தலைப்பை பார்த்து பயந்துவிட வேண்டாம், இது ஒன்றும் இந்த குழம்பை எப்படி வைப்பது என்று விளக்கும் உரை அல்ல! மீன் குழம்பு வைப்பது என்ன சீம வித்தையா, என் கடை குட்டி பையனை சமாளிப்பது தான் எனக்கு சீம வித்தை! அதுவும் விடுமுறை நாட்களில் கேட்கவே வேண்டாம், என்னை ஒரு வழி பண்ணிடுவான்! எந்த வேலை வீட்டில் நடந்தாலும், நடக்காவிட்டாலும், சமையலை முடித்துதானே ஆக வேண்டும்! அவனை சமாளிபதட்காகவே சமயலறையில் சிலவற்றை வைத்திருப்பதுண்டு! அவற்றில் முதன்மையானது அல்பன்லீபே லாலிபாப்! அதை கையில் கொடுத்தால் ஒரு அரைமணி நேரம் சில வேலைகளை முடித்து விடலாம்! சில நேரங்களில், அந்த லாலிபாப் அவன் கைகளை விட்டு நழுவி கீழே விழுந்து உடைந்து இரண்டாக பிளந்து விடும்! வீல் என்ற சப்தத்துடன் பைய்யன் ஓடி வருவான், ‘அம்மா இதை ஒட்டி தாருங்கள்’!!! ஒருவாறு அவனுடைய அழுகையை நிறுத்தி, அவனை சமாளிபதட்காகவே வைத்திருக்கும் இரண்டாவது யுத்தியான கல்கண்டை தருவேன், அதுவும் ஒரு கிண்ணம் நிறைய! கல்கண்டை பார்த்து மயங்காத பிள்ளைகளும் உண்டா என்ன! ஒரு ஸ்பூனையும் , இன்னொரு கிண்ணத்தையும் எடுத்து கொண்டு விளையாட ஆரம்பித்து விடுவான்! நானும் அந்த நேரத்தில் ஒருவாறு மீன் குழம்பை வைத்து முடித்து, சாப்பாடு மேசையில் கொண்டு போய் வைத்தேன்! அவன் கல்கண்டை ஒரு கிண்ணத்தில் இருந்து இன்னொரு கிண்ணத்துக்கு மாற்றி, ஸ்பூனால் கிண்டியும் விளையாடி கொண்டிருந்தான்! அப்பஅப்ப அம்மா அம்மா என்று அழைத்து கொண்டே இருப்பான், நானும் ஒவ்வொரு தடவையும் என்னம்மா என்று பதில் கூறினால் தான் திருப்தி அடைவான்! ஒருவாறு வேலையை கிட்டதட்ட முடித்து விட்டு , சிதறி கிடக்கும் கல்கண்டை அள்ள சென்றேன்! எப்பொழுதும் சிதறிய கல்கண்டுகள் பாதத்தை பதம் பார்க்கும் , ஆனால் வழக்கத்துக்கு மாறாக ஒன்று இரண்டை தவிர , கல்கண்டுகள் தட்டு படவே இல்லை! பைய்யன் சாப்பிட்டு விட்டான் போல! பிறகு அவனை சாப்பிட வைத்து தூங்கவும் வைத்தேன். வெளியே சென்றிருந்த என் கணவரும், வீடு வந்து சேர்ந்தார்! நான் அவருக்கு சாப்பாட்டை பரிமாறி விட்டு பக்கத்தில் அமர்ந்தேன்! என்னை ஒரு முறை முறைத்தவாரே சாப்பிட்டு முடித்தார்! எனக்கு ஒரு பழக்கம், எப்போ எதை சமைத்தாலும் , நன்றாக இருக்கிறதா என்று டேஸ்டு பார்க்கவே மாட்டேன், அவ்வளவு நம்பிக்கை , நான் செய்யும் சமையலின் மேல்! இன்னிக்கு என்ன ஆச்சு, என்று நினைத்தவாறே சாப்பிட அமர்ந்தேன், ஒரு வாய் சோற்றை வாயில் வைத்தவுடன் தான் புரிந்தது, பைய்யன் தன் கைவரிசையை காட்டி இருந்தான், மீன் புளிகுழம்பு கல்கண்டு புளிகுழம்பு ஆக மாறி இருந்தது!!!!!!!!!
5:49 முப இல் ஜனவரி 31, 2015
ஐயயோ ஹஹா. ஆனா இந்த மீன் புளிக்குழம்பு எப்படி செய்யிறது என்று நிச்சயம் ஒரு பதிவு போடுங்க அக்கா ப்ளீஸ் 🙂
1:33 பிப இல் ஜனவரி 31, 2015
மீன் புளி குழம்பு ரொம்ப சுலபமா செய்யக்கூடியது! ஒரு எலுமிச்சை(பெரிய ) அளவு புளியை தண்ணீரில் நனைய போடணும். சிறிது நேரம் கழித்து , புளி தண்ணீரை மட்டும் வடி கட்டி எடுத்துக்க வேண்டும். சக்கை தேவை இல்லை. பின் அந்த புளி தண்ணீரில் , ஐந்து கரண்டி நல்லெண்ணெய் , வெட்டிய சின்ன வெங்காயம் ஒரு 15 போடவும் . பின் நன்கு கழுவிய மீன் துண்டுகளை அதில் போடவும். பின் உப்பு , மஞ்சள் தூள் மற்றும் அரைத்த மசாலாவை அதில் போடவும். இதை நன்கு கொதிக்க விட்டு , எண்ணெய் தெளியும் தருவாயில் இறக்கி விடவும்.
மசாலாவிற்கு , சீரகம் ஒரு கைப்பிடி அளவு , கொத்தமல்லி விதை ஒரு கைப்பிடி அளவு , மிளகாய் வற்றல் எண்ணிக்கை காரத்திற்கு ஏற்ப , இவை மூன்றையும் வாணலியில் வெறுமனே போட்டு , தீயில் சற்றே வெதுப்பி(வதக்கி) , பின் ஆற விட்டு , மிக்சியில் நன்றாக அரைத்து கொள்ளவும். நான் சொன்னது நாலு துண்டு மீன் அளவுக்கு. நிறைய மீன் துண்டுகள் இருப்பின் அதற்கு தக்கன அளவை மாற்றி கொள்ளவும். கிரேவியாக இருக்க வேண்டும் என்றால் வெங்காயம் நிறைய சேர்க்க வேண்டும்! எனக்கு மிக பிடித்த குழம்பு இது 🙂
1:39 பிப இல் ஜனவரி 31, 2015
எல்லாம் சரி ஆனா எலுமிச்சைய தண்ணில கரைக்கிறதா?? என்னக்கா குழப்புறீங்க!! நீங்க பழப்புளி அதாவது புளிய மரத்தில் இருந்து எடுக்குற புளிய சொல்லுறீங்களா??
4:33 முப இல் பிப்ரவரி 2, 2015
Yes Saravana 🙂
1:42 பிப இல் ஜனவரி 31, 2015
என்ன இருந்தாலும் இந்த புளிக் குழம்பை நினைக்கும் போது எனக்கு பசி வருதே! எதாவது செய்து சாப்பிட்டு விட்டு வாறன் ஹிஹி