்பெற்று,
புது உருவெடுத்தது!
முதல் வேலையாய்,
என் முகத்தில்,
பளார் என்று அறைந்தது,
தண்ணீரால்!

பையனுக்கு பெரிய டவுட்,
அம்மா asteroid ஏன் earthகுள்ள வந்து டொம்முனு விழுந்துச்சு??
‘நாளைக்கு சொல்லட்டுமா!’ அப்படீன்னு Bounvita Ad ல வர்ற அம்மா மாதிரி,
நான் நைசா எஸ்கேப் ஆக,
அவனும் விடாமல் தொடர்ந்தான்,
ஒரு வேளை Battery தீர்ந்து இருக்குமோ??

!!!!!!!!!

கடைகாரர் பாக்கி சில்லறை கொடுக்க மனதில்லாது தள்ளிய MELODY சாக்லேட்டை , ஆசையாய் பிரித்து, வாயில் போட்டு, ஒரு நொடி இமை மூடி,
‘Melody Kyon Ithnaa Chocolatee?? ‘
என அதன் சுவையை அறிய முயன்ற நான் ,
ஒரு நொடி , வழிநடை பாதையில், ஆங்காங்கே கிடந்த பசுவின் சாணங்களை,
அறிய முயன்றிருக்கலாம்!!
YUCK!!!!!!!!!!

‘அட பாவி மனுசா!’ ,
இப்படி எந்த ஒய்ப் தான் ஷாக் ஆகி கத்தாம இருப்பாங்க,
ஒவ்வொரு தடவை , ஹஸ்பண்ட் மொபைலுக்கு கால் பண்ணும் போது எல்லாம், இப்படி ரெக்கொர்டெட் வாய்சு கேட்டா,
‘நீங்கள் தொடர்பு கொள்ள நினைக்கும் வாடிக்கையாளர், தற்சமயம், வேறொரு இணைப்பில் பிசியாக இருப்பதால், சிறிது நேரம் கழித்து தொடர்பு கொள்ளவும்’

Advertisements

8 thoughts on “சிரிக்கலாம் வாங்க -1

 1. வணக்கம்
  நகைச்சுவை அருமையாக உள்ளது பார்த்தவுடன் எனக்கே சிரிப்பு வந்து விட்டது, வாழ்த்துக்கள் சகோதரி
  -நன்றி-
  -அனபுடன்-
  -ரூபன்-

 2. திடீர்னு மறைந்து போய் மறுபடி நல்ல நகைச்சுவையுடன் re-entry கொடுத்திருக்கும் மஹா , வருக வருக!

  உங்களுக்கும், நான் ஸ்டிக் உப்புமா பண்ணி உங்களைக் cover செய்யும் உங்கள் துணைவருக்கும், asteroid பற்றிக் கேள்வி கேட்டு உங்களை முழிக்க வைக்கும் குறும்புப் பையனுக்கும், இன்னொரு குழந்தைக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

 3. மிகவும் நன்றி அம்மா, உங்களுக்கும், உங்கள் அழகான குடும்பத்துக்கும். எனது புத்தாண்டு
  நல்வாழ்த்துக்கள் 🙂

 4. சிரிப்பு பற்றியும் எழுதியிருந்தேன் ஓர ,ஆக்கம்.என்ன ரெம்ப நாளாகச் சத்தமே இல்லையே அல்லது நான்தான் இய்கு வரவில்லையோ! எது எப்படியாயினும் சிரிப்புத்தான் ஆக்கம் தந்தது. இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

 5. வணக்கம் சகோதரி! ஏப்ரல்,மே,என் குட்டி பசங்களுக்கு லீவு விட்டாச்சூ, என் கணவருக்கு வேலை,வேறு மாநிலத்துக்கு transfer ஆகி விட்டபடியால், வீட்டில் packing வேலை,அது, இதுவென்று, ஒரே பிசி! சீக்கிரமே, active ஆக இருக்க முயற்சி செய்கிறேன்! நன்றி!

 6. என் முகத்தில்,
  பளார் என்று அறைந்தது,
  தண்ணீரால்!

  Aha!…ha!….
  Vetha.Elangathilakam.

 7. இப்போதைய என் பரபரப்பான கோடை விடுமுறையில் , அப்பப்ப, wordpress தளத்துக்கு வருகை தரும் எனக்கு, உங்கள் பின்னூட்டங்கள்,கோடை மழை போல் மனதுக்கு இதமளிக்கிறது! தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோதரி 😀

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s