எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று


3 பின்னூட்டங்கள்

வெட்டுவேனா! வெஜிடபிள் கட்டர்

               இரண்டாவது  தடவையாய்  , தீபாவளி  ஷாப்பிங்  செய்து  முடித்த  போது , எதிர்பாராத  விதமாய் , அந்த  கடையில்  ஒரு  அழகான  சாவியை  கொடுத்து , உங்க  கிப்டை  மறக்காம   வாங்கிட்டு  போங்கன்னு  சொன்னாங்க!  நாங்களும்  சாவியை  எடுத்து  கொண்டு  எங்க  அதிர்ஷ்டத்தை  செக்  செய்ய  ஒரு  விசித்திரமான  அறைக்குள்  சென்றோம் . அங்கே  ஒரு  பெட்டி  இருந்தது, அதில்  மூன்று  வகை  சாவியின்  அச்சு  இருந்தது , அதில்  எங்க சாவி  எதில்  சரியாக  பொருந்துது  என்று  வைத்து  பார்த்தார்கள். பொருத்தமான  அச்சில்  வைத்தவுடன், அங்கிருந்த  அத்தனை  பல்புகளும்  மினுக்  மினுக்  என்று  எரிந்து  எரிந்து  அணைந்தது! அதிர்ஷ்ட   எண்  ஒன்றின்  சாவியாம்! இந்த  பில்டப்புக்கு  எல்லாம்  ஒன்றும்  குறைச்சல்  இல்லை! அதன்  பின்  மூன்று  ஆப்ஷனில்  ஒன்றை  தேர்ந்து  எடுக்க  சொன்னார்கள் , ஒரு  கேவலமான  குந்தன்  செட்  , ஒரு  டல்லான  கலரில்  பீங்கான்  தட்டுகள் , ஒரு  கவர்ச்சியான  வெஜிடபிள்  கட்டர். இந்த  ஆப்ஷனில்  ஒன்றை  ஒரு  நிமிடத்துக்குள்   தேர்வு  செய்ய  வேண்டும்  என்று  கண்டிஷன்  வேறு! வெஜிடபிள்  கட்டர்  எதோ  கொஞ்சம்  பரவாயில்லை, எடுத்து  கொண்டு  வீடு  வந்து  சேர்ந்தோம். கதவை   திறந்த  மறு  நிமிடம், என்  பைய்யன்  ரொம்ப  ஆசையாய்  ஒரு  உருளை  கிழங்கை  எடுத்து  வந்து  அந்த  வெஜிடபிள்  கட்டரில்  கொடுக்கப்பட்டு  இருந்த  ஹோல்டரில்  சொருகினான். அந்த  ஹோல்டரில்  மொத்தமே  6 பற்கள் , உருளை  கிழங்கை  சொருகிய  மறு  நிமிடம்  2 பற்கள்  உடைந்து  ஹோல்டர்  ஈ  என்று  இளித்தது! அவனோ  சற்றும்  மனம்  தளராமல்  , அதில்  கொடுக்க  பட்டிருக்கும்  பிலேடு
 மேல்  உருளை  கிழங்கை  வைத்து  வெஜிடபிள்  கட்டரின்  தலையை  அழுத்தினான், கிட்டத்தட்ட  ஒன்றுமே  நடக்கவில்லை! நான் , என்  கணவர் , ஒவ்வொருத்தரும்  ஒவ்வொரு  விதமாய்  முயற்சி  செய்து  பார்த்தோம், நன்றாய்  கை  வலித்ததை  தவிர  ஒன்றும்  பிரமாதமாய்  நடந்து  விடவில்லை! அந்த  வெஜிடபிள்  கட்டரின்  அட்டை  படத்துக்கு  ஒன்றும்  குறைச்சல்  இல்லை, விதவிதமாய்  காய்கறிகளையும் , பழங்களையும்  அசால்ட்டாக  அறுத்து  காண்பித்து  இருந்தார்கள்! பைய்யன்  சொன்னான்  ‘ அம்மா   ஓடி  வந்து  ஒரு  குதி  குதித்து  அதன்  தலையை  அழுத்தி  பாருங்க , உருளை  கிழங்கு  கட்  ஆனாலும்  ஆகிவிடும் ‘ என்று  டிப்ஸ்  கொடுத்தான்  , போடா  என்று  சலிப்போடு  அந்த  வெஜிடபிள்  கட்டரை  ஒரு   ஓரமாக  ஒதுக்கி  வைத்தோம் , எங்கள்  கடை  குட்டி பைய்யன்  , ரொம்ப  ஆசையாய்  அதை  எடுத்து  பஸ்  ஓட்ட  ஆரம்பித்துவிட்டான் ! 799 ரூபாய்க்கு  நிஜமாவே  அழகான  பஸ்தான் !!!!!