ஒரு நாள் மாலை நேரம் பாலை காய்ச்சி கொண்டிருந்தேன், அழைப்பானின் ஒலி கேட்டது, கதவை திறந்தேன், பைய்யன் பள்ளியில் இருந்து வீடு திரும்பி இருந்தான். வீட்டுக்குள் வந்ததும் வராததுமாய் டிவியை ஆன் செய்தான். ஸ்டார் மூவீஸ் சேனலில் ‘தீப் ப்ளூ சீ ‘ படம் ஓடி கொண்டிருந்தது. மிகவும் பரபரப்பான கட்டம் , கடலுக்கு நடுவில் ஒரு ஆராய்ச்சி கூடம், சுறா மீன்களை வைத்து ஆராய்கிறார்கள் . தீடிரென்று சுறா மீன், கூடத்தில் ஆராய்ச்சி செய்யும் ஒருவரது கையை கபளீகரம் செய்து விடுகிறது. அவசர அவசரமாக கரையில் இருக்கும் பாதுகாப்பு நிலையத்துக்கு தகவல் அனுப்புகிறார்கள். உடனடியாக ஒரு ஹெலிகாப்டரும் விரைந்து வந்து சேர்கிறது. இடியும், மழையும், புயலும் ஹெலிகாப்டரை தரை இறங்க விடாமல் செய்கிறது . கை இழந்தவருக்கு சிறிது முதல் உதவி செய்து ஒரு படுக்கையில் சேர்த்து வைத்து கட்டி, ஹெலிகாப்டரில் இருந்து இறக்கி விடப்பட்ட இரும்பு கயிற்றோடு இணைத்து விடுகிறார்கள். அவர்களோட போதாத நேரமோ என்னவோ அடிபட்டவனோடு மேலே இழுக்கப்பட்ட கயிறு கோளாறு காரணமாக மேலே போவதற்கு பதிலாக, கீழே இறங்கியது. கையை இழந்தவர் தண்ணீருக்குள் விழுந்தார், விழுந்தவரை, சுறா மீன் இழுத்து கொண்டு போனது, அவரோடு சேர்த்து ஹெலிகாப்டரும் அசுர வேகத்தில் இழுத்து செல்லப்பட்டது, ஹெலிகாப்டர் நேராக சென்று அந்த ஆராய்ச்சி கூடத்தின் மேல் தளத்தில் இடித்து வெடித்து சிதறியது. நாலா பக்கமும் தீ கொழுந்து விட்டு எரிந்ததை என் கண் பயங்கரமாக காண்பித்தது. என் மூக்கும், நானும் ஒன்றும் சளைத்தவன் இல்லை என்று தன் பங்குக்கு எரியும் நாற்றத்தை நுகர்ந்து காட்டியது. எங்கள் வீட்டில் ஸ்மார்ட் டிவி எதுவும் இல்லையே, அய்யயோ டே அடுப்புல பாலுடா!
9:40 முப இல் நவம்பர் 9, 2012
படம் எப்படி முடிந்தது என்று சொல்லவில்லையே? அடுப்புல பாலுடா பாக்கப் போயிட்டீங்களோ?
10:06 முப இல் நவம்பர் 9, 2012
சுபமான முடிவுதான் அம்மா! நல்ல வேளை அம்மா அரை டம்ளர் பால்தான் பொங்கி இருந்தது! அதுவே மன வேதனையை உண்டாக்கி விடும் அல்லவா! அப்புறம் எங்க படத்தை பார்க்க, வேலையில் முழ்கி விட்டேன்! இன்னொரு முறை வேலைகள் எல்லாம் முடித்த நேரம், படத்தை காண்பித்தபோது முடிவை தெரிந்து கொண்டேன்!