எப்போ இருந்து இந்த காதல் ஆரம்பிச்சிதுனு சரியா சொல்ல தெரியல!
இன்னிக்கு நேத்துனு இல்ல, ரொம்ப வருஷமா தீராத காதலா வளர்ந்து கிட்டேதான் இருக்கு!
இன்னிக்கு வரைக்கும், கொஞ்சம் கூட அந்த காதல் குறையவே இல்ல!
ஆனா யார்கிட்டையும் சொன்னதே இல்ல, ஏன்னா சொன்னா அது காதலே இல்லயே!
சரி இப்போவாது யாருனு சொல்லி தொலைனு சொல்லுரீங்களா
, இருங்க, இருங்க எல்லாம் நம்ம ஊரு ஸ்வீட் மேலதான்! அதாங்க, இந்த நெய், பால், அது இதுனு போட்டு செஞ்சு குடுப்பாங்கலே அதே தான்!
நமக்கு எவ்ளோ பிரச்சனை இருந்தாலும், ஒரே ஒரு ஸ்வீட் அ வாயில போட்டு, கண்ண மூடிட்டு, அந்த சில நிமிடங்கள, உலகை மறந்து ரசியுங்க!
நம்ம மனச அமைதி படுத்த இத விட ஒரு ஈசி, டேஸ்டி வழி இருக்கா என்ன!
ஆனா நான் ஒரு தடவை கூட, ஸ்வீட் பிரியைனு பகிரங்கமா அறிவிச்சதே இல்லை!
எப்போ ஸ்வீட் பத்தி பேசுனாலும், அது எனக்கு சுத்தமா பிடிக்காத மாதிரியே தான் பேசுவேன்!
ஸ்வீட் எல்லாம் ரொம்ப சாப்பிடாதீங்க, உங்க வாயை கொஞ்சம் கன்ட் ரோல் பண்ணுங்கனு கூசாம மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ணுவேன்!
எல்லா அட்வைஸும் ஸ்வீட் கண்ணுல படாத வரைக்கும் தான்! ஸ்வீட் வீட்டுக்குள்ள வந்துரிச்சுனா, என்னால, என் வாயையோ, என் கையையோ, சத்தியமா கன்ட் ரோல் பண்ணவே முடியாது!
போகிர வழி, வர்ர வழினு, ஸ்வீட் ட கடந்து போகும் போதெல்லாம், ஒன்ன எடுத்து வாயில போடாம இருந்ததே இல்ல!
ம ன சு ஒரு பக்கம், வெய்ட் கெய்ன் பத்தி அலெர்ட் பண்ணாலும், இன்னொரு பக்க மனசு, யார் பேச்சையும் கேக்காது!!
ஒவ்வொரு ஸ்வீட் ட வாயில போடும் போதும், நானே எனக்குள்ள சொல்லிப்பேன், ‘இன்னிக்கு ஸ்வீட் சாப்பிடுர கோட்டா முடிச்சதுனு…
குடிகாரன் பேச்சாவது, விடிஞ்ச்சாதான் போச்சு, என் பேச்சு, ஒரு மணி நேரத்திலேயே போச்சு!!!
ஒரே ஸ்வீட் டா இருந்தா கூட பரவாயில்லை, ஒன்னு இல்ல ரெண்டு, இல்ல மிஞ்சி போனா மூனு சாபிட்டா போர் அடிச்சிடும்!
இந்த assorted ஸ்வீட் இருக்கு பாருங்க அது கொடுமை, இது கொஞ்சம், அது கொஞ்சம்னு மனச அலைய வெச்சிடும்!
எல்லாம் சாப்பிடுர வறைக்கும் நல்லாதான் இருக்கும், எப்பவாது, ஸ்வீட்ட சாப்பிட்டு பிரச்சனை ஆச்சு, ஸ்வீட் மேல கோவம் பயங்கரமா வந்துடும்!
அத வாங்கி குடுத்தவங்க மேல அத விட பயங்கரமா வந்துடும்!!!
ஒவ்வொரு தடவையும், தீபாவளி முடிந்து, திகட்ட, திகட்ட ஸ்வீட்ட காலி செஞ்ச பிறகு, தவறாம, என் கணவர் கிட்ட சொல்வேன், இந்த ஸ்வீடட பாத்தாலே எரிச்சல் எரிச்சலா வருது, இனிமே, ரெண்டு வருஷத்துக்கு, இந்த ஸ்வீட் பக்கம் தலை வெச்சி கூட படுக்க மாட்டேனு சத்தியம் பண்ணுவேன்!!
ஆன என்ன பண்ண, எவ்ளோதான் ஸ்வீட்ட வீட்ட விட்டு தள்ளி வெச்சாலும், கடவுளுக்கே பொறுக்காது!!
திருப்பதி இல் இருந்து, பெருமாளே பார்த்து, அப்போ, அப்போ, யார்கிட்டையாவது லட்டு குடுத்து அனுப்பிச்சுடுவார்! செஞ்ச சத்தியத்த எல்லாம், மறந்து, இது சாமி பிரசாதம் நு சொல்லி சாப்பிட வேண்டியதுதான்!!!
6:52 முப இல் ஜனவரி 30, 2013
ஸ்வீட் மேல இருக்கும் காதலுக்கு என்னமா ஒரு பில்ட்-அப்? உங்க காதல் திருமணத்தைப் பற்றி சொல்ல போகிறீர்கள் என்று நினைத்தால்……………….!!!!!!!!!!! கர்ர்ர்ரர்ர்ர்ர்!
அச்சச்சோ! என்ன போலவே இருக்கீங்களே!
ஒவ்வொரு வருடமும் புது வருட உறுதி மொழி இதுதான். முதல் தேதி வாழ்த்துகிறேன் பேர்வழி என்று சுவீட்டுடன் வந்து நிற்பவர்களைப் பார்த்தாலே – ச்சே! நம்மளை இளைக்க விடாமல் சதி பண்றாங்களே என்று கோவம் வரும். அவங்க வாங்கிண்டு வரும் இனிப்பை சாப்பிட்டவுடன் கோவம் பறந்துடும் ….கூடவே உறுதி மொழியும்!
நல்ல நகைச்சுவையுடன் எழுதி இருக்கிறீர்கள் நம் பலவீனைத்தை!
பாராட்டுக்கள்!
4:30 முப இல் ஜனவரி 31, 2013
நன்றி அம்மா 🙂
11:14 முப இல் ஜனவரி 30, 2013
ஆஹா ஒரு அருமையான காதல் பதிவு போல் ஆரம்பித்து, அதன் பரிமாணத்தை இனிப்பு வகைகள் மேல் திசை திருப்பிய விதம் தித்திப்பு. அருமை
4:28 முப இல் ஜனவரி 31, 2013
உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!
9:42 பிப இல் பிப்ரவரி 15, 2013
நன்றாக எழுதப் பழகி விட்டாயம்மா.
நல்ல இனிப்பாக இருந்தது. வாசிக்க . இதே பைத்தியம்தான் நானும் .
ஸ்…ச்சூ!..ஸ்!…….சத்தம் போடவேண்டாம் இது இரகசியம்…
இனிய வாழ்த்து…
வேதா. இலங்காதிலகம்.
4:33 முப இல் பிப்ரவரி 16, 2013
நீங்க நல்லா இருக்குதுன்னு சொன்னா, பெரிய அவார்ட் கிடைச்ச மாதிரி 😀
2:44 பிப இல் பிப்ரவரி 16, 2013
நான் இன்னிக்குதான் பார்த்தேன். பெருமாள் லட்டு கொடுத்தா வினியோ லட்டுமகம் பணணிடலாம். மத்தவா கொடுத்தா டேஸ்ட் பண்ணணும். லட்டு மாதிறி பதிவு கொடுத்திருக்கே1என்ன செய்யணும். கூட கொஞ்சம் காரத்தை கேட்டுவாங்கி சாப்பிடணும். நன்ராக இருக்கு.
4:45 முப இல் பிப்ரவரி 19, 2013
உங்களுடைய மனமார்ந்த பாராட்டுக்கு என்னுடைய பணிவான நன்றிகள்!
5:35 முப இல் ஓகஸ்ட் 23, 2013
ரொம்ப ஸ்வீட்டான பதிவு ஆனால் குடிகாரன் பேச்சு விடிந்தாலே போச்சு என்கிற மாதிரி இதென்ன இடை இடையில் சதய பிரமாணங்கள் நிறைய இனிப்புகல் சாப்பிட்டு வாழ்க்கையையும் இனிப்பாக்குங்கள் மகா
10:20 முப இல் ஓகஸ்ட் 23, 2013
கண்டிப்பாக மேடம், நிறைய இனிப்புகள் சாப்பிட்டு என் வாழ்க்கையை இனிப்பாக்கி கொள்கிரேன் 🙂 இனி இது போன்ற சதய பிராமணங்களை தவிர்க்க முயற்சி செய்கிரேன்!! ஆனால் மேடம் இன்னிக்கு என்னால் கண்டிப்பாக இனிப்பு எதுவும் சாப்பிட முடியாது.. உங்கள் பின்னூட்டங்களை படித்ததே இனிப்பு சாப்பிட்டது போல் தான் இருக்கிரது 😀