எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

வாங்க பீட்சா வை ருசிக்கலாம்

4 பின்னூட்டங்கள்

படம் சூடாக பரிமாறப்பட்ட சில நிமிடங்களிலேயே , நமக்கு ஆர்வ பசியை தூண்டி விடுகிறது இந்த பீட்சா! ஆங்ஆங்கே சிரிப்பு வெடிகளை வேறு சொருகி நம் வயிற்றை சிறிது பதம் பார்க்கிறார் அறிமுக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்! வெறும் டார்ச் லைட்டை மட்டும் பயன்படுத்தி இவ்வளவு பயமுருத்தமுடியுமா, ஆச்சரியம்தான்! இருட்டிலே நம் சொந்த வீட்டில் நடமாடுவதற்கே பயமாக இருக்கும், இதுல தெரியாத ஒரு வீட்டில், அதுவும் கரண்ட் இல்லாத நேரத்தில், யப்பப்பா திக் திக் நிமிடங்கள்!! ரொம்ப நாள் கழித்து ஒரு பயமுறுத்தும் திகில் படம், நாற்காலியோடு  ஒன்றி, கைகளால் அப்பப்ப கண்ணையும், வாயையும் பொத்தி பொத்தி ரசித்தேன்! இருட்டில் செல் போன்களும், லேன்ட்லைன் போன்களும் மாறி மாறி அலறி, என்னை உள்ளுக்குள் அலற வைத்து விட்டது! திரையில் போன் ரிங் அடித்த அதே நேரம் என் செல் போனும் அலறி , சிறிது என் வயற்றில் புளியை கரைத்து புளி குழம்பே வைத்து விட்டது! அந்த பேய் பங்களாவில் ஏன் அத்தனை மரபாச்சி பொம்மைகள், எல்லாம்  குச்சி கைகளை நீட்டி கொண்டு பயமுறுத்தியது ! ஒரு கட்டத்தில், கதையின் நாயகனுக்கு மன நிலை சரி இல்லையோ என்று நினைத்தால் , நமக்குதான் மனம் ஒரு நிலையில் இல்லை என்று சீக்கிரமே புரிய வைத்து விடுகிறார்கள்! ஒரு வழியாக பேய் கதையை முடித்து விட்டார்கள் என்று சீட்டில் சாய்ந்து உட்கார்ந்தால், படம் முடிய போகும் தருவாயில், நிஜமாகவே பேய் கதையை ஆரம்பிக்கிறார்கள்!!

4 thoughts on “வாங்க பீட்சா வை ருசிக்கலாம்

 1. வணக்கம்

  மிகவும் அருமையாக எழுதியுள்ளிர்கள் நல்ல கற்பனை வளம்,வாழ்த்துக்கள் தொடருங்கள் பதிவை,
  பயப்பிட முடியுமா?யாரு நம்ம தமிழர்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  • வணக்கம் திரு.ரூபன் அவர்களே! என்னுடைய பதிவை பொறுமையாக படித்தமைக்கு மிக்க நன்றி! உங்கள் பின்னூட்டம் என்னை மேலும் மேலும் புதிய பதிவுகளை செய்ய ஊக்கம் அளிக்கிறது!

 2. சென்ற வாரம்தான் இந்தப் படத்தை வீட்டிலேயே பார்த்தோம். முதலிலேயே பேய் படம், பயமாயிருக்கும்’ என்றெல்லாம் ரொம்பவும் build-up கொடுத்ததால், எதிர்பார்த்த அளவு பயமில்லாமல் போய்விட்டது.

  ஆனால் நன்றாக கதை பண்ணியிருக்கிறார்கள்; unexpected நிகழ்வுகள் சுவாரஸ்யமாக இருக்கின்றன.

  என் மாட்டுப்பெண் அதிகம் பயந்து போனாள். நான் ஜாலியாக பார்த்து ரசித்தேன்.
  நீங்கள் எழுதி இருப்பது போல கடைசியில் தான் பேய் கதை நிஜமாக ஆரம்பிக்கிறது.

  புது ஊர் பற்றிய பதிவு படித்தவள், இந்தப் படம் பற்றி நீங்கள் எழுதியிருப்பது நினைவுக்கு வர இங்கு வந்து படித்து பின்னூட்டமும் எழுத தூண்டியது.

 3. வாங்க அம்மா! குடும்பத்தினரோடு சேர்ந்து சில நிமிடங்கள் செலவழித்தால் நன்றாக தான் இருக்கும்! அதுவும் இந்த மாதிரி த்ரில்லர் படம் பார்த்தால், நன்றாக தான் இருக்கும்! எனக்கு அப்படி சேர்ந்து உட்கார்ந்து பார்க்க ரொம்ப ஆசை, ஏனோ நிறைவேரியதே இல்லை! அநேகமாக , எனக்கு மாட்டுப்பெண் வந்த பிறகு தான் சாத்தியமாகுமோ என்னவோ! உங்கள் பின்னூட்டம் பார்த்து மிக்க மகிழ்ச்சி 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s