எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

என்னை இன்னொரு முறை திருமணம் செய்துகொள்வாயா!!!

16 பின்னூட்டங்கள்

படம்

இப்படியொரு கேள்வியை யாரு கேப்பா எனது அருமை கணவரை தவிர! அதுவும், இரவு 11 மணிக்கு, நான் பாதி தூக்கத்துக்கு சென்ற பிறகு, எழுப்பி கேட்டார், ‘WILL U MARRY ME FOR THE SECOND TIME?’ இப்படி பாதி தூக்கத்தில் எழுப்பி கேட்டால், என்ன சொல்ல, மனதில் இருப்பதை தவிர! கொஞ்சம் கூட யோசிக்காமல் சொன்னேன்,’ அய்யயோ, முடியவே முடியாது, சான்சே இல்லை, மாட்டவே மாட்டேன், நடக்கவே நடக்காது, இப்படி எல்லாம் புலம்பி விட்டு, போர்வையை இழுத்து பொத்தி கொண்டு, ஆழ்ந்த உறக்கத்துக்கு சென்றே விட்டேன்! அய்யோ பாவம் அவர், இப்படி ஒரு பதிலை, என்னிடம் எதிர்ப்பார்த்திருக்கவே மாட்டார் !!

காலையில் எழுந்த போது தான் கவனித்தேன், பேப்பரும் கையுமாய்,சிறிது முகத்தை தூக்கி வைத்து கொண்டு உட்கார்ந்திருந்தார்! சூடான,தேனீருடன், அவர் அருகில் சென்று அமர்ந்தேன்! நேற்று எதற்காக,அப்படி ஒரு கேள்வியை கேட்டீர்கள்,என்று சிரித்து கொண்டே கேட்டேன்! அவரும் மெல்ல வாயை திறந்தார், போன வாரம் ஒரு கறுத்தரங்கில், ஒருவர் பேசினார், ‘ யார் வேண்டுமானாலும், உங்கள் மனைவியிடம் கேட்டு பாருங்கள், ‘இன்னொரு முறை கடந்த காலத்துக்கு செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தால், சென்று,என்னையே மீண்டும் வாழ்க்கை துணையாக தேர்வு செய்து, திருமணம் செய்து கொள்வாயா??’ என்று, எந்த ஒரு மனைவியும், ‘கண்டிப்பாக உங்களை தான் திருமணம் செய்து கொள்வேன்’ என்று கூற மாட்டாள், என்று கூறினார்! என் கணவர் மிகுந்த மன வருத்ததோடு குறிப்பிட்டார்,’நீயும் இப்படி சொல்லுவனு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல!!’

இப்பவும் நான் அடித்து கூறினேன், கண்டிப்பா மாட்டவே மாட்டேன்! திருமணம் முடிந்து, இது ஒன்பதாவது வருடம் நடந்து கொண்டிருக்கிறது! பெற்றோர் பார்த்து நடத்தி வைத்த திருமணம்! எதிரும் புதிரும், எலியும் பூனையும், தென் துருவம் வட துருவம், இப்படி சொல்லி கொண்டே போகலாம், எங்கள் இருவரையும்!! மிக சிறந்த பக்திமான் அவர்! நானோ, கடவுள் பக்தி கிடையாதுனு சொல்ல முடியாது, ஒவராக கிடையாது!
அதுவே, அவருக்கு ஆரம்பத்தில் பெரிய ஷாக் தான்! போக, போக புரிந்தும் கொண்டார்! எனக்கு பேசாமல், இருக்கவே முடியாது, அவரோ அமைதியின் சின்னம்! எனக்கு பிடித்த எதுவுமே அவருக்கு புடிக்காது! ஆரம்ப காலங்களில், என் சமையல் எதுவுமே அவருக்கு புடிக்காது! அவருக்கு,என்ன புடிக்கும், என்ன புடிக்காது, எது அவருக்கு ஒத்து கொள்ளும்,எது ஒத்து கொள்ளாது, இப்படி ஒவ்வொரு விஷயமும், அவருடன் பழகி பார்த்து தான் அறிந்து கொள்ள முடிந்தது! ஆரம்பத்தில், சண்டை கோழியாய் இருந்த நாங்கள், அந்த சண்டைகளையே எங்களுக்கு சாதகமாய் ஆக்கிக் கொண்டோம்! ஒருவரை ஒருவர், நன்கு புரிந்து கொண்டோம்! கிட்டதட்ட, ஒவ்வொரு நாளும்,ஏதாவது ஒன்று புதிதாய் ஒருத்தரை ஒருத்தர் அறிந்து கொள்கிறோம், ஏதாவது ஒரு விதத்தில்! அனாவசிய சண்டைகள் குறைந்து, அன்பு கூடி கொண்டே செல்கிறது, வருடங்கள் செல்ல செல்ல! இது தான் காதலோ??

இப்போ சொல்கிறேன், நான் ஏன், என் கணவரிடம், ‘முடியவே முடியாது, மாட்டவே மாட்டேனு’சொன்னேன் என்று , இவ்வளவு வருட காலம், ஒருத்தரை, ஒருத்தர் புரிந்து, அவருக்காக நானும், எனக்காக அவரும், நிறையவே மாறி இருக்கிறோம், மாறியது கூட அறியாமல்! இவ்ளோ தூரம் வந்தாச்சு, இப்போ போய், திருப்பி முதலில் இருந்து, யாராவது ஆரம்பிப்பார்களா!! என்னங்க நான் சொல்லுரது ரைட்டு தான!!!!!!!

Advertisements

16 thoughts on “என்னை இன்னொரு முறை திருமணம் செய்துகொள்வாயா!!!

 1. hahaha lovely reply maha. loved reading it.. and many of the things you have said mirrors in my life too… mine is arranged marriage too… had lots of indifferences when we started our life.. as you’ve mentioned like north pole and south pole. But by the laws of science, north pole attracts south pole 😉 we learnt from our indifferences, understood each other and now leading a successful marriage with love 🙂 Thanks for this post.. btw I enjoy ur writing a lot. keep up the work..

 2. சகோதரி! மகளே! வாசித்தவுடன் ஓடிப் போய் என் கணவரைக்கேட்டென் ” வில் யு மறி அமி எகெயின்?..”
  அகர் ஓர காதல் சிரிப்புச் சிரித்து ” ஆம்….ஏன் கேட்கிறாய்?” என்று சிரித்தார் விடயத்தைக் கூறினேன். பிறகு இல்லையென்றார் அது தானே உள்ளதைக் கூற வேண்டும் என்றேன். நல்ல பதிவுடா!.
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

 3. மிக்க நன்றி அம்மா! மனதில் உள்ளதை, அப்படியே கூறி விட்டால், என்றுமே யாருக்கும் பிரச்சனை என்பது இல்லை!

 4. மஹா! மிகப் பெரிய கேள்வி ஒன்றைக் கேட்டுவிட்டீர்கள் கடைசியில்!
  அருமை அருமை!
  ஒரு தேர்ந்த எழுத்தாளரைப் போல எழுதியிருக்கிறீர்கள்! பாராட்டுக்களோ பாராட்டுக்கள்!

 5. வணக்கம்
  சகோதரி

  அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 6. ஸரியாக சொல்லிவிட்டாய். இன்னும் ஒருவரை யொருவர் தெறிந்து கொள்வதிலும்,புரிந்து கொளவதிலும், காதல் கொள்வதுமாக இருக்கும் போது அடுத்ததைப் பற்றி என்ன யோசனை.? இப்படியே இனிமையாக இருப்பதை விட்டு
  அழகாக எழுதியிருக்கிராய். கற்பனையா? நிஜமாகவேவா. எப்படி இருந்தாலும் ஸரி.

 7. lol 🙂 it was different reading your write up ! “மறுபடியும் முதலேந்தா 😮 ” effect is there in your slang :p .. just kidding .. good one!

 8. கற்பனையோ நிஜமோ படிக்க நிஜமாகவே நன்றாக இருக்கிறது அடுத்த் பிறவியாவது சற்று மாற்றமாக நன்றாக இருக்கட்டுமே என்ற நப்பாசைதான் பாராட்டுக்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s